Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ.அம்மையாரை காப்பாற்றும் மு.கருணாநிதி ..! மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி ஒன்று கூடுகிறார்கள்..மக்கள் விரோதிகள்..? ஈழதேசம் செய்தி..!

Featured Replies

ஜெ.அம்மையாரை காப்பாற்றும் மு.கருணாநிதி ..! மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி ஒன்று கூடுகிறார்கள்..மக்கள் விரோதிகள்..? ஈழதேசம் செய்தி..!

கூடங்குளம் எதிர்ப்புக்கு முதல்வர் ஆதரவு அளித்ததே பிரச்சனைக்கு காரணம் - கருணாநிதி..! இப்போது கூடங்குளம் எதிர்ப்பாளர்களை அடக்கும் ஜெயலலிதா முன்பு உசுப்பி விட்டது ஏன்..? கூடங்குளம் போராட்டம் தீவிரமானதற்கு ஜெ.தான் காரணம் என்று இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி அவர்கள். கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று கவலை கொள்கிறார் மு.க., தமிழக முதல்வர் ஜெ. போராட்டக்குழுவினர் போராட துவங்கிய போது ஆதரவு அளித்ததின் விளைவே தற்போது இந்த அளவுக்கு பிரச்சனை அதிகரித்ததற்கு காரணம் என்று கூறியுள்ளார்.

அதாவது ஆரம்பத்திலேயே கூடன்குள போராட்டத்தை ஆதரித்திருக்கக் கூடாது என்பது தான் இதன் அர்த்தம். அதாவது தி.மு.க.அரசைப் போல, அப்போதே திரு.உதயகுமார் குழுவினரை உள்ளே தூக்கி போட்டிருக்க வேண்டும் என்பதே மு.கருணாநிதியின் ஆலோசனை.

கூடங்குளத்தில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது. ஜெ.அரசு காவல் துறையை பெருமளவில் குவித்து, அவர்கள் மூலமாகவே இந்த போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதுகிறது. துப்பாக்கி பிரயோகம் வரை நடத்தி, ஒரு மீனவரை சுட்டுக் கொன்று காணிக்கையாக்கி இருக்கிறது ஜெ.வின் காவல் துறை என்கிறார் மு.க.,

ஒரு உண்மையை போட்டு உடைத்துள்ளார். இவர் ஆட்சிக்கு வந்தால் இவரது காவல்துறை, அதாவது தி.மு.க.வின் காவல் துறை. ஜெ ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வின் காவல்துறை என்று. நல்லது செய்வதற்கு அல்ல, போராடும் மக்களை ஜெயிலில் போடுவதற்கும், போராடும் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போடுவதற்கும், மீறினால் சுட்டுத் தள்ளுவதற்கும் என்று காவல் துறையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் இதுகாறும்.

மேலும் தனது நீலிக்கண்ணீரை வடிக்கிறார் திரு மு.கருணாநிதி அவர்கள். ஏற்கனவே இலங்கை கப்பல் படையினர் நமது மீனவர்களை சுட்டுக் கொன்று இருக்கிறது என்று சொல்லாமல், அவர்களிடம் இருந்து நமது மீனவர்களை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் நிலைமையில், நமது காவல்துறையே தமிழக மீனவனை சுட்டுக் கொல்வது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்றது என்கிறார். நிவாரணத் தொகை வழங்கி, அந்த மீனவரின் உயிரை திரும்ப கொண்டுவர முயற்சிக்கிறார் என்று.

தமிழக மீனவர்களை காப்பாற்ற எங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள்..? மு.கருணாநிதியும் ஜெ. அம்மையாரும்..? அதாவது மு.கருணாநிதி அவர்கள் மத்திய அரசியல் அங்கம் வகிக்கும் அரசியல் கூட்டணிக் கட்சி, சொல்லப்போனால் மத்திய அரசில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி, எனவே இவ்வளவு கடுமையான மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய அரசு என்ன சொல்லப்போகிறது என்று. காங்கிரஸ் அரசு என்ன சொல்லப் போகிறது என்று..மத்திய அரசின் சார்பில் பேசுகிறாராம். ஆலோசனைகளை புத்திமதிகளை சொல்லுகிறார் ஜெ. அரசுக்கு.

