Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டு மக்களும் - இலங்கை தமிழ் மக்களைப்போல அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாரா விமல் வீரவன்சே..?! அவரது ஆசை நிறைவேறுமா..?! ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

தமிழ்நாட்டு மக்களும் - இலங்கை தமிழ் மக்களைப்போல அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாரா விமல் வீரவன்சே..?! அவரது ஆசை நிறைவேறுமா..?! ஈழதேசம் பார்வையில்..!

தமிழ் நாட்டவர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினால்...என்று மிரட்டிய இலங்கை அரசின் மிக முக்கிய அமைச்சர்..! விமல் வீரவன்சே அவர்கள்.

தமிழ் நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அல்லது கடும் கோபம் கொப்பளிக்க எச்சரித்தார்..? என்று எடுத்துக் கொள்ளலாமா..?

கடந்த சில தினங்களாக தமிழகத்தில், இலங்கை சிட்டிசன்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். மேலும் மனோ.கணேசன் கூறுகையில்,

[size=4][size=4]அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அப்பாவி வேடம் புனைந்து, தீக்கோழியைப்போல் மண்ணில் தலையை புதைத்துக்கொள்ளவும் முடியாது. எமது நாட்டு பிரச்சினைகளுக்கு, குறிப்பாக எமது தேசிய இனப்பிரச்சினைக்கு எமது நாட்டுக்குள் நியாமான தீர்வு காணப்படாததன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன.[/size][/size][size=4] [/size][size=4][size=4]எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை நீண்ட நாட்களுக்கு முன்னமே கடந்து சென்றுவிட்டன என்ற வெட்கங்கெட்ட யதார்த்தத்தை நமது அரசாங்கம் இனியாவது உணர வேண்டும். என்ற இந்த மனோ கணேசனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம் தான். [/size][/size]

[size=4][size=4]இலங்கைக்கு எதிராக தமிழ்நாடு செயற்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கைக்கு வழக்கமாக வருகின்ற ஆயிரக்கணக்கான அல்ல லட்சக்கணக்கான தமிழ் நாட்டவர் மீது இங்குள்ளவர்கள் அதாவது சிங்களவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் உணர வேண்டும் என்கிறார் விமல் வீரவன்சே அவர்கள். [/size][/size]

[size=4][size=4]மேலும் கூறுகையில், தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செயற்படுவதால் [/size][/size]இலங்கை - இந்தியா உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இது தொடர்பாக இந்திய மத்திய அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கிறார். மேலும், இலங்கை - இந்திய உறவில் இந்தப் பிரச்சனைகள் மிகப்பெரும் விரிசலை ஏற்படுத்தி சிக்கலை கையை மீறிச் செல்வதற்கு முன்பாக இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சே அவர்கள்.

[size=4][size=4]நமக்கு வரும் சந்தேகம் என்னவெனில், இந்திய - இலங்கை உறவில் விரிசல் ஏற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறார் அமைச்சர் விமல் வீரவன்சே..! இதற்கு என்ன அர்த்தம்..? ஒருவேளை இலங்கை முழுவதையும் காங்கிரஸ் பெருச்சாளிகள் விலைக்கு வாங்கி விட்டார்களா என்ன..? மீதி இடத்தை சீனாக்காரனுக்கு விற்று விட்டதா மகிந்தா கும்பல்..? ஏனென்றால், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் பேசுவதைப் போல அல்லவா இருக்கிறது இவர்களின் அறிக்கையும்.. மிரட்டலும்..? மத்திய அரசு அதாவது காங்கிரஸ் அரசு என்று மட்டும் அல்ல பா.ஜ.க. மற்றும் இவர்களின் பிட்டத்தை தாங்கிப் பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கிறார்.[/size][/size]

[size=4][size=4]உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகப்பெரும் ஆலோசனையை, எச்சரிக்கையை சொல்கிறார் அமைச்சர் விமல் வீரவன்சே..! ஒருவேளை இலங்கைத் தமிழர்களை கொன்றது போல, பெருமளவில் ஏதாவது ஒரு சப்பை காரணத்தைக் கூறி பல லட்சக்கணக்கில் இலங்கை தமிழர்கள் போல, இளிச்சவாயன் ஆன தமிழ் நாட்டு தமிழர்களை கொன்று குவித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று ஆலோசனைகள சொல்லுகிறாரோ..? நம்ம அமைச்சர் விமல் வீரவன்சே அவர்கள். இருக்கலாம் என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். [/size][/size]தமிழ்நாட்டு மக்களும் - இலங்கை தமிழ் மக்களைப்போல அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாரா விமல் வீரவன்சே..?! அவரது ஆசை நிறைவேறுமா..?! ஈழதேசம் பார்வையில்..!

[size=4][size=4]எனவே அவரது ஆசை நிறைவேறாது என்று யாராவது கியாரண்டி கொடுக்க முடியுமா என்ன..? [/size][/size]

[size=4][size=4]மாயாண்டிக்கருப்பு [/size][/size]

அமெரிக்காவையே மிரட்டின விமல், ஆனால் இதுவரையும் அங்கே ஒன்றும் செய்ய முடியாமல், இப்பொது தமிழ் நாட்டை மிரட்டும் அளவுக்கு ஒடுங்கியிருப்பது பெரியதொரு பகிடி. இந்த பழைய மக்கள் விடுதலை முன்னணி விமலின் கோளையா பொன்சேக்கா தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கோமாளிகள் என்றவர். இந்த மகிந்த வீட்டு சொன்னதை சொல்லும் கிளிகளை, கிளிபிள்ளை பாடம் முடிய, மகிந்த தேவை வரும் போது எலும்பு தட்டி சொதி வைத்துவிடுவார். அது வரைக்கும் விமல் இப்படி வாயடிக்க முடியும். தமிழ் நாட்டு மக்கள் காங்கிரஸ்-கருணாநிதி கூட்டின் அடக்குமுறையை தூக்கி எறிந்த துடிப்பில் தொடர்ந்து வேறும் செய்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.