Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலட்சியத்துக்கான புலிட்ஸர்.

Featured Replies

குற்றவுணர்வு ஒரு கொடும் வியாதி. தன்னாள்கைக்குட்பட்ட முயற்சியின் மூலம் சாதிக்கக்கூடியதென்று தெரிந்திருந்தவொரு காரியத்தை, தவறவிட்டதனால் ஏற்படும் பாதிப்பு இன்னொருவனின் துன்பத்துக்கு காரணமானதென்று தெரிகின்றபோது எழுகின்ற மனவலி கொடிதினும் கொடிது! தன் மனச்சாட்சியோடு சமரசம் செய்து கொள்ள முடியாத நல்லாத்மாக்கள் குற்றவுணர்வினால் காயப்படுவதில்லை.

தவறென்று தெரிந்த பின்பும் திருத்திக் கொள்ளாத மனிதர்களிடம் உணர்வே இருக்காத போது, குற்றவுணர்வு மட்டும் எப்படி வந்துவிடப் போகின்றது. தென்னாபிரிக்காவின் மேற்கு மலைத்தொடரின் பசிய போர்வையின் கதகதப்பினால் செழிப்புற்ற நகரம் ஜொஹானர்ஸ்பேர்க்.

கிரிக்கெட் பிரியர் நீங்களாயின், உங்களுக்கு இவ்விடம் இலகுவில் மறக்க முடியாத ஒன்று! தென்னாபிரிக்க அணிக்கெதிராக ஆஸ்திரேலியா பெற்றுக் கொண்ட உலகசாதனையான அதிகூடிய ஒருநாள் போட்டியொன்றின் ஓட்ட எண்ணிக்கையை, அடுத்த மூன்றரை மணி நேரத்தினுள் விரட்டிக் கலைத்து வெளுத்துக் கட்டிய தென்னாபிரிக்கர்களின் சாதனை பூமி! அங்கே பிறந்த ஹெவின் கார்ட்டர் தனது இருபத்தியிரண்டாவது வயதில் பிறந்த நாள் பரிசாகக் கிடைத்த புகைப்படக் கருவியை ஆழ்ந்து காதலிக்கத் தொடங்கினான். "பப்பராஸிகள்' என்கின்ற பிரபலங்களைத் துரத்திப்படம் பிடித்து பிரபல்யம் ஆகின்ற புகைப்பட விற்பனைத் தொழில் பிரபல்யம் பெறத்தொடங்கிய காலத்தில், தனது எதிர்காலம் ஒளியோடும், இருளோடுமே இனிமேல் என்கின்ற முடிவுடன் புறப்பட்டான் ஹெவின்.

மூத்தவர்களின் குழுக்களில் சாதாரண ஒளிமானி வாசிப்பாளனாக தன்னை அறிமுகப்படுத்தி பல்வேறு தேசங்களுக்கும் அலைந்து திரிந்தவன், சரியாக பதினொரு வருடங்கள் தனக்கான அடையாளத்தைப் பெற காத்திருக்க நேரிட்டது.

இன்றைக்கு சுதந்திர பூமியான, ஐக்கிய நாடுகள் சபையின் 194 ஆவது நாடான தென்சூடானின் மக்கள் கடுமையான பஞ்சத்திற்குட்பட்டு, ஒரு குவளை தண்ணீருக்காக உலகிடம் கையேந்தி இரந்து நின்ற 1993 ஆம் ஆண்டின் ஒருநாளில், தோளில் கனக்கும் ஒளிப்படக்கருவியுடன், அழுக்கு நிறைந்த ஆடைகளுடன், பறக்கும் தலைமுடியை விரல்களால் கோதியபடி தனக்கான இலக்கினைத் தேடிநடந்தான் ஹெவின்.

