Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பாக அவுஸ்திரேலியா – சிறிலங்கா கூட்டுச் சதி

Featured Replies

அவுஸ்திரேலியாவுக்கு உயிராபத்து நிறைந்த கடற் பயணம் செய்து அகதி அந்தஸ்துக் கோரிய ஈழத் தமிழ் அகதிகள் புதியதொரு நெருக்கடியை எதிர்கொள்கின்றனார். முன்பு அவர்களுக்கு அவுஸ் அரசு மாத்திரம் எதிரியாக இருந்தது. இப்போது இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கூட்டணி அமைத்து தமிழீழ அகதிகளுக்கு மிகப் பெரும் ஆபத்தை உருவாக்குகின்றன.

இருபக்கத் தகவல்களின் படி பின்வரும் செய்தி அரங்கிற்கு வந்துள்ளது.

இலங்கை அரசு தமிழர்களைத் திரட்டி படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குத் தனது முகவர்கள் மூலம் அனுப்புகிறது. கடந்த சில வாரங்களாக பெரும் எண்ணிக்கையில் தமிழீழ அகதிகள் அவுஸ்திரேலியாவில் கரை சேர்ந்ததற்கு இது தான் காரணம்.

தமிழர்களை இப்படிப் பயணம் செய்ய ஊக்குவித்த அதே அரசு “எங்கள் நாட்டு அகதிகளை எங்கள் நாட்டிற்குத் திருப்பி அனுப்புங்கள்” என்று அவுஸ்திரேலியாவுக்கு மனுச் செய்துள்ளது. ஏஎப்பி செய்திச் சேவை வெளியிட்ட தலைப்புச் செய்தி பின்வருமாறு “Sri lanka: Send Refugees Back to us”

இதில் தான் கூட்டுச் சதியின் கருப் பொருள் இருக்கிறது. ஆனால் அவுஸ் அரசும் இலங்கையும் ஒரு இரகசிய உடன்படிக்கைக்கு வந்துள்ளன. இயன்றளவு கூடுதல் எண்ணிக்கையில் உங்கள் நாட்டுத் தமிழர்களை எங்களிடம் அனுப்புங்கள். நாங்கள் ஏற்கனவே வந்து சேர்ந்தவர்களையும் சேர்த்து அனைவரையும் இலங்கைக்கு அனுப்பிவிடுகிறோம். இது அவுஸ்திரேலியா இலங்கைக்கு கொடுத்த வாக்குறுதி.

இதற்கு அமைவாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. சென்ற வருடம் அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பி அங்கு அடைத்து வைக்கும் திட்டத்தை அமலாக்க யோசித்த யூலியா கிலாட் அரசு கடும் தோல்வி அடைந்தது. மலேசியா ஜநாவின் 1951ம் ஆண்டு அகதிகள் உடன்படிக்கையோ அதற்கான 1967ம் ஆண்டுத் திருத்தத்தையோ அங்கீகரிக்காத நாடு.

மலேசியாவுக்குப் பெருந் தொகை பணத்தைக் கொடுத்து அகதிகளை ஏற்றுக் கொள்ளச் செய்யும் திட்டம் தோல்வி கண்ட பிறகு பிரதமர் யூலியா கிலாட்டும் அவருடைய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிரவுணும் இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

இதில் குறிப்பிட்டது போல் அவுஸ் அரசு உலகிற்கு சொல்லப் போகும் செய்தி இப்படித் தான் இருக்கும். வகை தொகையாக இலங்கை அகதிகள் வருவதால் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இலங்கை அரசு தனது நாட்டுக் குடிமக்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகி உள்ளது. அனுப்பும்படி இலங்கை கேட்டதற்கு இணங்க நாங்கள் அனைவரையும் அனுப்புகிறோம்.

இது உலக நாடுகளைத் திருப்திப் படுத்தப் போதுமானது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற எதிர் கட்சியையும் இது நிட்சயம் திருப்திப் படுத்தும். இலங்கைக்கான ஜப்பான் அரசின் விசேட தூதர் யசூசி அக்காசி அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். இலங்கையில் இயல்பு நிலை திரும்பி விட்டது என்று அவர் பயணத்தை முடித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவுஸ் – இலங்கை கூட்டுச் சதிக்கு ஜப்பான் நாட்டுப் பங்களிப்பு என்று இந்த அறிக்கையைக் கருதலாம். சிறிலங்காவின் கடற் படை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக “அகதிகளை எங்களிடம் அனுப்புக” என்று கோரிக்கை விடத் தொடங்கியுள்ளனர். படகு மனிதர்களை கடத்துவோரைத் தண்டிப்பதற்கு இது தான் ஓரே வழி என்று அவர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா கடற்படை நடவடிக்கை இயக்குநர் கொமடோர் என்.அட்டியகல (Sri Lanka Naval Operations Director Commodore N.Attyagalle) மற்றும் கடற்படை உளவுத்துறைத் தலைவர் நிஷன்தா உலுகெத்தென்னே. (Sri lanka Navy Intelligence Chief Nishanta Ulugetnne) ஆகியோர் கூட்டாக அவுஸ் பத்திரிகைக்கு (Weekend Australian) வழங்கிய நேர்காணலில் திருப்பி அனுப்புவது தான் ஓரே வழி என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேற்கூறிய கடற்படை அதிகாரி அட்டியகல அகதிகளையும் அவர்கள் பயணிக்கும் படகுகளையும் எதிர் கட்சியினர் கூறுவது போல் நடுக்கடலில் இழுத்துக் கொண்டு போய் விடும் யோசனைக்கு ஆதரவு வழங்க மறுத்துள்ளனர். இந்த யோசனை பெரும் சர்வதேச மனிதநேயப் பிரச்சினையாக அகதிகள் பிரச்சினையை மாற்றிவிடும் என்று இந்த இலங்கை கடற்படை அதிகாரி கூறுகிறார்.

குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிரவுணுக்காகப் பேசவல்ல அவுஸ் அதிகாரி “எங்கள் விசாரணைகளில் நிராகரிக்கப்படுவோரை நாங்கள் வழமையாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புகிறோம். நாங்கள் அகதிப் பிரச்சினையை இப்படித் தான் கையாள்கிறோம்” என்று சொன்னார்.

இது மிகவும் ஆபத்தான குடிவரவுத் திணைக்கள அறிக்கை. ஏற்கனவே இலங்கையிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரத்திற்கு தமிழர்கள் செய்த மனுக்கள் அனைத்தும் ஓட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிப்பதற்கு காரணம் கூறப்படவில்லை. சிங்களவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறக் கொழும்புத் தூதரகத்தில் செய்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. நிராகரிக்கப்படவில்லை.

தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் கிள்ளிக் கொண்டு என்று சொல்வார்கள். அகதிகளை ஆசைகாட்டி அனுப்பும் இலங்கை அரசு அதே அகதிகளைத் திருப்பி அனுப்பும்படி கேட்கிறது. இது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் விளையாட்டாக இருக்கலாம். ஆனால் இழப்புக்கள் ஈழத் தமிழர்கள் பக்கம் மாத்திரமே இருக்கிறது.

http://thaaitamil.com/?p=29826

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.