Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அழித்த பூமி தென்னிலங்கைக்கு உல்லாசபுரி, வருமான மையம்!

Featured Replies

முள்ளிவாய்க்கால் மண் குரூரமான யுத்தத்தின் சாட்சியாக, பூலோக நரகத்தின் நிதர்சனமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் தூர்ந்துபோன பதுங்குகுழிகளும், சிந்திக்கிடக்கும் பொருட்களும், துருப்பிடித்த வாகனங்களும், எச்சங்களாய் வீடுகளும், புதர் மண்டிய வீதிகளும், தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுமானால் பார்வைப் பொருளாகலாம். தமிழருக்கு அவ்வாறிருக்க முடியாது. மனங்களில் வெறுமையினையும், எங்கள் இனம் கண்ட அவலத்தையும் மட்டுமே அந்தக் காட்சிகள் எமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

கடந்த 30 வருடங்கள் இடம்பெற்ற விடுதலைப் போராட்டம் 2009ம் ஆண்டு இந்த மண்ணில்தான் மௌனித்துப்போனதாகச் சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரந்தன் – முல்லைத்தீவு வீதி திறக்கப்பட்டது. தற்போது இந்த வீதியால் மக்கள் சென்றுவர அனுமதிக்கப்படுகின்றது. அந்த வகையில்தான் எங்கள் பயணமும் அமைந்திருந்தது. உச்சக்கட்ட வேகத்தில் ஏ-35 வீதி கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பாதைகளின் புனரமைப்பை முன்னிறுத்திக் கொண்டு மக்களின் வாழ்க்கையை எடைபோடுவதற்குச் சிலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் அபிவிருத்திக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் வெகுது£ரம் என்பதை முள்ளிவாய்க்கால் காண்பிக்கின்றது. யுத்தத்தின் பின்னர் பல தடவை புதுக்குடியிருப்புக்குச் சென்றுவந்த அனுபவமிருக்கின்றது. இம்முறை புதுக்குடியிருப்பையும் தாண்டி பயணிக்க வேண்டியிருந்தது. புதுக்குடியிருப்பிலிருந்து இருபுறமும் யுத்தவடுக்களை தாராளமாகவே பார்க்க முடிகின்றது. இடையில் புலிகள் பயன்படுத்திய போர் கப்பல்களையும், ஆயுதங்களையும் ‘யுத்த அருங்காட்சியகம்’ என்ற ஒன்றை உருவாக்கி அதில் வைத்திருக்கின்றனர்.

சகல புறங்களிலும் இராணுவத்தினர் நிற்கின்றனர். வாகனங்களில் வந்திறங்கிக் கொண்டிருக்கும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இராணுவத்தினர் அவர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்தும் கிறவல் வீதியில் இருபுறமும் சிந்திக்கிடக்கும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இரட்டை வாய்க்கால் சந்தியை நாங்கள் அடைந்தோம். அங்கிருந்து மாத்தளன் வைத்தியசாலையை பார்த்து விட்டு மீண்டும் முள்ளிவாய்க்கால் செல்வதென்ற தீர்மானத்துடன், மாத்தளன் நோக்கிப் புறப்பட்டோம்.

வீதியின் ஓரத்தில் யுத்தகாலத்தில் அமைக்கப்பட்டிருந்த மண் அணை தூர்ந்துபோயிருக்கின்றது. அதுவே புலிகள் இராணுவத்திற்கெதிராக சண்டையிடுவதற்காக அமைத்துக் கொண்ட இறுதி மண் அணை என யுத்த காலத்தில் வாழ்ந்த ஒருவர் கூறிக்கொண்டார். அந்த அணைக்கட்டுக்குப் முன்னாலும், பின்னாலும் பெருமளவு வாகனங்கள் யுத்தத்தின்போது தாக்குதலுக்குள்ளான நிலையில் சிதைந்து போய் கிடந்தன.

