Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் மகிந்தவுக்கு எதிராக கண்டனப் பேரணியும் ஒரு கோடி கையெழுத்து வேட்டையும்.

Featured Replies

மானிடத்திற்கெதிராகக் குற்றம் புரிந்தவரும் லட்சத்திற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகளைத் துடிக்கத் துடிக்க உயிரோடு படுகொலை செய்வதற்கு காரணமாக இருந்த சூத்திரதாரியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா வருவதை முன்னிட்டு, மாபெரும் கண்டனப் பேரணியைக் கனடியத் தமிழர் தேசிய அவை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணிவரை யூனிவசிற்றி அவனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் முன்பாக இக்கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் பிரித்தானியாவிற்கு வருகை தந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை ஐரோப்பிய வாழ் எம் தமிழ் உறவுகள் தொடர் முற்றுகைப் போராட்ட மூலம் திரும்பியோட வைத்த வரலாறு எமக்குண்டு.

அதேபோல் இந்தியாவிற்கு சிறிலங்கா ஜனாதிபதி வருகை தருகின்ற போதெல்லாம் நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்களால் முற்றுகைப் போராட்டங்களும் கண்டனப் பேரணிகளும் நடாத்தப்பட்டு வந்ததும் கடந்த வாரம் சேலத்தைச் சேர்ந்த விமலராஜா என்கின்ற இனவுணர்வாளர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வருகையைக் கண்டித்துத் தன்னையே தீக்கிரையாக்கிய கோர நிகழ்வும் நடந்தேறியுள்ளது.

இவற்றை மனதில் கொண்டு கனடாவாழ் தமிழ் உறவுகள் நாம் அனைவரும் ஒன்றாகி ஓரிடத்தில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தாவின் வருகைக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் மாலை 5.00 மணிக்கு ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் ஐ.நா நோக்கிய ஒரு கோடி கையெழுத்து வேட்டையையும் ஆரம்பித்து வைக்கவுள்ளோம்.

தமிழகத்திலே கடந்த மாதம் கனடியத் தமிழர் தேசிய அவையும் அனைத்துத் தமிழகக் கட்சிகளும் இணைந்து ஆரம்பித்து வைத்த ஒரு கோடி கெயெழுத்து வேட்டை சென்னை, திருநெல்வேலி, விழுப்புரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக கனடாவிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சென்னையிலே ஆரம்பிக்கப்பட்ட ஒரு கோடி கையெழுத்து ஆரம்ப நிகழ்வில் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்கள் கலந்துகொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அந்நிகழ்வில், ம.தி.மு.க கட்சிப் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி, தமிழர் தேசிய இயக்க பழ.நெடுமாறன், இடது கம்மினியூஸ்ட் கட்சி முதுபெருந் தலைவர் நல்லகண்ணு மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெரியார் திராவிடக் கழகம் மே 17 இயக்கம் இன்னும் 50 ற்கு மேற்பட்ட அமைப்புக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழீழம் நோக்கிய நகர்வின் மைல் கல்லான இந்நிகழ்வில் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரசின் மீது பன்நாட்டு விசாரணை வேண்டியும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாயக உரிமையைத் தீர்மானிக்க ஐ.நா.மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடாத்தவும் தமிழர்களே உங்களின் கையெழுத்து தீர்மானிக்கட்டும்.

எம்முறவுகள் முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். இதற்காக நாமென்ன செய்யப் போகின்றோம்? சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸவை போர்க்குற்றவாளியாக்கவும் ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத் தரவும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ளவும்.

அத்தோடு மதிப்பிற்குரிய கனடிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒரு கோடி கையெழுத்து வேட்டையை ஆரம்பித்து வைக்கவுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

ஆகவே கனடா வாழ் தமிழ் உறவுகளே தங்களின் வருகையுடன் தங்களின் அயலவர்கள் நண்பர்களான மாற்றின மக்களையும் அழைத்து வருமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டி நிற்கிறது.

http://thaaitamil.com/?p=32784

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.