Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன மோதல், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் எதிர்காலம்:(மொழியாக்கக் கட்டுரை)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன மோதல், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் எதிர்காலம்: (மொழியாக்கக் கட்டுரை)

[Tuesday, 2012-08-28 11:54:44]

Tigers_flag150.jpg

முனைவர் ஏஆர்எம் இமித்தியாஸ்

தமிழாக்கம் நக்கீரன்

"சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே, நடக்கமுடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை..... எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்."

இதுதான் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2006 ஆம் ஆண்டு ஆற்றிய மாவீரர் உரையின் முக்கிய பகுதிகளாகும்.

சிறீலங்கா அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் இந்த உரை தமிழர்களின் ஏமாற்றங்களையும் நம்பிக்கை ஈனங்களை மட்டுமல்ல பிரதிபலிக்கிறது மட்டும் மல்ல அய்ந்து பத்தாண்டு கால தென்னிலங்கை சிங்களவர்களின் அரசியல் இரண்டகத்தையும் காத்திரமான முறையில் அம்பலப்படுத்துகிறது என்பதை ஒத்துக்கொள்வார்கள். தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கையும் கிழக்கையும் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த் தலைவர்களோடு பொருள்பொதிந்த அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்த முற்றாக மறுத்துவிட்டார்கள். மாறுபட்ட கருத்தையும் பன்மைத்துவத்தையும் மறுக்கும் சிங்கள அரசியல் நிறுவனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரதிபலித்தார்கள். இவர்கள் சிறீலங்கா சமூகத்தின் கொடிய விரோதிகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழ்த் தேசிய வன்முறையாளர்களான விடுதலைப் புலிகள் அவர்கள் கோருவது போல் விடுதலைப் போராளிகளா அல்லது சிறீலங்கா அரசு விபரிப்பது போல் கொடுமையான பயங்கரவாதிகளா என்ற கேள்விக்கு வரலாறு தீர்ப்பளிக்கட்டும். எனது வாதம் என்னவென்றால் தமிழீழப் புலிகளின் பிறப்பு சிறீலங்கா அரசின் வரலாற்று வேர்களிலும் அதன் தமிழ் விரோத நிகழ்ச்சித் திட்டத்தினாலும் நிகழ்ந்தது. இதில் ஒரு முக்கிய அம்சத்தைப் பார்க்கவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சித் திட்டத்தை சாதாரண தமிழ்மக்கள் ஏற்றுக் கொண்டது இரவோடு இரவாக எடுத்த முடிவு அல்ல. சிறீலங்கா அரசு மிதவாதத் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததாலேயே சிறீலங்காவில் தமிழ்த் தீவிரவாதம் தோற்றம் பெற்றதற்கு முக்கிய காரணியாகும். தமிழ்த் தலைவர்கள் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை கொடுப்பதற்குப் பதில் அன்றைய ஆளும் சிங்களத் தலைவர்கள் தமிழ்த்தலைவர்களையும் தமிழர்களை தாக்கினார்கள். அத்தோடு நின்றுவிடாமல் சிங்களவர்களை கூலிக்கு அமர்த்தி அப்பாவித் தமிழர்களையும் மிதவாதத் தலைவர்களையும் கொன்றார்கள். ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் காலத்துக்குக் காலம் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுகள் மிதவாதத் தமிழ்த் தலைமைகளோடு பேச மறுத்தன. தமிழரசுக் கட்சி இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

சிறீலங்காவின் அய்க்கியத்தைக் குலைக்காமல் விரிவான தீர்வொன்றைத் தமிழரசுக் கட்சி முன்வைத்தது. ஆனால் தமிழ் மிதவாதிகளது தீர்வுத்திட்டத்தைச் சிங்கள கூட்டுத் தலைமையும் போட்டிப் பேரினவாதமும் கண்ணெடுத்துப் பார்க்க மறுத்தன. சோகம் என்னவென்றால் சிங்கள ஆளும் வர்க்கம் வன்முறையைப் பயன்படுத்தியது. இது அரசியல் முறைமையில் தமிழர் தரப்பு வைத்திருந்த நம்பிக்கையைப் போக்கடித்து தமிழர்களை வன்முறையதைத் தேர்ந்தெடுக்க வைத்தது. இந்த உண்மையை முன்னாள் பிரதமரான திரு இரணில் விக்கிரமசிங்கா அய்க்கிய அமெரிக்காவுக்குச் சென்றபோது எதிரொலித்தார். அவர் சொன்னதாவது "தமிழர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க முயற்சித்தார்கள். அது விரைவில் வன்முறையாக தாழ்நிலை அடைந்தது. அடிப்படை மனக்குறைகள் தீர்க்கப்படாத போது அது தமிழ் வன்முறைக் குழுக்கள் தோன்றுவதற்குரிய களம் அமைக்கப்பட வழிகோலியது." ("வன்முறை அற்ற நல்ல எதிர்காலத்துக்கு எமது அணுகுமுறை" டெயிலி நியூஸ், யூலை 25,2002)