ஆங்காங்கே இராணுவ முகாம்களும், காவலரண்களும் காணப்படுகின்றன. ஆனால் சோதனையிடப்படவோ, விசாரணைக்குட்படுத்தப்படவோயில்லை. எங்கு பார்த்தாலும் வாகனங்களையும், சட்டி, பானைகளையும், கதிரைகளையும், பிளாஸ்ரிக் பொருட்களையும், குண்டுகளின் வெற்று அடைப்பான்களுமே காணப்படுகின்றன. வீதியை விட்டு உள்ளே யாரும் இறங்கிச் செல்ல முடியாது, இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு மேல் கண்ணிவெடி அபாய எச்சரிக்கைகள் ஆங்காங்கே போடப்பட்டிருக்கின்றன. எங்கள் பயணம் எந்த தடையுமின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது. மாத்தளன் வைத்தியசாலை கண்ணில் படும் தூரத்திலிருக்கும்போது படையினர் வழி மறிக்கின்றனர். அதற்கு மேல் பயணிக்க முடியாது.

திரும்பிச் செல்லுங்கள் என கூறினர். வந்த வழியினாலேயே மீண்டும் பயணிக்கத் தொடங்கினோம். வீதியிலிருந்து உள்ளே ஊருக்குள் செல்லும் பக்க வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அல்லது அந்த வீதிகளின் தொடக்கத்தில் இராணுவத்தினர் நின்று அதற்குள் நுழைய வேண்டாம் என கூறுகின்றனர்.

அதேபோல் ஆங்காங்கே மோசமான தமிழில் ‘இந்தப் பகுதி இராணுவத்தினருக்குச் சொந்தமானது’ என்ற விளம்பரப் பலகைகளும் தொங்க விடப்பட்டிருக்கின்றன. தமிழர்கள் தங்கள் உயிரை, உறவுகளை, உடமைகளை இழந்த மண்ணை யார் யாரோ உரிமைகோருகிறார்கள். சொந்த மண்ணை பார்க்க கூட முடியாமல் முகாம்களிலும், இடைத்தங்கல் முகாம்களிலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, இங்கே அந்த மக்களின் மண்ணும், அவர்கள் சுமந்த அவலத்தின் வடுக்களும் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏ-35 வீதி பொதுமக்களின் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டாலும், தற்போதைக்கு அதனை அதிகம் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும்தான். வீதி திறக்கப்படுவதற்கு முன்னரும் கூட தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் இந்த வீதியால் சுதந்திரமாகச் சென்று யுத்த அழிவுகளை ரசித்துவிட்டுவர தாராளம் காட்டப்பட்டது. தமிழன் எங்கெல்லாம் அழிக்கப்பட்டானோ, தமிழன் எங்கெல்லாம் சீரழிந்து போனானோ அவையெல்லாம்தான் இன்று சுற்றுலாத்தலங்களாக மாறியிருக்கின்றன.

எங்கள் பயணம் முள்ளிவாய்க்கால் நோக்கி தொடர்ந்து கொண்டேயிருந்தது. இடையில் வீதியின் ஓரத்தில் பெருமளவு வாகனங்கள் போடப்பட்டிருக்கின்றன. எரிந்தும், தாக்குதலுக்குள்ளான நிலையிலும் அவை காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு இயந்திரங்கள் கிடையாது. யார் கொண்டு சென்றார்கள் என்பதற்கும் பதில் கிடையாது. இங்கு மட்டுமல்ல, முள்ளிவாய்காலில் சிதறிக்கிடக்கும் பெரும்பாலான வாகனங்களுக்கு இயந்திரங்களை காணவில்லை. அல்லது முக்கிய பாகங்களை காணவில்லை.

2009ம் ஆண்டு முள்ளிவாய்காலை விட்டு மக்கள் சென்றபோது உடுத்தியிருந்த உடையையும், காப்பாற்றி வைத்திருந்த காயம்பட்ட உயிரையும் தவிர வேறு எதுவும் அந்த மக்களிடம் இருக்கவில்லை என்பது உலகம் அறிந்த விடயம். அப்படியிருக்க கைவிடப்பட்ட மக்களுடைய சொத்துக்களுக்கு என்ன ஆயிற்று? காணாமல் போன சொந்தங்களின் நிலைதான் சொத்துக்களுக்கும். ஈடுசெய்ய முடியாதளவு ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த மண்ணில் தொலைத்து விட்டிருக்கும் மக்கள் ஒருபோதும், உடமைகளுக்காக பேசப்போவதில்லை.

