Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்தப் பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்: கல்முனை முஸ்லீம்களிடம் மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

President-mahinda-at-kalmunai-150seithykal.jpg

[size=4]நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதாக கதைவிடுகின்றனர். அதை நம்பவேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் தெரிவித்தார்.[/size]

[size=4]கிழக்கு மாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெ.ஜ.ஐ.மு. சார்பாக போட்டியிடும் பெஸ்டர் ஏ.எம். றியாசின் ஏற்பாட்டில் கல்முனை கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size]

[size=4]இங்கு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களான முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், ஏ.எம்.றியாஸ் உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.[/size]

[size=4]இக்கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும்போது...[/size]

[size=4]நான் இந்த நாட்டு மக்கள் அணைவருக்குமான ஜனாதிபதியாகும். முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, பௌத்தர் என்ற வேறுபாடு காட்டி நான் ஆட்சி செய்ய முடியாது. எல்லா மதங்களைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் நான் மதிப்பளிக்கின்றேன். நான் கூறுகின்றேன் எமது அமைச்சர்கள் இருக்கின்றார்கள் இந்த பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதென்று இந்தமேடையிலே இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் பௌஸி முதற்கொண்டு சகலரும் இருக்கின்றார்கள் இவர்கள் கூறினார்களா? இல்லை சிலர் என்னை உங்களிடமிருந்து துரப்படுத்துவதற்காக கூறிவருகின்றார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் வந்தால் அவ்வாறு நான் கூறவில்லை என்று கூறுவார்கள் இது என்ன நியாயம். எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம். நான் இந்த இடத்திலே கூறிவைக்க விரும்புகின்றேன்.[/size]

[size=4]மக்களுக்கு மத்தியில் விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மை மக்களின் எதிரிகளாக்குகின்ற விடயத்தை சிலர் செய்து வருகிறார்கள். இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். இனவாதம் பேசி என்ன பலம் அதுதான் அரசியல் இலாபம். அதற்காகவே இன்று இனவாதம் பேசித்திரிந்து மக்களுக்கு தோர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.[/size]

[size=4]மக்கள் என்றும் ஏமாளிகளாக வாழ மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன். ஏற்கனவே வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். அபிவிருத்திக்காக இப்பிரதேச மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும். இங்குள்ள விவசாயிகளுக்கு போதிய உரமானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு தேவைகளை நாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.[/size]

[size=4]இதற்கு மேலாக நாம் எல்லா மக்களையும் நிம்மதியாக வாழ வைத்திருக்கின்றோம் என்பதில் நான் நிம்மதிப் பெருமிதத்துடன் இருக்கின்றேன். மக்களின் அர்ப்பணிப்பாலும், நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை. சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துவத்துடன் வாழ்கின்றனர். நாம் அர்ப்பணிப்புடன் அரும்பாடுபட்டு வளர்த்த இன நம்பிக்கையையும், மத ஒற்றுமையையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. சில பிரிவினர் இந்த இன ஒற்றுமையை விரும்பவில்லை.[/size]

[size=4]அவர்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என இனங்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். எம்மால் அப்படிப் பிரிந்து நின்று செயற்பட முடியாது. இந்த நாட்டு மக்கள் கடந்த 30 வருடங் களாக பல துன்பங்களையும், கஸ்டங்களை யும் அனுபவித்து, எமது படைவீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தும் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சகல இன மக்களும் அமைதியுடன் வாழக்கூடிய சூழ்நிலையைக் கட்டியெழுப்புவது எமது பொறுப்பும் கடமையுமாகும்.[/size]

[size=4]நாம் அபிவிருத்தியில் மட்டுமன்றி அமைதியிலும் ஒற்றுமையிலும் நாட்டைக் கட்டியெழுப்பி வருகின்றோம். நாம் தேர்தலுக்காக அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது. அரசியல் செய்வதோடு, சகல பிரதேசங்களினதும் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்குமாக செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.[/size]

[size=4]அத்துடன், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இப்பிரதேசத்தின் குடிநீர்த்திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் எனப் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.[/size]

