Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமலை ஜனாதிபதியாக்கும் நாட்டுத் தலைவரின் சூட்சுமம்

Featured Replies

[size=4]நாமலை ஜனாதிபதியாக்கும் நாட்டுத் தலைவரின் சூட்சுமம் [/size]

[size=4]31e4702ed4e9bd9345af4b4e4e85c705.jpg[/size]

[size=4]ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக்கும் திட்டத்தை நிறைவேற்ற இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மட்டுமல்லாது வேறு பல தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. [/size]

[size=4]இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக பதவியில் அமரவேண்டியவர் நாமல் ராஜபக்ஷவே. அவ்விதம் அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தத் தவறினால் அது நாட்டுக்குப் பெருத்த நட்டமாகவே இருக்கும்'' இது அண்மையில் தேசிய இளைஞர் மன்றத் தலைவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்தாகும்.

நாமல் ராஜபக்ஷக்கு அரசியல் பிரபல்யம் தேடிக்கொடுக்க முயலும் தரப்புக்களுடன், தம்மையும் இணைத்துக்கொள்ள முயலும் அதீத அக்கறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவரின் அக்கருத்து மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் பாத்திரம் எத்தகையதாக இருக்கக்கூடுமெனச் சிந்திப்போருக்கு, அவரை இலங்கையின் எதிர்கால ஜனாதிபதியாக்கும் முன்னோடித்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதை இக்கருத்து சூசகமாக வெளிப்படுத்தியுள்ளது.

இன்றைய நவீன இளைய தலைமுறையின் நீண்ட முடி சிகையலங்காரத்துடன் இதுவரை பவனிவந்த நாமல் ராஜபக்ஷவின் அந்த நவீன சிகையலங்காரத்தைத் தற்போது காணமுடியவில்லை. குட்டையாக வெட்டப்பட்ட சிகையலங்காரத்துடனேயே தற்போது அவர் காட்சியளிக்கிறார்.

சட்டத்தரணியாக பிரதமநீதியரசர் முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொண்ட சந்தர்ப்பத்திலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் கைகுலுக்கிக் கொண்ட வேளையிலும் நீளமாக வளர்த்துக்கொண்டிருந்த நவீன சிகையலங்காரம் அப்போது அவருக்கு தடையாக இருக்கவில்லை நாட்டின் ஜனாதிபதியின் புதல்வர் என்ற பிரபல்யம் ஏனைய சட்டத்தரணிகளுக்கு கிட்டாத விசேடசலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அவருக்கு வழங்கியிருந்தது.

ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக்கும் திட்டத்தை நிறைவேற்ற இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மட்டுமல்லாது வேறு பல தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் பின்புலத்தில் பெரும் உந்து சக்தியாகச் செயற்படுபவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்பது சொல்லித்தெரிய வேண்டிய ஒன்றல்ல.

இலங்கையில் அரசியல் வரலாற்றில் நிறைவேற்று ஜனாதிபதிகளாக இதுவரை நால்வர் பதவி வகித்துள்ளனர். அவர்களில் எவரும் இந்த அளவுக்கு அரசின் சொத்துக்களையும் வளங்களையும் தமது பிள்ளைகளின் அரசியல் பிரபல்யத்துக்காக தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டதில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவோ டி.பி விஜேதுங்கவோ, சந்திரிக்காவோ, தமது பிள்ளைகளை அரசியலில் களமிறக்கியிருக்கவில்லை . தம்மைப் போன்று அடிமட்டத்திலிருந்தே அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்பதே தமது புதல்வர் தொடர்பான ஜனாதிபதி பிரேமதாஸாவின் கொள்கையாக இருந்தது.

ஆயினும் அவர் தொடர்ந்தும் உயிருடன் இருந்திருந்தால், தமது புதல்வர் தொடர்பாக எவ்விதம் செயற்பட்டிருப்பார் என்பதை ஊகிக்க இயலாது. மறுபுறத்தில், தமது புதல்வர் ஜனாதிபதி பதவிக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வரையிலும் தாம் தொடர்ந்தும் ஜனாதிபதி பதவியிலிருப்பதற்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளமை தெளிவாகப் புலப்படும் ஒன்றே.

