Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கருகும் நிலையில் மரக்கறிகள் கடுமையான வறட்சியே காரணம்; விவசாயிகள் பெரும் திண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடாநாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மரக்கறிப் பயிர்ச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குடாநாட்டில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெப்பநிலை நீடித்து வருகிறது. இந்த வெப்பநிலை காரணமாகத் தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகள் அனைத்தும் வற்றி வறண்டு போயுள்ளன. மக்கள் குடி தண்ணீரைப் பெறுவதற்குக் கூட முடியாமல் அலைந்து திரிகின்றனர்.

குடிதண்ணீர் இல்லாமையால் கால் நடைகளும் ஆங்காங்கே உயிரிழக்கும் சம்பவங்களும் இடம் பெறுகின்றன. இந்த வறட்சியினால் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடா நாட்டில் தற்போது மேற் கொள்ளப்பட்டுள்ள மரக்கறிப் பயிர்ச் செய்கை அந்த வறட்சியில் சிக்கியதால் அதிலிருந்து உரிய பயனைப் பெறமுடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அநேகமான விவசாயத் தோட்டங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. கடும் வெப்பத்தினால் வாடிச் சோர்ந்து காணப்படும் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சி உயிர் கொடுக்க முடியாதநிலையில் விவசாயிகள் உள்ளனர். அதற்கான நீர் கிணறுகளில் இல்லாமையே இதற்குக் காரணம்.

இதனால் குடாநாட்டின் மரக்கறி உற்பத்தி பெரும் இக்கட்டான நிலையை எட் டியுள்ளது. குறிப்பாகத் தற்போது தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வெண்டி, கத்தரி, கோவா போன்ற பயிர்கள் போதிய நீரில்லாமையால் கருகிப் போகும் நிலையில் உள்ளன.

தற்போது பருவமழை ஆரம்பித்திருக்க வேண்டும். அவ்வாறு மழை பெய்திருந்தால் நிலங்கள் குளிர்ச்சி அடைந்திருக்கும். பெரும் போகத்துக்காக அனேகமான விவசாயிகள் மழையை நம்பி காத்திருக்கின்றனர். மழை ஓரளவு பெய்திருந்தால் நீர் நிலைகளிலும் நீரைப் பெறக்கூடியதாக இருந்திருக்கும்.

இதன் மூலம் எமது மரக்கறிப் பயிர் செய்கை காப்பாற்றப்பட் டிருக்கும் என வலி.கிழக்கு விவசாயி ஒருவர் தெரிவித்தார். மழை பெய்யாமல் உள்ளமையாலேயே இவ்வாறான ஓர் இக்கட்டு நிலையை எதிர்நோக்க வேண்டியுள்ள தாக அவர் மேலும் கூறினார்.

இந்த வறட்சியான கால நிலை மேலும் தொடர்ந்தால் விவசாய நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=883501440219778219

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.