Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த அரசு தீவிரவியூகம்;தூதரகங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த அரசு தீவிரவியூகம்;தூதரகங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமனம்

india-map-flag.jpg

இலங்கை, சீனாவின் பக்கம் சாய்வதால் இலங்கை மீது இந்தியா அதிருப்தி கொண்டுள்ளது என்ற கருத்து மேலோங்கி வரும் இவ்வேளையில், இந்தியாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை, அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.இந்தியாவில் இயங்கும் இலங்கைத் தூதரகங்களின் சேவைகள் தற்போதைய தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படவுள்ளன.

இதன் அடிப்படையில், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரக, பிரதித் தூதரகப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்பொருட்டு சென்னையிலுள்ள இலங்கை உப தூதுவர் அலுவலகத்திற்குத் தமிழ் பேசும் இரு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அரச சேவையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அதேவேளை, மும்பையில் இயங்கும் உப தூதுவர் அலுவலகத் தலைமையதிகாரியாக வெளிவிவகார நடவடிக் கைகளில் தேர்ச்சி பெற்ற சிரேஷ்ட அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார். அத்துடன், மத்தியஸ்த அதிகாரியொருவரும் நியமிக்கப்படுவார்.இவர் வர்த்தகத் திணைக்களத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவராக இருப்பார்.

புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இந்தியாவுடனான பரஸ்பர பொருளாதாரம், முதலீடுகள், வர்த்தக உறவுகள் ஆகியவற்றைக் கையாள்வதற்காக மேலதிக அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளார்.

கொல்கத்தாவில் உப தூதரகமொன்றும் திறக்கப்படும். ஆலோசகர் நாயகம், உதவியதிகாரி, இலங்கை வெளிவிவகார அதிகாரி உட்பட பல முக்கிய அதிகாரிகளும் இந்த அலுவலகத்துக்கு நியமிக்கப்படுவார்கள்.

இவர்கள் மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, ஜாகண்டி, பீஹார், வடகிழக்கு ஆகிய மாநிலங்கள் எதிர்பார்க்கும் தூதரக சேவைகளை வழங்கவுள்ளனர். அதேவேளை, ஹைதராபாத்,லக்னோ, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இலங்கை உப தூதுவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இலங்கை அரசு ஏன் திடீரென இந்தியாவுடன் இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது என நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,

"இலங்கையின் சுற்றுலாத்துறையின் பங்குதாரராக இந்தியா செயற்படுகின்றது. கணிசமானளவு முதலீடுகளைச் செய்கின்றது. அரசியல், பொருளாதார ரீதியிலும் இரு நாடுகளுக்குமிடையில் முக்கியத்துவம் உள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல பதிலளித்தார்.

31 ஆகஸ்ட்டு 2012, வெள்ளி 8:05 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=418701375031734021

இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதற்கமைய, இந்தியாவின் முக்கிய நகரங்களில் புதிதாக தூதரகப் பிரதிநிதிகளை நியமிக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையிலான இந்தத் திட்டத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் சிறிலங்கா அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

வர்த்தக உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கும், செயற்றிறன் மிக்க வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கும் வகையிலுமே, இந்தியாவில் புதிய தூதரகப் பிரதிநிதிகளை சிறிலங்கா நியமிக்கவுள்ளது.

இதன்படி, ஹைதராபாத், லக்னோ, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் புதிய தூதரகப் பிரதிநிதிகளை நியமிக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அத்துடன், சென்னை துணைத் தூதரகத்தில் தமிழ்பேசும் அதிகாரிகள் இருவரை நியமித்து, அதன் செயற்பாடுகளை விரிவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மும்பாய் தூதரகப் பிரதிநிதி பதவிக்கு வெளிவிவகார சேவையில் உள்ள மூத்த இராஜதந்திரி ஒருவரை நியமிக்கவும், அங்கு மத்திய தர பதவி நிலை அதிகாரி ஒருவரை மேலதிக இராஜதந்திர பதவியில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர புதுடெல்லியில் உள்ள தூதரகத்தில் இந்தியாவுடன் இராஜதந்திர பொருளாதார முதலீடு மற்றும் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் முதன்மையான பதவி ஒன்று உருவாக்கப்படும்.

அதேவேளை, மேற்கு வங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான துணைத் தூதரகம் ஒன்றை கொல்கத்தாவில் திறக்கவும் சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இவற்றின் மூலம் வர்த்தக, சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறை தொடர்பான உறவுகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

1.2 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் நோக்கிலேயே சிறிலங்காவின் வெளிநாட்டு கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=30623

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.