கடந்த ஆண்டில் இதே செப்டம்பர் மாதத்தில் போராட்டக் குழுவினரை அழைத்து பேசி, தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, பின்பு என்ன காரணத்தினாலோ அணுமின் நிலையத்தை திறக்கலாம் என்று கூறிவிட்டு, தற்பொழுது போராட்டக்குழுவின் பிரதிநிதிகளை சந்திக்காமல் திருப்பி அனுப்பிவிட்டு, காவல் துறையை பெருமளவில் குவித்து அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதுவதினால் போராட்டத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது என்று கூறியுள்ளார் மு.கருணாநிதி அவர்கள். அப்படியே சடாரென்று திரு உயதகுமார் பக்கம் திரும்பி, இவ்வளவு செலவு செய்து திறக்கப்படும் நேரத்தில் போராடுவதை விட, கட்டிட ஆரம்ப நேரத்தில் போராட்டத்தை துவங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மத்தளம் வாசிக்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலையம் போராட்டம் ஏதோ போன வருடம் தான் நடப்பது போல, இடையில் மத்திய அரசே நிறுத்தியிருந்தது கூடன்குள கட்டட வேலைகளை, ரசியா நாடு 90 - 92 காலப் பகுதியில் உடைந்த காரணத்தால் நிறுத்தப்பட்டது என்ற நிலையை வசதியாக மறைத்து, தங்களின் தி.மு.க. அரசு 87- 88 காலப் பகுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பிக்கக் கூடாது என்று சட்டசபையில் தீர்மானத்தை போட்டுவிட்டு, பின்பு மத்திய அரசு மிரட்டியவுடன் அணுமின் நிலையத்தை துவக்குவதற்கு ஆதரவு கொடுத்துவிட்டு எப்படி பஞ்சாயத்து செய்கிறார் பாருங்கள். இதோ தோழர் மகிழ்நண்பன் தரும் சான்று. இதோ மு.கருணாநிதி கூறுவது,

[size=3]“1987-88 சமயத்தில் நான் தேசிய முன்னணிக்கு ஆதரவு நிலை எடுத்து முரசொலியில் ஞாயிறு மலரைத் தயாரிக்கும் வேலை செய்துவந்தேன். அப்போது தினசரி சந்திக்கும் முரசொலி மாறனிடம் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும் நண்பர்களும் எடுத்துச் சொன்னோம். [/size][size=3]அதையடுத்து அவர் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போடவைத்தார். அடுத்த சில மாதங்களில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. டெல்லி நிர்ப்பந்தம் காரணம் என்று மாறன் என்னிடம் சொன்னார். ” [/size]

உண்மை இவ்வாறு இருக்க, தற்பொழுது ஜெ.அம்மையாருக்கு அரசியல் வகுப்பு எடுக்கிறார் மு.க.அவர்கள். தங்கள் நலனை அதாவது கார்ப்பரேட் நலனை எவ்வளவு நுணுக்கமாக அரசியல் ஆக்குகிறார் பாருங்கள். நைச்சியமாக பேசி, அரசியல் அறிவு பெற்றவர்களையே ஆமாம்..இவர் சொல்வது சரிதானே என்று சொல்லவைக்கும் திறன் தான் மு.க.வின் அரசியல் செயற்பாடு. தன் நலன் அரசியலை, அதன் அழகுத் தன்மையோடு சொல்லுவதில் மு.க.விற்கு இணை அவர் தான். என்றாலும் முன்பு போல அல்ல மக்கள் தற்பொழுது, தாங்களாகவே போராட ஆரம்பித்து விட்டார்கள். முல்லைப் பெரியாறு மற்றும் கூடங்குளத்தில்.

மக்கள் கைகளுக்கு போராட்டம் சென்றுவிட்டது என்று அபாய மணி அடிக்கிறார். இவருக்குத் தெரியும் மக்கள் கைகளுக்கு போராட்டங்கள் சென்று விட்டால் முதலில் பறிக்கப்படுவது தி.மு.க.வின் சொத்துக்கள் தான் என்று. என்னமாய் யோசனை சொல்கிறார் அ.தி.மு.க.வின் ஜெ.அம்மையாருக்கு. அம்மையார் யார் பேச்சையும் கேட்பது இல்லை என்ற நிலையில், வழக்கம் போல மத்திய அரசு மிரட்டியவுடன் பணிந்து போவது என்ற கொள்கைகளை மட்டும் கெட்டியாக பற்றிக்கொள்வது என்று இருக்கையில், மக்களாவது.... மயிராவது...! என்று கருதும் திராவிடக் கட்சிகள்..?

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.