Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் தொடக்கம்

Featured Replies

[size=4]மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன.[/size]

[size=4]இன்று தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.[/size]

[size=4]லண்டனில் நடைபெறும் மாற்றுத் திரணாளிகளுக்கான போட்டியே, உலகில் அவ்வகையிலான மிகப்பெரிய போட்டியாக இருக்கும். [/size][size=4]ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இடைப்பட்ட காலப்பகுதியான இருவாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.[/size]

[size=4]120829112202_paralympics_304x171_getty_nocredit.jpg[/size]

[size=4]பாராலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம்[/size]

[size=4]ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சின்னத்தால் மாற்றப்பட்டுள்ளன.[/size]

[size=4]லத்தீன் மொழியில் ‘நான் காற்றில் தவழ்ந்து நகர்கின்றேன்’ என்பதை குறிக்கும் சின்னமான மூன்று அகிடோஸ் சின்னத்தை அனைத்து விளையாட்டு அரங்குகள் மற்றும் பிரிட்டனின் பல பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கிறது.[/size]

[size=4]120829121016_paralympics_torch_relay_304x171_afp_nocredit.jpg[/size]

[size=4]உள்ளத்தில் உற்சாகம் குறையாமல் ஜோதியை ஏற்றும் வீரர்[/size]

[size=4]விளையாட்டு வீரர்கள் கடந்த சில தினங்களாக அவர்கள் போட்டியின் போது தங்கியிருக்கும் இடமான விளையாட்டு கிராமத்துக்கு வந்து சேர்ந்துள்ள சூழலில், அவர்களுக்கான சிறப்பு வசதிகள் அனைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size]

[size=4]இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கும் பெரும் கிராக்கி இருந்ததாகவும் கூறும் போட்டி ஏற்பாட்டாளர்கள், இவை எந்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதற்கு மேலும் இது ஒரு உதாரணமெனவும் கூறுகிறார்கள்.[/size]

[size=4]120828150026_paralympics_brazil_uk_athletes_304x171_other_nocredit.jpg[/size]

[size=4]உடல் குறைபாடுகளை மற்ந்து பயிற்சிப் போட்டியில் இரு வீரர்கள்[/size]

[size=4]ஆனாலும் வட அமெரிக்கப் பகுதிகளுக்கான ஒளிபரப்பை செய்யும் அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனம், தினமும் தொகுக்கப்பட்ட அளவில், ஒரு சில மணி நேரமே இந்தப் போட்டிகளை காண்பிக்க எடுத்துள்ள முடிவு பல்தரப்பில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.[/size]

[size=4]இம்முறை நடைபெறும் மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடுகளும் அதன் வீரர்களும் கலந்து கொள்வது, இந்தப் போட்டிகளுக்கு உலக அளவில் மேலும் ஒரு ஏற்றமும் ஆதரவும் கிடைத்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது என்று பிபிசியின் விளையாட்டுச் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[/size]

[size=4]http://www.bbc.co.uk/tamil/sport/2012/08/120829_paralympicsbegin.shtml[/size]

  • தொடங்கியவர்

[size=6]Sri Lankan Paralympians face resources challenge[/size]

[size=6]

_62476080_team.jpg.jpg [/size]

[size=6][size=4]Five members of the military and a woman, for the first time from Sri Lanka, are among the team members[/size][/size]

[size=6] [/size]

[size=6][size=5]Sri Lanka is sending a seven-member team to compete in the Paralympic Games in London. They are determined to win the first ever Paralympic medal for the country, but say their effort is being hampered by a lack of official support.[/size][/size]

[size=6][size=4] [/size][/size]

[size=6][size=4][size=5]"The only equipment I have for training is my walking stick," says the team's captain PA Lal Pushpakumara, who lost his left leg after he stepped on a land mine planted by Tamil Tiger rebels in 2008.[/size][/size][/size]

[size=6][size=4] [/size][/size]

[size=6][size=4][size=5][size="5"]http://www.bbc.co.uk/news/world-asia-19370738[/size][/size][/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]வட இலங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு பயிற்சி[/size]

[size=5]120829143528_handicapped_players_srilanka_304x171_bbc_nocredit.jpg[/size]

[size=4]இலங்கையின் வடக்கே போர் நடைபெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் பலர், ஊனமுற்றவர்கள் இயலாதவர்கள் என்ற ஒடுங்கிய மனோநிலையில் மூலையில் ஒதுங்கியிராமல் துடிப்போடு சிட்டிங் வொலிபோல் என்ற இருந்தபடி விளையாடுகின்ற கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கு கொள்வதற்காகத் தயார்ப்படுத்தி வருகின்றார்கள்.

