Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களை பாதுகாக்குமாறு தமிழக அரசிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]amnesty_60_60.jpg[/size]

[size=2][size=4]இந்தியாவிற்கு வருகைதருகின்ற இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு வசித்துவருகின்ற இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்நாட்டு அரசாங்கத்திடம், சர்வதேச மன்னிப்புச்சபை நேற்று வியாழக்கிழமை கோரியுள்ளது.

இந்தியாவிற்கு வருகைதருகின்ற இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு வசித்துவருகின்ற இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழ்நாட்டிலுள்ள அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் நியாயமான விசாரணையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியப் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜி.ஆனந்தபத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குச் சென்ற ஒரு பாடசாலைக்குழு உட்பட 2 கால்பந்தாட்டக் குழுக்களை திருப்பியனுப்புமாறு தமிழ்நாட்டு மாநில அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரி ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி தமிழ்நாட்டிற்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தனது பிரஜைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆலோசனை கூறியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தொடருகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கவலை கொண்டுள்ளன.

இருப்பினும் எங்களுக்கு வேறு விடயங்களில் உள்ள விசனங்களை இலங்கையிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மீதோ யாத்திரிகர்கள் மீதோ வன்முறையாகக் காட்டக்கூடாது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின்படி தமிழ்நாட்டுக்கு வருகின்ற ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் மதம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம், நடமாடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கான உரிமை உண்டென்பது தொடர்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதாக ஆனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார். (த ஹின்டு)[/size][/size]

[size=2][size=4]http://www.tamil.dai...7-08-06-20.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

வெளிக்கிட்டாச்சா?

தமிழன் தடி எடுத்தால்தான் இவர்களுக்கு உறைக்குது

போங்கடா

போய் பாயைப்போட்டு படுத்து உறங்குங்க..........

நல்லதுதான் ஆனால் தமிழக மீனவர் விடயத்தில் அப்படி பெரிதாக அக்கறை காட்டுவதாக தெரியவில்லையே இந்த மன்னிப்பு சபை ! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.