ஆனால் இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் தேடுவாரற்று சிந்திக்கிடக்கும், பொருட்களும், வாகனங்களும் தமிழர்களுடைய உழைப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று அந்த வாகனங்களை வெட்டியும், அறுத்தும் இரும்புக்காக தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

அதற்கு தாம் அனுமதி பெற்றிருப்பதாகவும், பல இலட்சக்கணக்கில் பணம் செலுத்தியிருப்பதாகவும் நியாயங்களை கூறிக்கொண்டாலும் அது தமிழர்களுக்குச் சேரவேண்டிய சொத்து என்பதையும், அது தமிழர்களின் இரத்தம் என்பதையும் யாரும் மறந்தவிடக் கூடாது. இரும்புக்காக வெட்டி எடுத்துச் செல்லப்படுபவற்றில் பெரும்பாலானவை, துவிச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களுமே. அவை புலிகளுக்குச் சொந்தமானவை அல்ல. அப்பாவி ஏழை மக்களுக்குச் சொந்தமானவை. புலிகளுக்குச் சொந்தமானவையாகக் கூட இருந்தாலும் அவை மக்களுக்குரியவை. யாரும் தான்தோன்றித்தனமாக எடுத்து விற்பனை செய்யவும், விற்பனை செய்ய அனுமதி வழங்கவும் முடியாது என்பதே யதார்த்தம். பெருமெடுப்பில் வெளிப்படையாகவே நின்று சிலின்டர்களை பயன்படுத்தி இரும்புகளை அறுத்து எடுத்துச் செல்கின்றனர்.

இன்னும் சிலர் வாகனங்களில் வாகனங்களின் இயந்திரங்களையும், உதிரிப்பாகங்களையும் கொண்டு செல்கிறார்கள். மீள்குடியேற்றப்பட்ட மக்களுடைய காணிகளுக்குள் இரும்பு இருந்தால் வீதியில் கொண்டு வந்து போடுங்கள் என இராணுவம் மக்களிடம் கேட்கின்றது. ஒட்டு

மொத்தத்தில் இன்று முள்ளிவாய்க்கால் இரும்பு வர்த்தகர்களும், கொள்வனவாளர்களும் கூடும் சந்தையாகவே மாறியிருக்கின்றது.

ஒரே நாடு, ஒரே மக்கள் என்று கூறிக்கொண்டு, மறுபுறத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டிலிருந்து பொருட்களை சூறையாடுவதுபோன்று மக்களுடைய சொத்துக்களை சூறையாடிக் கொண்டிருக்கும்போது, இந்த நாட்டில் எப்படி இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும்? எப்படி இந்த அரசை மக்கள் நம்புவார்கள்? இரத்தமும், வியர்வையும் சிந்தி மக்கள் தேடிச் சேர்த்த சொத்துக்களை அந்த மக்கள் வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் கண்முன்னால் கபளீகரம் செய்வது உலகில் வேறு எங்கும் நடைபெறவில்லை.

தொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. வீதிகள் முழுவதும் அதே காட்சிகள். முள்ளிவாய்கால் பகுதி 2009ம் ஆண்டு யுத்தம் மெளினித்துப்போனதாக கூறப்பட்டது முதல் இன்றுவரை விடுவிக்கப்படாத பகுதியாகவே இருந்து வருகின்றது. இதற்கான காரணம் கண்ணிவெடிகள் அகற்றப்படாமை என கூறிக்கொண்டாலும். அந்தப் பகுதியில் கண்ணிவெடி அபாயம் கிடையாது என பொதுமக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தமாதம் முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் சுமார் 19 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிக்குச் சென்று மக்களோடு பேசினோம். மீள்குடியேறியுள்ள திருமதி.பு.கமலாம்பிகை கூறுகையில், ‘மீள்குடியேற்றம் செய்திருக்கின்றார்கள். வீட்டுவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைவசதிகள் எவையும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இருந்த வீடுகளும் யுத்தத்தால் பாதிக்கப்படாமலேயே உடைத்து அழிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது வீடுமில்லை, குடிதண்ணீரும் கிடையாது. மணல் வெளியில் கொண்டு வந்து குடியேற்றியிருக்கின்றனர். மீண்டும் முகாம் வாழ்வையே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுற்றி இராணுவத்தினர் நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய அடிப்படை வாழ்வாதாரத் தொழில் கடற்றொழில், ஆனால் கடலுக்குச் செல்லவோ, தொழிலில் ஈடுபடவோ அனுமதிக்கப்படவில்லை.

தொண்டு நிறுவனங்கள் எவையும் இதுவரை வந்து பார்க்கவில்லை, நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. வாழ்வாதாரம் மிகவும் மோசமாகவேயுள்ளது. எங்கள் பகுதிக்கெனவுள்ள முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ட உயர்தரப் பாடசாலை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. எங்கள் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர்.

