Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கியூ பிரிவு காவல்துறையினரின் பேச்சை நம்ப வேண்டாம்! மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுங்கள் – வைகோ

Featured Replies

கியூ பிரிவு காவல்துறையினரின் பேச்சை நம்ப வேண்டாம்! உண்ணாவிரதி செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கை எடுங்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர் செந்தூரன் 23வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அதிலும் கடந்த 9 நாட்களாக தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. எந்நேரத்திலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால் இதுவரை 6 தடவை தான் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அதனால் சிறந்த மருத்துவர்களை அனுப்பி அவருக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதனால் செந்தூரனின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள 47 ஈழத்து அகதிகளை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது உண்மையில் எந்த வழக்கும் இல்லை. ஆனால் கியூ பிரிவு காவல்துறை அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர்.

தவறு செய்யாத அவர்கள் தவறு செய்ததாக வழக்குப் பதிவு செய்து அரசுக்கு தவறான தகவலை தெரிவிக்கின்றனர். அவர்களின் பேச்சை முதல்வர் நம்பிவிடக் கூடாது. மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுங்கள் என்றார்.

http://thaaitamil.com/?p=30427

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.