Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமூல் வசூலிக்கும் இந்திய அரசியல் கட்சிகள்.- கார்ப்பரேட் விசுவாசிகளா..? தேச விசுவாசிகளா..? மக்கள் விசுவாசிகளா..? ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

மாமூல் வசூலிக்கும் இந்திய அரசியல் கட்சிகள்.- கார்ப்பரேட் விசுவாசிகளா..? தேச விசுவாசிகளா..? மக்கள் விசுவாசிகளா..? ஈழதேசம் பார்வையில்..!

ரவுடி, தாதா, பேட்டை ரவுடி, மாவட்ட தாதா, மாநில தாதாக்கள் அனைவரையுமே மிஞ்சி விட்டன தேசிய - மாநில அரசியல் கட்சிகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? மாமூல் வசூலிக்கிறது அணைத்து அரசியல் கட்சிகளும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளிடம். கார்ப்பரேட் கம்பனிகளும் டிரஸ்ட் வைத்து பணத்தை பதுக்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் டிரஸ்ட் வைத்துக்கொண்டு பணத்தை அங்கே கொட்டி மறைத்து வைக்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் அனைத்தும் பணத்தை நன்கொடை என்ற பெயரில் முன்பு கொடுத்தார்கள். தற்பொழுது தங்களது பங்குகளை கொடுக்கிறார்கள். இரண்டு பெரிய தேசியக் கட்சிகளான காங் -ஐ க்கும், பா.ஜ.கவுக்கும் மற்றும் ஏனைய அணைத்து மாநில கட்சிகளுக்கும் என்று தெரியுமா உங்களுக்கு..?

உதாரணமாக போஸ்கோ மற்றும் வேதாந்தா என்ற நிறுவனங்களும் அரசியல் கட்சிகளைப்போலவே கார்ப்பரேட் துணை அமைப்புகள். எதற்கு எது துணை என்று மட்டும் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது என்பது வேறு விசயம்.

இந்த வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை வைத்துள்ளது, அலுமினிய ஆலை வைத்துள்ளது. மற்றும் ஏராளமான ஆலைகள் வைத்துள்ளார்கள், இவர்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களை, அதாவது கனிம தாதுக்களை வழங்குவதற்காக போஸ்கோ என்ற கம்பனி, இந்த கம்பனிக்குத் தான் ஜார்கண்ட் மாநிலத்தையே விற்று உள்ளார்கள். ஒடிஸா மாநிலத்தில் பல மாவட்டங்களையும், பீகாரில், மேற்கு வங்கத்தில், ஆந்திராவில் எங்கெல்லாம் கனிம வளங்கள் உள்ளனவோ அந்த மாவட்டங்கள் முழுதும் விற்று விட்டார்கள். அதுவும் சொற்ப விலைக்கு, அந்த விலையையும் அந்த கம்பனிகளே முடிவு செய்துவிடும், இறுதியாக எவ்வளவு லாபத்தில் அந்த கம்பனி இந்த கனிம வளங்களை கொள்ளை அடிக்கிறார்களோ, அதில் இவ்வளவு பங்குகளை கொடுத்துவிட வேண்டும் என்ற ஒப்பந்தம். இப்ப சொல்லுங்கள் இந்த கம்பனிகள் கொடுப்பது நன்கொடையா..? லாபத்தில் பங்கா..? என்று.

காங்கிரஸ் கட்சிக்கு எத்துனை லட்சம் கோடி சொத்துக்கள், அதாவது அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன என்று தெரியுமா உங்களுக்கு..? காங்கிரஸ் கட்சியின் பினாமி அமைப்புகள் எத்துனை உள்ளன. மாணவர் அமைப்பு முதல் தொழிற்சங்கம் வரை உள்ள அமைப்புகள் இவை போக ராஜீவ் காந்தி அறக்கட்டளை, மகிளா காங்கிரஸ் மற்றும் எண்ணற்ற அமைப்புகள் உள்ளன. இவையெல்லாம் கூட்டி மொத்த சொத்து மதிப்புகள் எவ்வளவு..? எந்த எந்த துறைகளில் முதலீடு செய்து வருகிறார்கள். அவற்றின் வருடாந்திர வருமானம் எவ்வளவு என்றும் அவற்றின் சொத்து மதிப்புகளை பொது மக்கள் பார்வைக்கும் நாட்டு நலன் கருதியும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று யாரும் இதுகாறும் கேட்டதில்லை.கேட்கவும் மாட்டார்கள். கேட்டால் அவர் மாவோஸ்ட் என்று ஸ்டாம்ப் அடித்து விடுவார்கள்.