[size=4]இம்முறை கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையான வேட்பாளர்களை நாம் நிறுத்தியுள்ளோம். அவர்கள் தொடர்பான முழுப் பொறுப்பையும் எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கைவைத்து எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்த பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதாக கதைவிடுகின்றனர். அதை நம்பவேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் தெரிவித்தார்
....
நான் கூறுகின்றேன் எமது அமைச்சர்கள் இருக்கின்றார்கள் இந்த பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதென்றுஇந்தமேடையிலே இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் பௌஸி முதற்கொண்டு சகலரும் இருக்கின்றார்கள் இவர்கள் கூறினார்களா? இல்லை சிலர் என்னை உங்களிடமிருந்து துரப்படுத்துவதற்காக கூறிவருகின்றார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் வந்தால் அவ்வாறு நான் கூறவில்லை என்று கூறுவார்கள் இது என்ன நியாயம். [size=4][size=4]எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம். நான் இந்த இடத்திலே கூறிவைக்க விரும்புகின்றேன்.[/size][/size]மக்களுக்கு மத்தியில் விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மை மக்களின் எதிரிகளாக்குகின்ற விடயத்தை சிலர் செய்து வருகிறார்கள். இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன்.

மகிந்தா எள்ளவும் சந்தேகத்திற்கிடமில்லாமல் கக்கீமைத்தான் இதில் குறிப்பிடுகிறார். கக்கீம் கிழக்கில் அம்பாறையில் ஒரு கதையும் மேற்கில் கொழும்பில் அதை மறுத்தும் பேசுகிறார். இப்போது மகிந்தா பள்ளிவாசல்கள் உடைக்கப்படவில்லை என கக்கீமைவிட மூத்த முஸ்லீம் மந்திரிகளின் வாயால் ஒப்புவித்திருக்கிறார். அதேநேரம் கக்கீம் திரும்ப கதையை மாற்றுகிறார், முஸ்லீம் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையை அரசுடன் பேசித்தீர்க்கும் ஆளுமை தனக்கு இருக்கிறதென்றும் கூட்டமைப்பு அதற்கு தேவை இல்லை என்றும் பேசுகிறார். ஆனால் இதை தன்னும் மகிந்தா தனது பேச்சுக்களில் ஒத்துக்கொண்டதாகத்தெரியவில்லை. மகிந்தா எல்லா இனங்களும் ஒரே மாதிரி நடத்தப்படுவதாயும் ஆகவே முஸ்ளிம்கள் எந்த தனித்துவத்தையும் இலங்கையில் கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களுக்கு இப்போது(தான் ஜனாதிபதியாக இருக்கும்போது) ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் பேசுகிறார். எனவே அவர் கூறுவது கக்கீம் திரும்பவும் பொய்தான் கூறுகிறார் என்பதே. மகிந்தா தெட்டத்தெளிவாக கூறுவது கக்கீம் பொய்கள் சொல்லி கிழக்கில் வெல்லப்பார்கிறார் என்பதுதான்.

மகிந்தா எதையும் கூறலாம்; மூத்த பௌசி மாதிரி மந்திரிகள் எதையும் கூறலாம் (பௌசி மர்மனிதர்கள் சம்மாந்துறையில் பெண்களை துன்புறுத்திய போது அது பொய் என்றவர்). அவர்கள் கிழக்கிற்கு வாக்கிற்கு வராதவர்கள். ஆனால் சாதரண கிழக்கு முஸ்லீம் குடிமகனுக்கு, தமிழர்களுக்கு எண்ணப்பட்டதுபோல தமது நாட்கள்தான் இப்போ எண்ணப்படுகின்றது என்பது நன்றாகத்தெரியும். உண்மை தெரிந்தாலும் அவர்களால் பௌசியையோ, அஸ்வரையோ ஒன்றும் செய்துவிடமுடியாது. ஆகவேதான் அந்த மந்திரிகள் கவலைப்படாமல் முஸ்லீம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதையோ அல்லது பெண்கள் வலோற்காரமாக மர்மமனிதர்களால் துன்புறுத்தப்பட்டதையோ அடியொட்ட மறுத்துவிடுகிறார்கள். இது கக்கீமுக்கு முடியாது. அவர் கிழக்கு வந்து வாக்கு கேட்டாகத்தான் வேண்டும். அதற்கு அவர் கண்ட வழி கிழக்கில் ஒருகதையும், மேற்கில் அதை மறுத்து இன்னொருகதையும் கூறுவதுதான். கக்கீம் என்ன நினைத்தாரோ மகிந்தவை பற்றி; ஆனால் முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் கலையை காக்கீம் அவருக்கு படிப்பிற்க முடியாது. அவரிடமிருந்துதான் பாடம் கற்க வேண்டும். அவர் 140,000 தமிழர் இறந்த நிகழ்வை "சீரோ இழப்பு" என்று திரும்பத்திரும்ப கூறி முடித்தவர். அதனால்தான் கக்கிம் பள்ளிவாசல்கள் உடைத்ததாக பொய்சொல்கிறார் என்று முஸ்லீம் மந்திரிகளை கூட்டி வந்து கிழக்குமாகாண முஸ்லீம் மக்களுக்கு ஒப்புவித்தவர்.