ஆசிய பிராந்திய பராலிம்பிக்ஸ் போட்டியில் இம்முறை பங்கெடுக்க வேண்டும் என்பது இவர்களின் நோக்கம். அனைவருக்கும் விளையாட்டு என்ற நோக்கத்தை முன்னெடுத்து செயற்பட்டு வருகின்ற ஹன்டிகப் இன்டர்நஷனல் என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்கியிருக்கின்றது.[/size]

[size=4] [/size]

[size=4]http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/08/120829_sittingvolyball.shtml[/size]

  • தொடங்கியவர்

[size=5]பாராலிம்பிக்: இலங்கை வீரருக்கு வெண்கலப்பதக்கம்[/size]

[size=4]லண்டன் பாராலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் சஞ்ஜெய வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.[/size][size=2]

[size=4]பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ரி46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் கலந்து கொண்டார்.[/size][/size][size=2]

[size=4]இதில் பிரதீப் ஓட்ட பந்தய தூரத்தை 49.82 விநாடிகளில் ஓடி முடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.[/size][/size][size=2]

[size=4]ParaOlympic1.jpg[/size][/size]

[size=2]

http://www.virakesari.lk/article/sports.php?vid=97[/size]

  • தொடங்கியவர்

[size=5]லண்டன் பாராலிம்பிக்: தங்கம் வென்றார் பிஸ்டோரியஸ்[/size]

[size=5][size=4]லண்டன் பாராலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் தென் ஆப்ரிக்க வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தங்கம் வென்றார்.[/size][/size]

Oscar-Pistorius-flag-120908AI640.jpg

[size=5][size=4]லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான 14வது பாராலிம்பிக் போட்டி நடந்தது. ஆண்களுக்கான 400 மீ., (டி 44) ஓட்டத்தில் பிளேடு ரன்னர் என அழைக்கப்படும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் பங்கேற்றார்.பைனலில் அசத்திய பிஸ்டோரியஸ், பந்தய தூரத்தை 46.68 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்றார். முன்னதாக இவர், 2008ல் பீஜிங்கில் நடந்த பாராலிம்பிக் போட்டியின் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் பாராலிம்பிக்கில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் மூன்று பதக்கம் வென்றார் பிஸ்டோரியஸ். ஏற்கனவே இவர் 4*100 மீ., தொடர் ஓட்டம் (தங்கம்), 200 மீ., ஓட்டம் (வெள்ளி) போட்டிகளில் பதக்கம் வென்றார்.இப்போட்டியில் 50.14 வினாடிகளில் வந்த அமெரிக்காவின் பிளேக் லீபெர் வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் டேவிட் பிரின்ஸ் 50.61 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

சீனா ஆதிக்கம்:

லண்டன் பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் 95 தங்கம், 71 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 231 பதக்கங்கள் வென்ற சீனா முதலிடம் பிடித்தது. ரஷ்யா 101 பதக்கங்களுடன் (35 தங்கம், 38 வெள்ளி, 28 வெண்கலம்) இரண்டாவது இடம் பெற்றது. தொடரை நடத்திய இங்கிலாந்து 120 பதக்கங்கள் (34 தங்கம், 43 வெள்ளி, 43 வெண்கலம்) பெற்று மூன்றாவது இடம் பிடித்தது. அமெரிக்கா 98 பதக்கங்களுடன் (31 தங்கம், 29 வெள்ளி, 38 வெண்கலம்) 6வது இடம் பெற்றது. ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்ற இந்தியா, 67வது இடத்தை சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் பகிர்ந்து கொண்டது.பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வெள்ளி நாயகன் கிரிஷா உள்ளிட்ட 33 பேர் கொண்ட இந்திய அணியினர் நாளை காலை தாயகம் வருகின்றனர். [/size][/size]

[size=5][size=4]http://tamil.yahoo.c...-014000577.html[/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நிறைவடைந்தது பாராஒலிம்பிக்[/size]

[size=4]article-2200650-14EE4775000005DC-289_964x651.jpg[/size]

[size=4]லண்டனில் நடந்த பாராஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது.

பாராஒலிம்பிக்[/size]

[size=4]மாற்றுத் திறனாளிகளுக்கான 14-வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த மாதம் 29ஆம் திகதி தொடங்கியது. இதில் 164 நாடுகளை சேர்ந்த 4,294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 20 விளையாட்டுகளில் 503 பிரிவுகளில் பந்தயங்கள் நடந்தன.

சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவரும் உற்சாகமாக கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 282 பேரை களம் இறங்கிய சீனாவே இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் பதக்க வேட்டையை எந்த நாட்டாலும் நெருங்க முடியவில்லை.

சீனா முதலிடம்[/size]

[size=4]draft_lens19542866module161444575photo_13472249280909.jpg

பாராஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி, வாண வேடிக்கைகளுடன் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த சீனா 95 தங்கம், 71 வெள்ளி, 65 வெண்கலம் என்று மொத்தம் 231 பதக்கங்களை குவித்தது. இதன் மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு பீஜிங் பாராஒலிம்பிக்கில் 89 தங்கம் உள்பட 211 பதக்கங்கள் பெற்ற தங்களது முந்தைய சாதனையை முறியடித்தது.[/size]

[size=4]ரஷியா 36 தங்கம் உள்பட 102 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 34 தங்கம் உள்பட 120 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன. பிரதான ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா 31 தங்கம், 29 வெள்ளி, 38 வெண்கலம் என்று 98 பதக்கத்துடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இலங்கைக்கு ஒரு பதக்கம்

பதக்கப்பட்டியலில் மொத்தம் 75 நாடுகள் இடம் பிடித்தன. இதில் இலங்கைக்கு ஒரே ஒரு பதக்கம் கிடைத்தது. ரி46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் கலந்துக்கொண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதில் பிரதீப் ஓட்ட பந்தய தூரத்தை 49.82 விநாடிகளில் ஓடி முடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.[/size]

[size=4]article-2200650-14EE7516000005DC-683_964x667.jpg[/size]

http://www.virakesari.lk/article/sports.php?vid=108

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.