பாரதிய ஜனதா கட்சியை எடுத்துக் கொண்டால், உலகத்திலேயே அதிக சொத்துக்களை, அதிக பண மூட்டைகளை கொண்ட அமைப்புதான் வி.ஹெட்ச்.பி.( விஷ்வ ஹிந்து பரிசத் ) அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு, பண்ணைகளில் மலம் தின்னும் பன்றிக் கூட்டங்கள் போடும் குட்டிகளைக்கூட எண்ணி விடலாம், பி.ஜே.பி.யின் துணை அமைப்புகளை எண்ணவே முடியாது. அவ்வளவு அமைப்புகள், டிரஸ்ட் கள். மாநிலம் தோறும் புதிய புதிய காவி அமைப்புகள், இவர்களிடம் இருந்தால் நமக்கு ஒன்றுமே மிஞ்சாது என்று கருதி, துணிவுடன் ஆரம்பிக்கப்பட்ட சிவ சேனா கட்சி, இன்று மாநிலக் கட்சியிலேயே மிகப் பெரும் பண மூட்டைகளை கொண்ட கட்சியாக மாறியுள்ளது. இதன் தலைவர் பால் தாக்கரே. இவரின் மகனுக்கே அணைத்து சொத்தும் சென்று விடும் என்று தெரிந்தவுடன் இவரின் மருமகன், நவ நிர்மான் என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது மராட்டியத்தில், மும்பையில்.

அடுத்ததாக மாயாவதி, லாலு பிரசாத், முலாயம் கட்சி, பஞ்சாபின் சிங்கு கூட்டத்தின் கட்சி, ஜாட்காரர்கள் கட்சி, இவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாமூல் வசூல் வேட்டை உலக கம்யூனிஸ்ட் கட்சி யாரிடமும் இல்லை. உலகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியெல்லாம் இவர்களைப் பார்த்து பெரு மூச்சு விடுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிய கட்சி என்று. இவர்கள் மாதிரி என்றைக்கு நாமெல்லாம் மாறுவது என்று.

நாம் இவற்றையெல்லாம் வெறும் கற்பனையாக சொல்லவில்லை. இதோ புள்ளி விபரம். மேற்கண்ட அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் கம்பனிகளிடம் இருந்து லீகலாக பெற்ற செக் மற்றும் ரொக்கம் விபரம். இவை அனைத்தும் தணிக்கை கணக்காளர்களால் பூதக் கண்ணாடி கொண்டு ஆடிட் செய்து வெளியிட்ட புள்ளி விபரங்கள். கணக்கே காட்டாமல் எவ்வளவு வாங்கி இருப்பார்கள் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

2008 - 2009 ஆண்டிற்கான பணம் பெற்ற மொத்த தொகைகள். மற்றும் கட்சிகளின் வருமானங்கள்.

CONG - I - 49,688 LAKHS, DONATION - 4,792 LAKHS

BJP - 22,002 LAKHS, DONATION - 19,627

BSP - 18,202 LAKHS,DONATION - 15,544

NCP - 4001 LAKHS, DONATION - 561

CPI - 116 . DONATION - 45

CPM - 6,283, DONATION 2,507

SP - 3900, DONATION 2,416

RJD - 405, DONATION 397

இவையெல்லாம் இலங்கை யுத்தம் முடிவுபெற்ற காலங்களில்,

2004 - 2005 மற்றும் 2010 - 2011 - ம் ஆண்டுகளில் மிக அதிகமான நன்கொடை பெற்ற கட்சிகள் காங்கிரஸ் - 2008 கோடி, பா.ஜ.க. 994 கோடி, மாயாவதி கட்சி 484 கோடி, மார்க்சிஸ்ட் கட்சி 417 ரூபாய்கள். இவை தவிர தமிழக கட்சிகளை பற்றிய கணக்குகளை பிரிதொரு சமயங்களில் பார்ப்போம். தமிழக கட்சிகள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நன்கொடைகள் வாங்குவதில்லை ஏன் தெரியுமா..? இருக்கும் அணைத்து வித தொழில்கள் செய்யும் கார்ப்பரேட் கம்பனிகளிடம் முதலீடு செய்து பெரும் பங்கை பல ஆயிரம் கோடிகளில் ஆண்டு தோறும் பெறுகிறார்கள் லாபமாக.

இந்த கூட்டத்தில் தான் தொல்.திருமா அவர்களின் கட்சி கடைசியாக சேர்ந்திருக்கிறது. அணைத்து மாநில கட்சிகளும் லட்சம் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறதே என்ற பெரும் வயிற்று எரிச்சலில் உள்ளவரிடம் போய் தமிழ், தமிழ் நாட்டு மக்கள், தமிழர் பூமி என்றெல்லாம் சொன்னால் கடப்பாரை கத்தி,கம்புகளை தூக்கிக் கொண்டு அடிக்க வருவாரா..? மாட்டாரா..? இவருக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் மாநிலத்திலேயே பெரிய கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் என்ன செய்வார்கள். அதுதான் அவர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மேற்கண்டவற்றை பேசுபவர்கள் மீது துப்பாக்கிக் குண்டையும் கொடும் சிறையையும் பரிசாக வழங்குகிறார்கள்.

மக்கள், மக்கள் நலன், நீதி, நேர்மை, தர்மம், மற்றும் தேச நலன் என்று பேசுவதற்கும் செயல்படுவதற்கும் இந்த கட்சிகளுக்கு அதன் தலைவர்களுக்கு ஏதேனும் சிறிய அளவில் கூட நினைப்புகள் இருக்க வேண்டுமா என்ன..? கட்சிகளின் நலன்,

கார்ப்பரேட்கள் நலன் என்பதைத் தவிர

மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.