Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவினால் பாதிக்கப்படும் பட்டதாரிகள் .

Featured Replies

யாழ் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுநர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விடயத்தில் தேச விரோத சக்தியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு) தனது அரசியல் நலன்களைத் திணிக்க முற்பட்டு வருகின்றமை தொடர்பில் பட்டதாரிப் பயிலுநர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இவர்கள் வேலையற்ற பட்டதாரிகளாக இருந்த போது இவர்களை வைத்து அரசியல் நடத்திய மேற்படி ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு தற்போதும் அதே போக்கில் செயற்பட்டு வருகின்றமை பட்டதாரிகளை மட்டுமன்றி அவர்களின் பெற்றோரையும் கடும் விசனமடையச் செய்துள்ளது.

நாடாளவிய ரீதியாக அண்மையில் 50 ஆயிரம் வரையான பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மட்டுமே வேதனமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கேற்பவே தற்போது கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

6 மாதங்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவே வழங்கப்படவுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 10 ஆயிரம் ரூபாவுடன் வாழ்வாதாரத்தை நடத்துவதென்பது மிகக் கஸ்டமானதென்பது அனைவருமே அறிந்த விடயம். இந்த நிலையில் சிறிலங்கா அரசு இந்தப் பட்டதாரிகளை பெரும் நிர்க்கதி நிலைக்குத் தள்ளியுள்ளது.

இதேவேளை, பயிலுநர் நியமனம் வழங்கப்பட்ட குறிப்பிட்டளவான பட்டதாரிகளை தெரிவு செய்து அவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பிரதேச மட்டங்களில் முன்னெடுத்த அபிவிருத்திப் பணிகளை இனிமேல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. இதன்மூலம் பிரதேச மட்டங்களில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியை சுருட்டுவதற்கு பசில் ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒரு அங்கமாகவே யாழ் மாவட்டத்திலுள்ள பட்டதாரிப் பயிலுநர்களை மீண்டும் தனது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்த ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு முற்பட்டு வருகின்றது.

இந்தப் பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ள பொருளாதார அமைச்சின் நியமனங்களைப் பெறுபவர்கள் பிரதேச மட்டங்களில் பணியாற்றும் போது அவர்களைக் கண்காணிப்பதற்கு பிரதேச செயலகங்களில் மூவர் வீதமாக பட்டதாரிப் பயிலுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களிடமே குறித்த பிரதேசங்களில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளின் அறிக்கைகளும் இருக்கும்.

அதனை விட பிரதேச மட்டங்களில் உள்ள பொது மக்களுடனான தொடர்பாடல்களும் பேணப்படும். எனவே இந்தப் பொறுப்புகளுக்கு தங்கள் விசுவாசமானவர்களை நியமித்தால் தாங்கள் நினைத்ததை செயற்படுத்த முடியுமென்பதுடன் தமது அரசியல் கருத்துக்களையும் பரப்ப முடியுமென்று ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு கருதுகின்றது.

இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் நியமிக்கப்படவுள்ள 45 பட்டதாரிப் பயிலுநர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்த ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். பிரதேச செயலகங்களில் நியமிக்கப்படுகின்ற நீங்கள் எமது கட்சிக்கு விசுவாசமாக நடக்க வேண்டுமென்று ஒட்டுக்குழு டக்ளஸ் கூறியிருக்கின்றார்.

ஏற்கனவே பட்டதாரிப் பயிலுநர்கள் பிரதேச செயலகங்களில் பணியாற்றுகின்ற நிலையில் புதிதாக தமக்கு விசுவாசமானவர்கள் என்ற போர்வையில் 45 பட்டதாரிகளை ஏன் நியமிக்க வேண்டுமென்றும் பட்டதாரிப் பயிலுநர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுமாயின் தாங்கள் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் பட்டதாரிப் பயிலுநர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://thaaitamil.com/?p=31341

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.