கக்கீம் மகிந்தாவை அவரின் கலையில் மிஞ்ச முயற்சித்தாராயின் நிச்சயம் தேர்தல் முடிய மந்திரிப்பதவியும் இல்லை, தேர்தலும் இல்லை என்று மூக்குடைபடப்போகிறார். புத்திச்சாலிதனமானது மர்ம மனிதர்கள் முஸ்லீம் பெண்களைத்துன்புறுத்தியதையோ அல்லது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதையோ மற்ற முஸ்லீம் மந்திரிகள் மாதிரி யும், தான் மேற்கில் மறுப்பது போலவும், கிழக்கிலும் அடியொட்ட மறுத்து, அதே நேரம் தேர்தலையும் மகிந்தாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு மந்திரிப்பதவியை காப்பாற்ற வேண்டும், இல்லையேல் நடந்தவற்றை ஒழிக்காமல் முஸ்லீம் மக்களிடம் கூறி வாக்குகளை பெற்று தனது பலத்தை அதிகரித்து மகிந்தாவிடம் பேரம் பேசபேண்டும். தனக்கு எல்லாம் தெரியும்என்றும், கூட்டமைப்பு தனக்குதேவை இல்லை என்று வீறாப்பு பேசினால் கூட்டமைப்பு அதில் எதையும் இழக்கப் போவதில்லை. (இது தமிழ் தேசியத்துக்குள் நீண்ட காலமாக இருந்து வருகின்றதொரு நோயாகும். தந்தை செல்வாவின் காலத்துக்குப் பிறகு தமிழ் தேசியப் பரப்புக்குள் வந்துள்ள மிகப் பெரும் பிணி இதுவாகும். இது அகல வேண்டும்.இந்தப் பிணியினை அகற்றுவதற்வதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளை நாம் பயன்படுத்துவோம். எங்களிடம் அதற்கான ஆயுதம் இருக்கிறது. -கக்கீம்)அதேநேரம் கக்கீம் மந்திரிப்பதவியையும் இழந்து, தேர்தலையும் இழக்கத்தக்க நிலைமைகள் கிழகில் உதயமாகின்றதென்பதைதான் மகிந்தாவுடன் வந்திருக்கும் மற்றைய முஸ்லீம் மந்திரிகள் கக்கீக்கு சொல்ல முயலும் பாடம் என்பதையும் அவர் விளங்கிக்கொள்ள வேண்டும் .

Edited by மல்லையூரான்

மஹிந்தவிற்கு எதிராக மாளிகாவத்தையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2012

protest%20in%20colombo.jpg

மஹிந்த அரசில் இடம்பெற்று வரும் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் போன்ற சம்பவங்களைக் கண்டித்து இன்று (29) கொழும்பில் முஸ்லிம்கள் வாழும் மாளிகாவத்தை பிரதேசத்தில் பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த 'ஜன அரங்கல' அமைப்பின் அரசியல் பிரிவு செயலாளரான புபுதுஜயகொட தெரிவித்ததாவது,

கடந்த மூன்று வருடங்களுக்குள் மாளிகாவத்தைப் பிரதேசத்தில் 47 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

ஏனையோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எதுவித தகவல்களும் இல்லை. இனந்தெரியாத ஒரு குழுவினரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் மாளிகாவத்தை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்தே இரண்டு முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தையில் புலிகள் பதுங்கியிருப்பதாகக் கூறி வீடு வீடாகச் சோதனையிடுகின்றனர். இதன் காரணமாக இந்தப் பிரதேச இளைஞர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.