மிகக்கூடியளவு நெருக்கடியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்’. என்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற அடிப்படை வசதிகள் கூட இந்த மக்களுக்கு நிறைவாக வழங்கப்படவில்லை. ஏனைய பிரதேச மக்களைப்போன்று அல்லாமல் மிகக்கூடியளவு பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மீள்குடியேற்றம் செய்து விட்டதாக பறைசாற்றிக் கொண்டதோடு எல்லாமே முடிந்துபோனது. அதற்கு மேல் எதையுமே செய்யாத நிலையில் மக்கள் முகாம்களிலிருந்து வெளியேறியும் முகாம் வாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதேபோல் இந்தப் பகுதியைச் சேர்ந்த 96 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கென அழைத்துவரப்பட்டு கோம்பாவில்-திம்பிலி என்ற இடத்தில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய மண்ணில் அவர்களை இன்னமும் மீள்குடியேற்றவில்லை. ஆனால் மாலை 5 மணிவரையில் சென்று பார்த்துவர அனுமதிக்கப்படுகின்றது.

மறுபுறத்தில் அந்த மக்களுடைய நிலத்திலுள்ள பெறுமதியான மரங்களும், வீடுகளிலுள்ள பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாய் அந்த மக்கள் கண்ணீர் சிந்தியபடி கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ‘உறவுகளை இழந்த பின்னரும், சொந்தமாய் ஒரு வாழ்விடமும், அதில் வாழும் நம்பிக்கையும் மட்டும்தான் எங்களிடம் மிச்சமாக இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் தராவிட்டாலும் பரவாயில்லை எங்கள் உறவுகள் வாழ்ந்த இடத்தில், எங்கள் உறவுகள் உயிர்துறந்த எங்கள் இடத்தில் எங்களை வாழ விடுங்கள்’ என கூறி தங்களின் இயலாமையினை அந்த மக்கள் எடுத்துக் காட்டினார்கள்.

வெறும் நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இன்று மீதமாயிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் மேற்கு மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு இறுதி யுத்ததில் எங்கள் மக்கள் கண்ட அவலங்களை எங்களோடு வந்தவர் பகிர்ந்து கொண்டே வர வட்டுவாகல் பாலம் கடந்து முல்லைத்தீவு நகருக்குள் சென்றோம்.

நன்றி : ஈழமுரசு

http://thaaitamil.com/?p=30035

  • கருத்துக்கள உறவுகள்

மறுபுறத்தில் அந்த மக்களுடைய நிலத்திலுள்ள பெறுமதியான மரங்களும், வீடுகளிலுள்ள பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாய் அந்த மக்கள் கண்ணீர் சிந்தியபடி கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ‘உறவுகளை இழந்த பின்னரும், சொந்தமாய் ஒரு வாழ்விடமும், அதில் வாழும் நம்பிக்கையும் மட்டும்தான் எங்களிடம் மிச்சமாக இருக்கின்றது. எங்களுக்கு எதுவும் தராவிட்டாலும் பரவாயில்லை எங்கள் உறவுகள் வாழ்ந்த இடத்தில், எங்கள் உறவுகள் உயிர்துறந்த எங்கள் இடத்தில் எங்களை வாழ விடுங்கள்’ என கூறி தங்களின் இயலாமையினை அந்த மக்கள் எடுத்துக் காட்டினார்கள்.

வெறும் நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இன்று மீதமாயிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் மேற்கு மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு இறுதி யுத்ததில் எங்கள் மக்கள் கண்ட அவலங்களை எங்களோடு வந்தவர் பகிர்ந்து கொண்டே வர வட்டுவாகல் பாலம் கடந்து முல்லைத்தீவு நகருக்குள் சென்றோம்.

நன்றி : ஈழமுரசு

http://thaaitamil.com/?p=30035

இணைப்புக்கு நன்றி.

இதுபோன்ற அவலங்களையாவது, ஒரு ஊடகவியலாளனின் ஆதாரமாக வைத்துக்கொண்டு இங்குள்ள அரசுகள், தமிழ் போரும் பொன்றன ஏதாவது செய்ய முடியாதா? எஞ்சியிருப்பவற்றையாவது எமது மக்களுக்கு கிடைக்க வகை செய்ய முயலக் கூடாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.