Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை ஜெனீவாவை நோக்கி செல்வதற்கு தயாராகும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள். (video in)

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் நாளை முடிவடைகின்ற நீதிக்கான மிதிவண்டிப் பயணம் தாயக உணர்வுடன் எழுச்சிமிக்க ஆதரவுடன் ஜனீவாவை நோக்கி நகர்கிறது.ஏழாவது நாளாக நேற்று காலை Bern நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மாலை Renens நகரத்திற்கு வந்தடைந்தது .திட்டமிட்டபடி திரு வைகுந்தன் அவர்கள் நாளை ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஐரோப்பாவில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் கோசத்துடன் நாளை ஜெனீவாவிற்கு படையெடுப்பார்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அந்தந்த நாட்ட தமிழ் ஒருங்கிணைப்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பல நாட்களாக தாயக உணர்வுடன் தமிழ் மக்களின் விடிவிற்காக கால்கள் மரத்துப்போக தளராத வேகத்துடன் விரைந்து செல்லும் வைகுந்தன் அவர்களின் எழுச்சிக்கு உரம் ஊட்டும் வகையில் புலத்தில் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீதி கேட்பதற்கு முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழப் பற்றாளன் வைகுந்தன் அவர்களது நீதி கோரிய மிதிவண்டிப் பயணம் 20.09.2012 நேற்றைய தினம் ஏழாவது நாளாக பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாகத் தொடங்கப்பட்டு 135 கி.மீ கடந்து ரென்னன்ஸ் பகுதியை வந்தடைந்தது.

21.09.2012 இன்று தமிழீழப் பற்றாளன் வைகுந்தன் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களைச் சந்தித்து தனது ஐந்து அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தைக் கையளிக்கவிருக்கிறார்.

இச்சந்தர்ப்பத்தில் நாளை 22.09.2012 சனிக்கிழமை 14.00 மணிக்கு ஜெனீவா ஐ.நா மன்றம் முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெறவிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்வில் எம்முறவுகள் அனைவரையும் அலைகடலென அணிதிரண்டு „எமது நிலம் எமக்கு வேண்டும்’ என உரக்கச் சொல்வோம் எனவும் எம் இலட்சியமாம் தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை தமிழர் நாம் ஓய மாட்டோம் என்பதையும் இவ்வுலகிற்கு இன்னுமொரு முறை உணர்த்திடுவோம் எனவும் அன்புரிமையுடன் அழைப்பு விடுத்துள்ளார்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

078 662 93 06

076 410 06 76

076 421 13 99.

wai4.jpgwai3.jpgwai2-1.jpg

http://thaaitamil.com/?p=32892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.