Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவருக்கு ஒருவர் பழி தீர்த்துக் கொண்ட சரத் பொன்சேகா - அருண ஜெயதிலக

Featured Replies

sarath_aruna.jpg1984 நவம்பர் 30ம் திகதி மாலை 6.30 மணி. பலாலி இராணுவ முகாமில் இருந்து ஒரு பெல ரக ஹெலிகொப்டர் புறப்பட்டது. அப்போது பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்து முதலாவது சிங்க ரெஜிமென்டின் சி கம்பனிக்கு கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் சரத் பொன்சேகா.

அவருக்கு கீழ் பணியாற்றிய கப்டன் அருண ஜெயதிலக, லான்ஸ் கோப்ரல் குரே, கோப்ரல் ரத்நாயக்க ஆகியோரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்தக் ஹெலியை பிளைட் லெப்டினன்ட் அஜித் தாப்ரே செலுத்தினார்.

அது ஒரு கண்காணிப்பு பயணம்.

யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள கடலில், படகுகளில் விடுதலைப்புலிகள் வருகிறார்களா என்று கண்காணிக்க வேண்டியது அவர்களின் பணி.

அப்போதெல்லாம் இரவு நேரங்களில் ஹெலியிலிருந்து அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் பாய்ச்சப்பட்டு இந்தத் தேடுதல் நடத்தப்படும்.

அந்தக் ஹெலி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது மாலை 7.00 மணியளவில் இரண்டு படகுகளில் விடுதலைப்புலிகள் மாதகல் நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அவற்றைத் தாக்கி அழிக்கும்படியும் பலாலியிலிருந்து உத்தரவு வழங்கப்பட்டது.

கடும் மழைி பெய்துகொண்டிருந்தது. காற்றும் மோசமாக வீசியது. ஹெலியிருந்து அவர்களால் எதையுமே தெளிவாக பார்க்க முடியவில்லை.

அப்போது அந்தக் ஹெலி மண்டைதீவுக்கப்பால் யாழ். கடலேரிக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்தது. தாழிவாகப் பறந்துகொண்டிருந்த போது திடீரென அந்தக் ஹெலியில் வெடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்தவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது நேரம் இரவு 7.30 மணி.

ஆறு ஏழு அடி ஆழமுள்ள கடலேரி கோபரல் ரத்நாயக்க கப்டன் ஜெயதிலக பிளைட் லெப்டினன்ட் தாப்ரே ஆகியோர் ஹெலியின் சிதைவுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை லான்ஸ் கோப்ரல் குரே ஒருவாறு விடுவித்தார்.

ஆனால் பிளைட் லெப். தாப்ரே தாக்குப்பிடிக்க முடியாமல் கொஞ்சநேரத்தில் நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்பட்டார்.

ஏனைய மூவரும் உயிர் பிழைக்க ஹெலியின் மிதந்த பாகங்களைப் பிடித்தவாறு இருந்தனர்.

விபத்துக்குள்ளான ஹெலியைத் தேடிவந்த மற்றொரு ஹெலி இரண்டு முறை அவர்களுக்கு மேலாக வட்டமடித்து விட்டுப் போய்விட்டது.

இரவிரவாகக் கடும் குளிரில் விறைத்தபடியே கடலுக்குள் இருந்தனர் அவர்கள் மூவரும்.

மறுநாள் காலையிலும் மழையும் காற்றும் ஓயவில்லை.

காலை 9.00 மணியளவில் ஒரு வள்ளம் வந்தது. இவர்கள் சைகை காண்பித்தனர்.

ஆனால் அவர்களை ஏற்றாமலே சென்றுவிட்டது.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து மற்றொரு வள்ளம் வந்தது.

மீண்டும் சைகை காண்பித்தனர்.

அவர்கள் வந்து மூவரையும் மீட்டு நாவாந்துறையில் இருந்த வாடிக்கு கொண்டுசென்றனர்.

அங்கு அவர்களுக்கு சூடான பிட்டும் தேநீரும் கொடுத்தனர்.

அதன் பின்னர் பஸ்ஸை மறித்து அவர்களை ஏற்றிவிட்டனர்.

அப்போது தம்மைக் காப்பாற்றிய மீனவர்களிடம் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்துவிட்டுப் போனார் கப்டன் அருண ஜெயதிலக.

பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களைத் தேடி வந்துகொண்டிருந்த இராணுவ வாகனம் ஒன்றில் ஏறிக் குருநகர் இராணுவ முகாமைச் சென்றடைந்தனர்.

பின்னர் அவர்கள் ஹெலி ஒன்றில் சென்று தேடுதல் நடத்தி விமானியான பிளைட் லெப். தாப்ரேயின் உடலைக் கண்டுபிடித்தனர்.

28 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிய மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக கடந்த வாரம் புற்றுநோயால் மரணமானார்.