இது தமிழ் தீவிரவாத இயக்கங்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள், 1970 கடைசியில் தோற்றம் கொண்டமைக்கான காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. ஆனால், இனவாதப் போக்கைக் கொண்ட சிங்கள ஆட்சித் தலைவர்கள் அரசியலில் ஒருவரை ஒருவர் விலைக்கு மேல் விலை வைத்து வாங்கும் வழக்கத்தைக் கைவிடவில்லை. சிங்களவர்களது அனுதாபத்தை வென்றெடுக்க உணர்ச்சிகளுக்குத் தூபமிடும் கொள்கைகளைக் கைக்கொண்டார்கள். வடக்கில் வாழும் தமிழ்மக்களில் குறிப்பிடத்தக்க பகுதியினர் கொடிய போர் முடிந்த பின்னரும் தாங்கள் அநீதியான முறையில் நடத்தப்படுவதாகவும் சிங்கள இராணுவம் தங்களது நிலத்தை பிடித்து வைத்திருப்பதாகவும் நினைக்கிறார்கள்.

கொழும்பு, போர் முடிந்த பின்னர் தமிழர்களோடும் முஸ்லிம்களோடும் அவர்களது பதட்டங்களை நீக்க அரசியல் அறிஞர்கள் அழைக்கும் "போர் முடிந்த பின்னர் அதிகாரப் பகிர்வு" (The key feature of consociationalism is that it is a power sharing arrangement encompassing a set of institutional devices) பற்றிப் பேசுவதில் தொடர்ந்து தோல்விகண்டுள்ளது. இது சிங்கள அரசியல் வர்க்கத்தின் அரசியல் குறிக்கோள்களை விளக்குகிறது.

இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் 30 ஆண்டுகால மோதலுக்குப் பின்னரும் - பல்லாயிரக்கணக்கான இலங்கையரை, பெரும்பாலும் தமிழர்கள், போரில் பலிகொள்ளப்பட்ட பின்னரும் சிறீலங்காவின் சிங்கள அரசியல் வர்க்கம் சிறுபான்மை இனமக்களுக்கு, சிங்கள அரசியல் வர்க்கத்தை தீவிரமாக ஆதரிக்கும் முஸ்லிம் தலைவர்கள் உட்பட, நியாயமான மனக்குறைகள் உண்டு அவற்றுக்கு நியாயமான அரசியல் தீர்வு தேவை என்பதை அங்கீகரிக்க இன்னமும் மறுக்கிறது.

உண்மையில் சிங்கள அரசியல் வர்க்கம் வேண்டும் என்றே தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சிக்கல்கள் இருப்பதைப் புரிய மறுக்கிறது. காரணம் தமது எதிர்ப்பாளர்களைத் தோற்கடிக்கத் தாமே உருவாக்கிய அரசியல் கலாசாரத்தை மாற்ற மறுக்கிறார்கள். தங்களது குறுகிய அரசியல் கலாசாரத்துக்கு வலிமை தேட 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தைப் பயன்படுத்துகிறார்கள். மகாவம்சம் சிங்கள உயர் குழாத்தின் உருவாக்கத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. மகாவம்சம் சிங்கள மக்களே பவுத்தத்தின் பாதுகாவலர்கள் என்றும் முழு இலங்கைத் தீவும் சிங்களவர்களுக்கும் பவுத்தத்திற்கும் புனிதமான வாழ்விடம் என்றும் சொல்கிறது.

இலங்கைத் தீவில் 21 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். சிறீலங்காவின் இனவாரி உள்நாட்டுப் போரில் 100,000 மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள். எனவே பிரிவினை விருப்பமான ஒரு தீர்வாக இருக்க முடியாது. ஆனால் ஒரு சமூகத்துக்குத் தொடர்ந்து உரிமைகளும் ஆட்சியில் பங்கும் மறுக்கப்படுமேயானால், அவர்கள் பெரும்பான்மை/அடக்கி ஆளும் சமூகத்தின் சிறைக்கைதிகளாக நடத்தப்பட்டால் அதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.

பிரிந்து போகும் விருப்பத்தை எதிர்க்கலாம். எப்போது என்றால் ஆளும் உயர்குழாம் இனவுணர்வுகளுக்கு அப்பால் சிந்திக்கவும் செயல்படவும் உண்மையாக விரும்பினால் - அதிகாரத்தை சிறுபான்மை மக்களோடு பகிர்ந்து கொள்ளும் ஈடுபாடு இருந்தால். வேறுவிதமாகச் சொன்னால் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தை முறைப்படி பகிருவதற்கு ஒரு பொறிமுறை இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் தமிழ்த் தேசியவாதிகளின் நிகழ்சிநிரல்களை பலவீனப்படுத்தும் சாத்தியம் உண்டு. ஆனால் அப்படியொரு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அரசியல் விருப்பம் இருக்க வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகம் பெரும்பான்மையோடு ஒத்து வாழுமாறு வற்புறுத்துவது பிழையான அரசியலாகும். அத்தோடு சிறுபான்மையருக்கு அரசியல் இசைவு மற்றும் குடியுரிமை இரண்டுக்கும் இடைவெளி இல்லாதபோது அப்படி வற்புறுத்துவது பிழையாகும். நாட்டின் சில பகுதிகளில் தாங்கள் பெரும்பான்மையினர் என அவர்கள் சொல்கிறார்கள். அந்த நிலையில் பிரிவினை மிகவும் சாத்தியமாகும் பிரபாகரன் போல் "விட்டுக்கொடுப்பற்ற சிங்கள பேரினவாதத்தின் நிலைப்பாடு" ஒருபோதும் தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை எனப் பல தமிழர்கள் நினைக்கிறார்கள்.