அரசமைப்புக்கான 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டதன் ஊடாக ஒருவர் இருபதவிக்காலங்கள் மட்டுமே அப்பதவியை வகிக்க இயலும் என்ற சட்டவரையறையை அவர் நீக்கிக் கொண்டார். அந்த வரையறை இருந்திருக்குமானால் தமது புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் காலம் வரை அவரால் ஜனாதிபதி பதவியைத் தொடர வாய்ப்புக்கிட்டமாட்டாது.

இவை குறித்து தீர்க்கமாக அலசி ஆராயப்பட்டே, அரசமைப்புக்கான 18 ஆவது திருத்தம் ஊடாக ஒருவர் இரு பதவிக்காலங்கள் மட்டுமே ஜனாதிபதி பதவியை வகிக்க இயலும் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. அத்தோடு எந்தவொரு பதவிக்காலத்தினதும் நான்காண்டுகள் கடந்ததன் பின்னர் தாம் விரும்பும் எச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்தி முடிப்பதற்கும் அத்திருத்தம் அவருக்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளது.

எனவே தொடர்ந்தும் தாம் ஜனாதிபதிப் பதவிக்குத் போட்டியிடாதவிடத்து, நாமல் ராஜபக்ஷவுக்கு அரசியல் நிலைமை சாதகமாக நிலவும் சந்தர்ப்பம் பார்த்து முழுமையான அதிகார பலத்துடனான தமது தலைமையின் கீழ் சகலவிதமான அரசவளங்களையும் பயன்படுத்தி தமது மகனை வேட்பாளராக நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூட்சுமமான வியூகம் எனக் கருதமுடியும்

கபிலவஸ்து புத்தபெருமானின் புனித சின்னம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டமை கூட ஜனாதிபதி தமது புதல்வரை அரசியல் அரங்கில் முன்னிலைப்படுத்தும் திட்டத்தின் ஓர் அம்சமென்றே கொள்ளலாம். அந்தவகையில் இந்தியாவிலிருந்து இங்கு எடுத்துவரப்பட்ட அப்புனிதசின்னம் நாமல் ராஜபக்ஷவின் தலைமையின் கீழேயே மக்களின் தரிசனத்துக்காக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

இதை தந்தையாரால் தனயனுக்கு வழங்கப்பட்ட அரசியல் பிரபல்யம் ஈட்டுவதற்கான நிகழ்ச்சியொன்றாகவே கருதமுடிகிறது. இந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே அரசு மற்றும் அரசுசார்ந்த கட்டமைப்புக்களின் ஆதரவும் உதவிகளும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டு வருவதையும் காணமுடிகிறது. உதாரணமாக, நாமல்ராஜபக்ஷவின் ""இளையோருக்கான நாளை'' அமைப்பிடம் இளையோருக்கான அதிகாரபூர்வ தேசிய இளைஞர் மன்றத்திடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. [/size]

[size=4]

இளைஞர் விவகாரஅமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் அதிகாரங்கள் வெறும் ரப்பர் முத்திரைக்கு ஒப்பான அளவுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன.

இளைஞர் சேவைகள் மன்றம் தொடர்பான செயற்பாடுகளில் நாமல் ராஜபக்ஷவின் அதிகாரமே கொடிகட்டிப்பறக்கிறது. நாமல் ராஜபக்ஷவே நாட்டின் எதிர்கால ஜனாதிபதி என்ற திட்டத்தின் மற்றொரு அம்சமாக அரசின் முழுமையான அனுசரணையுடனான சீ. எஸ். என். என்ற பெயரில் ஊடக இணையத்தள மொன்றும் தற்போது அவரைப் பிரபலப்படுத்தி வருகிறது.

