Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் ஐயாவிற்கு ஓர் பகிரங்க மடல் – மட்டக்களப்பில் தமிழின உணர்வாளர்கள்.

Featured Replies

மிகவும் மனவருத்தத்துடன் இம் மடலை எழுதுகிறோம் ஐயா. கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைப்பற்றி நீங்கள் அறிவீர்களா?

இவர்களில் எத்தனைபேர் தமிழ் அரசுக்கட்சி 14வது மகாநாட்டுக்கு வந்தவர்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பினை தோற்கடிப்பதற்கு உள்ளிருந்தே செயற்படுகின்ற சதியை நீங்கள் அறிவீர்களா?

குறிப்பாக தமிழரசிக் கட்சி வேட்பாளர்களை தெரிவுசெய்தது யார்? இவர்கள் 10 பேரில் எத்தனைபேர் உத்தமர்கள்? பிரசன்னாவும் தமிழரசிக்கட்சி வேட்பாளர் என்றுதான் பிரச்சாரம் செய்கிறார். அதனால்தான் 10 பேர் என்கின்றோம்.

களுதாவளை குணம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிலையில் போட்டியிட்டவர். தமிழ் தேசியத்தினை மிகவும் கீழ்த்தரமாக தூற்றியவர். இவரது ஈரம் காயமுன் தமிழரசிக்கட்சி வேட்பாளரா?

கல்லடி குருநாதன் யார்? பரம்பரை ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி. சிறிமாவையே தனது வீட்டுக்கழைத்து சாப்பாடு கொடுத்த குடும்பம். கனேசமூர்த்திக்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டவர். தேசியம் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கின்றவர்.

பழுகாமம் மகேந்திரன் அரை சித்தசுவாதீனமானவன். கடந்தமுறை வுஆஏP சார்பில் தேர்தலில் நின்று தோற்றவன். வுஆஏP கட்சியின் மத்திய குழு உறுப்பினர். அரசின் ஒற்றன். இவனுமா தமிழ் அரசிக்கட்சியில்?

யோகா என்பவர் கடந்த தேர்தலில் சூரியனில் கேட்டு கூட்டமைப்பை இல்லாது ஒழிப்பதாக சபதம் எடுத்து, வாக்குகளை பிரித்து பேரினத்தின் கைக்கூலியாக இருந்தவன்.

ஆரையம்பதி மகேந்திரலிங்கம், இவன் தனது முதல் மனைவியை கத்தியால் குத்தி துரத்தியவன். இரண்டாவது மனைவியை வெட்டி, எரித்து மறியலில் இருந்தவன். பைத்தியம் என்று போலி சான்றிதழ் கொடுத்து வெளியே வந்தவன். பைத்தியக்காரனுமா தங்கள் கட்சியில் போட்டியிடுகிறார்?

வாகரை வேட்பாளர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக சொல்லி எத்தனை பேரது வாழ்வை சீரழித்தவன். எத்தனை பேருக்கு இன்னும் காசு கொடுக்காமல் ஏமாற்றிதிரிகின்றவன். இவன் எல்லாம் உத்தமனா?

ஏனைய வேட்பாளர்களும் சளைத்தவர்கள் அல்ல. வெள்ளிமலை 5 வருடங்களில் 6 கட்சி மாறியவன். அதேபோல் ஜனா என்பவன் விடுதலை போராளிகள் 1200க்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்து தப்பியோடி, 20 வருடங்களுக்குபின் மக்களிடம் கொள்ளையடித்த காசை செலவு செய்வதற்கு என்றே வந்துள்ளவன். இதனால் மக்கள் அனைவருமே ‘கூட்டமைப்பு குப்பைகளின் கூடை’ என்று பேசிக்கொள்கின்றார்கள்.

உங்களது பிரதிநிதி பொன்னரின் (செல்வராஜா) சதி என்ன தெரியுமா? தற்போது வுஆஏP ல் வேட்பாளராக இருக்கும் செங்கலடி துரோகி மோகன் என்பவருடன் ஒருநாளைக்கு 5 அல்லது 6 தடவைகள் செல்வராஜா கதைப்பதேன்? கல்குடா தொகுதியை விட்டுத்தருவதற்காக மோகன் ஊடாக எவ்வளவு தள்ளினார்கள் தெரியுமா?எங்களுக்கு தெரியும்.

செல்வராஜா தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மட்டும் சென்று 5 தடவைகள் ஜனாதிபதியை சந்தித்து வந்ததன் மர்மம் என்ன? ஜனாதிபதியுடன் இரகசியசந்திப்புக்கு இவருக்கு என்ன வேலை? மட்டக்களப்பு வேட்பாளர்களை பார்த்தால் இவர் சந்தித்ததின் மர்மம் என்ன வென்று புரியும். அடிக்கடி மட்டக்களப்புக்கு வந்து இவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிட்டு செல்லும் மாவை அண்ணருக்கு இது தெரியாதா?

குறைந்த வாக்காளர்களைக்கொண்ட பட்டிருப்பு தொகுதிக்கு 7 வேட்பாளர்கள். கூடிய வாக்காளர்களையும் போட்டியையும் கொண்ட கல்குடா தொகுதிக்கு 3 வேட்பாளர்கள். அதுவும் போடு காய்கள். இப்போதே மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள் தெரியுமா?

பட்டிருப்பு தொகுதியில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எந்த இடைஞ்சலும் இருக்கக்கூடாது என்பதற்கு ஏற்ற வகையில், கட்சி எப்படி போனாலும் பரவாயில்லை. தான் வென்றால் போதும் என்ற சுயநலனை மட்டும் வைத்து காய் நகர்த்தலை தெரிந்தும் தெரியாதது போல் நீங்கள் இருக்கிறீர்களா?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் செல்வராஜாவிற்கு எதிராக வேலை செய்த நடராஜாவிற்கு டிக்கட் கொடுத்ததன் மர்மம் என்ன? கல்லாற்றில் அடுத்ததேர்தலில் போட்டி வரக்கூடாது என்பதற்குதான்.

பொன்னரின் அருவருடி, அறிக்கை மன்னன் அரியன், கல்விமான்கள், புத்திஜீவிகள்,சட்டத்தரணிகள் எல்லாம் வேட்பாளர்களாக போட்டி போடுகின்றார்கள் என்று அறிக்கை விட்டார். அவர்தான் பின்னர் வேட்பாளர்கள் எல்லாம் 24கரட் தங்கம் இல்லை. தங்கமுலாம் பூசிய பித்தலைகள் என்கின்றார்.இவருக்கும் தள்ளப்பட்ட தொகையில் அரைவாசி சென்றதாக எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள் ஐயா.

வேதனையாய் உள்ளது மட்டக்களப்பின் தலைவிதி இதுவா?

கழிபட்டதுகளை சேர்த்தால்தான் வாக்குகளை பிரிக்கமாட்டார்கள். நமக்கு பலம் என்று பிதற்றுகிறார்கள். அப்படி என்றால் இந்தவருடம் எமக்கு எதிராக 10 பேர் கேட்கிறார்கள் அடுத்தமுறை இந்த 10 பேரையும் வேட்பாளர்களாக உங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வீர்களா?

மட்டக்களப்பில் கட்சியை புதைகுழிக்குள் தள்ளிவிடாமல் இருப்பதற்காகத்தான் இம் மடலை எழுதுகின்றோம். மட்டக்களப்பில் கட்சி தோல்வி அடைந்ததன் பின்னராவது விழித்துக்கொள்ளுங்கள் ஐயா.

- என்றும் உண்மை விசுவாசிகள்.

http://thaaitamil.com/?p=30062

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.