எனவே தமிழர்கள் "சிங்கள பேரினவாதத்தின் விட்டுக்கொடுக்காத நிலைப்பாடு தமிழ்மக்களுக்கு தமிழீழம் என்ற ஒரு சுதந்திர நாடு தவிர வேறு தேர்வு எமக்கு இல்லை என்ற நிலமையை" உருவாக்கியுள்ளது எனச் சொல்லும்போது அது சனநாயக முறைமையில் பாகுபாடற்ற தன்மை மற்றும் சிங்கள ஆளும் உயர்குழாம் பற்றிய அவர்களது விரக்தி இரண்டையும் பிரதிபலிக்கிறது.

மேலே கூறியவாறு பிரிவினைக்கு நல்ல மாற்று தோல்விகண்ட ஒற்றையாட்சி ஆட்சிக்கு அப்பால் செல்லும் அரசியல் சூத்திரங்களாகும். அப்படியான சூத்திரங்கள் ஏனைய குழுக்களோடு தத்தம் சொந்த அடையாளங்களையும் விழுமியங்களையும் இழக்காது ஒத்து வாழ ஓர் (அரசியல்) இடைவெளியை உண்டாக்கலாம். ஒற்றுமை பற்றிய வாதத்தின் அடிப்படை அதனை ஏற்றுக்கொள்வதாகும். மற்றவர்கள் செய்யும் தெரிவுகளை அவர்கள் எந்த இனம் அல்லது மதம் என்ற அடையாளத்துக்கு அப்பால் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தால் நாங்கள் அவர்களது நம்பிக்கையை வென்றெடுப்பதோடு அல்லாமல் பொதுவான இலக்குகளுக்கு அவர்களது பற்றுறுதியையும் வென்றெடுக்கலாம்.

மறுபுறம் எமது விருப்புத் தேர்வுகளை மற்றவர்கள் மீது திணித்தால் அப்படிப்பட்ட அரசியல் வன்முறையையும் உறுதியற்றதன்மையையும் தூண்டலாம். தன்மானம், சுயநிண்ணயம் மற்றும் சுதந்திரம் இருந்தால் வெவ்வேறு பட்ட இனக்குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் அமைதி பிறக்கும். வேறு வார்த்தைகளில் சொன்னால் சிறுபான்மையினர் தாங்கள் இழந்த நம்பிக்கையை கட்டியெழுப்பி தமது அரசியல் தன்னாட்சி மூலம் தமது குடியுரிமையை நிலைநாட்டினால் வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையே காணப்படும் பதற்றம் மறைந்து போகும்.

தமிழ்த் தலைவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நீதிவழங்க வேண்டும் என்றால் சிங்கள அரசியல் வர்க்கம் அவர்களோடு பேச வேண்டும். இன்று காணப்படும் மோதலுக்கு தீர்வு காண்பதற்குரிய வழிகளில் அவர்களுக்கு நீதிவழங்குவது ஒரு வழியாகும். நீதி, கண்ணியமான அமைதி மற்றும் வாய்ப்புக்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் சிறுபான்மை இனத் தலைவர்கள் தோற்றம் பெறுகிறார்கள். கொழும்பு, மோதலுக்குக் காலாக இருந்த அடிப்படைக் காரணங்களை மறந்துவிடக் கூடாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிறப்புக்கு அவைதான் காரணமாக இருந்தன. தேர்தல்கள் ஆரோக்கியமான மக்களாட்சி முறைமையின் பிரிக்க முடியாத உறுப்பாகும். ஆனால் எது மக்களாட்சியை மேன்மைப்படுத்துகிறது என்றால் பன்முகத்தன்மையும் நீதியுமாகும். அந்தச் சூழலில்தான் மக்கள் உண்மையான அரசியல், சமூக மற்றும் கலாசார தன்னாட்சியை அனுபவிக்க முடியும். (Colombo Telegraph)

(முனைவர் ஏஆர்எம் இமித்தியாஸ் முக்கியமாக இனவாரி அரசியல் பற்றி ஆய்வு நடத்துபவர். அதுபற்றிப் படிப்பிப்பவர். பன்னாட்டு இதழ்களில் அவருடைய ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

தற்போது அவர் அமெரிக்க தெம்பிள் பல்கலைக் கழகத்தின் ஆசிய கற்கை/அரசியல் அறிவியல் துறையில் படிப்பிக்கிறார். )

நன்றி - செய்தியிணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.