அது ஒருவகையில் ராஜபக்ஷ குடும்பத்தின் ஊடக இணையத்தளமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையின் தரத்தைக் கொண்டுள்ள சி. எஸ்.என். தொலைக்காட்சிச் சேவையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ரகர் விளையாட்டு ராஜபக்ஷ குடும்பத்தவரின் அபிமானத்துக்குரிய விளையாட்டே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நாமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கருதத்தக்க பத்திரிகை ஊடகமொன்று தற்போது அவர் வசத்தில் இல்லையென்றாலும் கூட, அவருக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற போட்டி போடும் பத்திரிகை ஊடகங்கள் நாட்டில் நிறையவே உள்ளன.

அந்த வகையில் மாணவர்களின் இசற் புள்ளி விவகாரத்தில் தலையிட்டும், அந்த விவகாரத்தில் அவரால் எதையும் சாதிக்க இயலாது போன நிலையிலும் கூட அவரது புகைப்படங்களுடன் அவரை முதன்மைப்படுத்தி பிரபலப்படுத்திவிடுவதற்கும் இத்தகைய ஊடகங்கள் கடந்த காலத்தில் மும்முரமாகச் செயற்பட்டிருந்தன.

இறுதியில் அந்த விவகாரம் நீதிமன்றம் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மூலம் தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலொன்றில் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளத்தக்க அடக்குமுறைப்பலமும் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர்கள் வசம் இருப்பதை அண்மையில் கண்டியில் நடந்த ரகர் விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் மிகத்தெளிவாகப் புலப்படுத்தியிருந்தன.

ராஜபக்ஷ புதல்வர்கள் பங்கேற்ற கடற்படை ரகர் விளையாட்டுக் குழுவைத் தோற்கடித்த கண்டி விளையாட்டுக் கழகத்தின் ஆதரவாளர்கள் குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் இதற்குப் பொருத்தமானதொரு உதாரணம். இன்று வரையிலும் அத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்தவொரு மேலதிக நடவடிக்கைகளும் இல்லை.

ரகர் விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டமைக்கு எதிர்விளைவு இவ்வாறானது என்றால் எதிர்கால அரசியல் போட்டியின் போது நிலைப்பாட்டின் பாரதூரம் எவ்வாறமையும் என்பது குறித்து ஊகித்துக் கொள்ள இயலும். உதாரணத்துக்கு கொழும்பு மாநகர சபை தேர்தல் சமயத்தில் கொழும்பு நகர சேரிப்புற குடியிருப்பாளர்களிடம் அரசுக்கு வாக்களிக்காது விடில் நடுத்தெருவில் அந்தரிக்க நேரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அச்சுறுத்தல் விடுத்திருந்ததை ஞாபகப்படுத்த முடியும்.

இது மஹிந்த சிந்தனை காட்டி நிற்கும் நாமல் ராஜபக்ஷவின் தோற்றப்பாடாகும் .

இன்று மஹிந்த ராஜபக்ஷவின்ஆதிக்கத்திற்குத் தலைவணங்கி செயற்படும் சுதந்திரக்கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ஷவின் ஆதிக்கத்தின் கீழ் தலைதாழ்த்திச் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

ஐ.தே. கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் எதேச்சதிகாரப்போக்குக் குறித்து விமர்சித்துவரும் அவர்கள், தாம் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் கொத்தடிமைகளாயிருப்பதை மறந்துபோயிருப்பது ஆச்சரியமே என்றாலும் சுதந்திரக்கட்சியை பண்டாரநாயக்க குடும்பத்தவரிடமிருந்து விடுவித்து ராஜபக்ஷ குடும்பத்திடம் இணைத்துவிட்ட தமது புரட்சிகரமான செயலையிட்டு அவர்கள் ஒருவகையில் திருப்திப்பட்டுக்கொள்ளமுடியும். [/size]

[size=4]தமிழில் : கே.எஸ்.எம்[/size]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5625337902610104[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.