இலங்கை இராணுவத்தின் முக்கியமான அதிகாரிகளில் ஒருவராக அவர் இருந்து வந்தார்.

இறக்கும் போது அவர் இராணுவத் தொண்டர் படைகளின் தளபதி மற்றும் சிங்க ரெஜிமென்ட் தளபதி ஆகிய பதவிகளை வகித்திருந்தார்.

தனது 34 ஆண்டு கால இராணுவ வாழ்வில் அவர் சிங்க ரெஜிமென்டில் முதலாவது மற்றும் எட்டாவது பற்றாலியன்களின் கட்டளை அதிகாலி 22-4, 51 - 2 பிரிகேட்களின் தளபதி, கண்டி பிரதேச படைத் தளபதி இராணுவதத் தலைமையகத்தில் பயிற்சிப் பணிப்பாளர் காவற்படைப் பணிப்பாளர் யாழ். படைத் தலைமையகத்தில் தலைமையக அதிகாரிஜ கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு பிரதேசத்தின் தளபதி என பல்வேறு பதவிகளை வகித்திருந்தார்.

இந்தியா அமெரிக்கா பிரித்தானியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உயர் பயிற்சிகளைப் பெற்றிருந்தார்.

1978ல் இராணுவத்தில் இணைந்த மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக யாழ்ப்பாணத்திலேயே அதிக காலம் பணியாற்றினார்.

அவரது ஹெலி யாழ் கடனீரேரிக்குள் வீழ்ந்த போது அவரைக் காப்பாற்றுவதற்கான உச்சக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டவர் அப்போது மேஜராக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

சிங்க ரெஜிமென்டில் ஒன்றாகப் பணியாற்றிய இவர்கள் இராணுவத்தில் உயர்ந்த நிலைகளை எட்டியிருந்தனர்.

ஆனால் பிற்காலத்'தில் இவர்களுக்குள் நல்லுறவு இருக்கவில்லை.

சரத் பொன்சேகா இராணுவத் தளபதி பதவியை எட்டிப் பிடித்த போது பிரிகேடியராகவும் மேஜர் ஜெனரலாகவும் பதவி வகித்த அருண ஜெயதிலகவினால் அவருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் அவரை கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு பிரதேச தளபதி என்று எந்த முக்கியத்துவமோ பொறுப்போ இல்லாத அலங்காரப் பதவி ஒன்றை நியமித்தார்.

இது இருவருக்கும் இடையிலான கசப்புணர்வின் உச்சம் எனலாம்.

சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரையில் திறமையற்றவர்களுக்கு போர்முனையில் பொறுப்பு இல்லை என்பது அவரது கோட்பாடாக இருந்தது.

அது பல சமயங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நியாயப் படுத்துவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்'டது.

சரத் பொன்சேகா இராணுவத்தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் அவரது தாயப்படைப் பிரிவான சிங்க ரெஜிமென்ட் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

அப்போது சரத் பொன்சேகாவினால் ஓரங்கட்டப்பட்ட மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலகவிடம் அதைச் சமாளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்காக அவர் சிங்க ரெஜிமென்ட் தளபதியாக்கப்பட்டார்.

அவர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஒட்டிக்கொண்டார்.

சரத் பொன்சேகாவினால் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தபோது இலருக்கும் அது இயல்பாகவே கிடைத்தது.

பின்னர் இராணுவத் தொண்டர் படைகளின் தளபதி என்ற பதவியும் கிடைத்தது.

அது மட்டுமல்ல சரத் பொன்சேகாவை விசாரிக்கின்ற இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதியாகும் வாய்ப்பும் கிடைத்தது.

மேஜர் அருண ஜெயதிலக இடம்பெற்றிருந்த முதலாவது இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் விளைவாக அவர் ஜெனரல் பட்டத்தையும் கூடவே இழக்கும் நிலை உருவானது. ஒருவகையில் சொல்லப்போனால் சரத் பொன்சேகாவை தண்டிப்பதற்காக அருண ஜெயதிலகவுக்கு கிடைத்த வாய்ப்பு எனலாம்.

28 ஆண்டுகளுக்கு முன் நாவாந்துறை மீனவர்களால் காப்பாற்றப்பட்ட அருண ஜெயதிலகவை 54 வயதில் புற்றுநோய் தாக்கியபோது யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

இப்போது சரத் பொன்சேகாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஒரு ஆயுதத்தை அரசாங்கம் இழந்துள்ளது.

சரத் பொன்சேகா இப்போது முன்னரைப்போல வீரியம் கொண்ட ஒருவராக இல்லாது போனாலும் அவரால் ஓரங்கட்டப்பட்ட பல அதிகாரிகள் அவருக்கு எதிராக செயற்பட காத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சுபத்ரா

http://www.puthinamnews.com/?p=34625

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.