Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டீசல் விலையை உயர்த்தி, மக்கள் சுதாரிப்பதற்குள் கேஸ் விலையை உயர்த்தி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ் அரசு..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

டீசல் விலையை உயர்த்தி, மக்கள் சுதாரிப்பதற்குள் கேஸ் விலையை உயர்த்தி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ் அரசு..! ஈழதேசம் செய்தி..!

டீசல் விலையை ரூபாய் 5 உயர்த்தியவுடன் கொதித்து எழுந்த மக்களின் கோபத்தை காங்.ஐ, அல்லாத தேசிய கட்சிகள் அனைத்தும் அரசியல் செய்வதற்கு முயலும் முன், சமையல் வாயுவை விலை உயர்த்தி..என்ன செய்யப்போகிறார்கள் அரசியல் கட்சிகள்..? என்று கால அவகாசமே கொடுக்காமல் சில்லறை வணிகத்திற்கு டெஸ்கோ மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்ததின் மூலமாக அணைத்து கட்சிகளையும் முழி பிதுங்க வைத்து விட்டன அன்னை சோனியா காங்கிரஸ் கட்சி.

டீசல் விலையை உயர்த்தியவுடன் மமதா பானர்ஜி அவர்கள் 72 மணி நேரம் காலக்கெடு வைத்தார்கள், இந்த டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று. பா.ஜ.க., மற்றும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விலையேற்றத்தை குறித்து அறிக்கை தயார் செய்வதற்குள் கேஸ் விலையை ஏற்றி, இதற்கும் சேர்த்து போராட்டம் அல்லது அறிக்கை தயார் செய்து கொள்ளுங்கள் என்று இருக்கையில், அதிரடியாக இந்த வெளிநாட்டு சில்லறை நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு அணைத்து எதிர் கட்சிகளையும் ஓரம் கட்டி விட்டது காங்கிரஸ் அரசு.

ஆறு மாதங்களுக்கு தலா ஒரு சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம் இதுவரை வழங்கி வந்த அரசு விலையில், அதாவது ஒரு சிலிண்டர் ரூ. 386.50 என்று ஒரு வருடத்திற்கு ஆறு சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். வெளி சந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.733.50 விலையில் எத்துனை சிலிண்டர் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. அதாவது இந்த வெளி சந்தை சிலிண்டரின் விலை மேற்குறிப்பிட்ட 733.50 விலையில் கிடைக்கும் என்ற உறுதி கிடையாது, அந்த நேரத்தில், மார்க்கெட் நிலவரம் என்னவோ அதற்கு ஏற்றார் போல் விலை உயரும். சுமாராக, 50,100 ரூபாய் என்று விலை ஏறிக்கொண்டே இருக்கும் என்பது தான் அது.

மத்திய அரசில் விடாப்பிடியாக தொங்கிக் கொண்டிருக்கும் தி.மு.க, வின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள் சொல்லி விட்டார் இவ்வாறு, எனக்கு மற்ற கட்சிகள் போல மிரட்ட தெரியாது என்று. எங்களை கலந்து பேசி இந்த விலையேற்றத்தை அறிவிக்கவில்லை என்று. தி.மு.க.வின் கொறாடா பதவி வகிக்கும் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் பாராளுமன்றத்தில் தேங்காய் வியாபாரமா செய்து கொண்டிருக்கிறார்..? காங் ஐ.கட்சி அணைத்து கட்சிகளையும் கூப்பிட்டு கையெழுத்து வாங்கிக் கொண்டு இந்த விலையேற்றம் மற்றும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு திட்டம் என்று அறிவித்து உள்ளார்கள். ஆனால் இவர்கள் மமதா கட்சி உள்பட இந்திய மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வருகிறார்கள்.

இந்த காங் ஐ. கட்சியின் அதிரடி திட்டங்களை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் தேசியக் கட்சிகள் ( தேசியக் கட்சிகள் என்றால், சட்டசபைக்கு போட்டியிடும் அணைத்து மாநிலக் கட்சிகளும் என்று அடக்கம். இன்று மாநில கட்சி என்ற ஒன்றே இந்தியாவில் இல்லை என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு..? ) அனைத்தும் தங்களது அன்றாட வேலைகளுக்கு திரும்பி விட்டார்கள். காட்டாக, தி.மு.க., கட்சியோ முப்பெரும் விழா நடத்த விழுப்புரத்தில் குவிந்து விட்டார்கள். அ.தி.மு.க.,வின் ஜெ. அம்மையார் கட்சத் தீவை மீட்டு எடுக்க வழக்கு போடப் போகிறார்கள். மருத்துவர் ராமதாஸ் அவர்களின் புதல்வர் அன்புமணிக்கு குற்றப் பத்திரிக்கை தயார் செய்து விட்டார்கள். எனவே அவரும் கப்சிப் தான்.

இந்த அணைத்து அதிரடி அறிவிப்புகளையும் முடிவுகளையும் காங்.ஐ. அரசு இவ்வாறு கூறி, அணைத்து மக்களையும் ஆவென்று வாய் பிளக்க வைத்துள்ளது. டீசல் விலை உயர்வு, சமையால் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அந்நிய முதலீடு போன்றவைகள் திரும்ப பெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். மேலும் திக் விஜய் சிங் அவர்கள் கூறுகையில் மகிழ்ச்சி அளிக்காத முடிவுகளையும் எடுக்க வேண்டி உள்ளது என்று கூறி இந்த அணைத்து விசயங்களையும் ஊத்தி மூடிவிட்டார்.

ஆக, மக்களுக்கு அடி மேல் அடி கொடுப்பதின் மூலம் அமைதியை உருவாகி விட்டார்கள் காங் அரசு என்று கருதலாமா..?

சங்கிலிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.