Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் பலர் பிறந்த வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு வந்த துயரம்.

Featured Replies

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இந்த மண்ணுக்கு என்று ஒரு தனித்த இடம் உண்டு. விடுதலைப் போரட்டத்தின் முதுகெலும்பாக இருந்தது கடற்புலிகள் அணி என்பது யாவரும் அறிந்த உண்மை.

அந்த கடற்புலிகள் அணியின் வளர்ச்சியில் பெருமளவிற்கு பங்களிப்பு செய்தது இந்த வடமராட்சி கிழக்கு மண்ணும் மக்களுமே ஆகும். இந்த மண்ணும் கடலும் குருதியில் தோய்ந்த வரலாறுகளில் இப்பிரதேச மக்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இவை எல்லாவற்றையும் விட எமது போராட்ட வளர்ச்சிக்கு பல வீரத் தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் கலைஞர்களையும் பெற்றுக்கொடுத்த ஒரு வீரம் விளைந்த மண் இதுவாகும்.

இந்த வடமராட்சி கிழக்கு கடலிலே எத்தனையோ உறவுகள் எம் கண் முன்னே குருதியில் குளித்து வீர காவியமான வரலாறுகளும் உண்டு.

எமது வீரத்தலைவன் வலம் வந்த வங்கக்கடல் இது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த மண்ணிலே தற்போது இடம் பெறும் சில சம்பவங்கள் மன வேதனையை உண்டு பண்ணுகின்றது.

சரி விடயத்திற்கு வருவோம். இந்த பிரதேசத்தில் வாழும் சில புல்லுருவித் தமிழர்கள் இராணுவத்தினருடன் (இராணுவ புலனாய்வுத்துறை) சேர்ந்து இயங்குவதுடன் சில முறைகேடான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் முன்னாள் போராளிகளை காட்டிக்கொடுப்பதும் இராணுவத்தினருக்கு பெண்களை ஏற்பாடு பண்ணிக்கொடுப்பதும் இவர்களின் முக்கிய பணியாக காணப்படுகின்றது.

இங்கு இடம்பெறும் பல பாலியல் வன்முறை சம்பவங்களுடன் இவர்களுக்கு நேரடியாக தொடர்பு இருந்தும் தப்பித்து கொள்ளுகின்றனர்.

இவர்களின் இத்தகைய செயற்பாடு இப்பிரதேச மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அது மட்டுமன்றி தற்போது சில இளஞர்கள் ஈபிடிபி யினருடன் சேர்ந்து புகைத்தல் மது அருந்துதல் இளம் பெண்களுடன் பிரச்சனைக்கு போதல் போன்ற தீய பழக்கங்களை பழகிவருகின்றனர்.

ஈபிடிபி கட்சியானது தற்போது இப்பிரதேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கட்டாயமாக தமக்கு அழைப்பு விடுக்குமாறும் அந்த நிகழ்வுகளில் தங்களை பிரதம விருந்தினராக வரவேற்கும் படியும் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் இவர்கள் மக்களுக்கு கொடுப்பனவுகள் வரும் போது தம்முடன் சேர்ந்து இயங்குபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் இக்கட்சியின் முக்கிய உறுப்பினர் ரங்கன் என்பவர் இக்கட்சியின் தலைவர் டக்ளஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க டக்ளஸ் பணிப்பிற்கு அமைய இக்கட்சியினை சேர்ந்த திருலிங்கநாதன் இப்பிரதேச உதவி அரசாங்க அதிபராக பணம் கொள்ளை அடித்து கடமை செய்கின்றார்.

இப்பிரதேசத்தில் உள்ள சில கேவலமான இளைஞர்களைக்கொண்டு ஈ பி டி பி கட்சியினர் இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வாசிகசாலைகளிலும் கடைகளிலும் கட்டாயமாக பத்திரிகை போட்டு பணம் வசூலித்து வருகின்றனர்.

இச்செயற்பாடும் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டு பண்ணியுள்ளது.

ஆகவே இதனை தடுத்து நிறுத்தும் தார்மீக கடமை இப்பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களிடமே உள்ளது.

நாம் இங்கிருந்து இவர்களுக்கு புத்திசொன்னால் இவர்கள் எங்களை காட்டி கொடுப்பார்கள்.

ஆகவே இப்பிரதேச புலம் பெயர்ந்த உறவுகளே உங்கள் சகோதர சகோதரிகளை விழிப்பாக இருக்க சொல்லுங்கள்.

எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்ய வேண்டாம் என்று சொல்லுங்கள்.

விழிப்புத்தான் எமது விடுதலையின் முதல்படி என்பதை அவர்க்களுக்கு உணர்த்துங்கள்.

எம்மை நாமே ஆளவேண்டும் ஒன்று சேருங்கள் எங்கள் கொடி பறக்கவேண்டும் பகையை வெல்லுங்கள்.

தமிழீழத்திலிருந்து வேந்தன்

http://thaaitamil.com/?p=30942

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.