அடுத்தடுத்த மாதங்களில் "நியூ யோர்க் டைம்ஸ்'' பத்திரிகையில் தன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகும் வரை, அந்த நொடி பற்றிய எவ்வித சலனமும் இளம் கலைஞனிடம் ஏற்பட்டிருக்கவில்லை. புகழ், பெயர், பணம் என்று ஆர் முடுகி விதைத்த குறித்த புகைப்படம், புகைப்படத் துறையின் உயர்விநோத 1994 ஆம் ஆண்டுக்குரிய "புலிட்ஸர்'' விருது வரை உயர்ந்து ஓய்ந்தபோது, ஹெவினின் பிட்டம் வழியேறிப் பின்தலையில் கெட்டியாக உட்கார்ந்து கொண்டது அட்டமத்துச் சனி!

உணவு வழங்கப்படும் நிவாரண முகாமொன்றினை நோக்கி நடக்க சக்தியில்லாமல் கைகளையும் ஊன்றி, தவழ்ந்து நகர முயன்று களைத்துக் கிடக்கின்ற வெற்றுமேனிப்பாலகி! அவள் பின்னால், தன் பசியாற்றும் கணத்துக்காக காத்திருக்கின்ற பிணந்தின்னிக் கழுகு ஒன்று! வேட்டை மிருகமொன்றின் முன்னால் பலியாகப் போகின்ற சக மானிடனைக் காப்பாற்ற முனையாமல், படமெடுத்த தோடு மட்டும் திரும்பி வந்து பிணம் பார்த்த ஹெவின் காட்டரை கலைஞனாகப் பார்க்காமல், அலட்சியக் கொலைஞனாக கேள்விகளால் துளைத் தெடுத்தது இந்தப் பொல்லாத உலகு!

"தவறுதலாக நடந்து விட்டது'', "நான் அப்படி நினைக்கவில்லை'', "எனக்கு முன்னாலும் பலர் கடந்து சென்றார்கள்'' என்று ஹெவின் சொன்ன வார்த்தைகள் எவற்றையுமே எவரும் நம்பத் தயாராக இல்லை! "கைகளில் அந்தக் குழந்தையை தூக்கி, அருகில் இருந்த முகாமில் சேர்க்க தவறியமை'', "தன் பையிலிருந்த உணவையாவது கொடுக்க முயன்றிராமை'', "கல்லெடுத்து வீசி கழுகை விரட்ட தவறியிருந்தமை'', "இரண்டு உயிர்களில் எதனுடைய பசி இறுதியில் வென்றது என்பது பற்றித் தெரிந்திராமை'' போன்ற நீதியான மனமொன்றின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அழகிய ஜெஹானர்ஸ் பேர்க் கடற்கரையில் தன் காரினுள், தூக்க மாத்திரைகளால் தன்னுயிரை மாய்த்துக் கிடந்தான் ஹெவின் கார்ட்டர்! அவன் கைகளில் கிடந்த காகிதத் துண்டில், இருந்த "என்னை மன்னித்து விடுங்கள்'' என்கின்ற இறுதி வார்த்தைக்கு இன்று வரைக்கும், எவருமே மன்னிப்பொன்றினால் பதிலளிக்கத் தயாரில்லை.

கணத் தவறுதான் ஆயினும் அது மனித குலத்தின் களங்கம்! கேப்பாப்பிலவு மக்கள்! அன்றைக்கு சூடானியச் சிறுமி ஒருத்தி இரையாகக் காத்துக் கிடந்ததைப் போல, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதத் தனியன்கள் வேட்டை மிருகங்களின் காட்டில் தனித்து விடப்பட்டனர்.

எந்தப் பிணம் புணரும் தசை விரும்பிகளின் இரத்த வெறிக்குப் பயந்து, உயிர் ஒளித்தோடி இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன் அகதிகளாக வெளியேறினார்களோ, அதே மிருகங்களுக்கு முன்னால் தனித்து விடப்பட்டுள்ள இந்த மனிதர் கூட்டம் சாகப்பயந்திராத அசாதாரணர்களல்லர்! பெண்களும் சிறுவர்களும் பெரும்பான்மையினராய் நிரம்பியிருக்கின்ற அவர்களினுள், அடிப்படை வசதிக் குறைவு என்கின்ற நிரவப்படாத நோய் இன்னுமொரு பலி வாங்கிவிடக்கூடாதேயென்கின்ற அச்சம், எல்லோர் கண்களிலும் கூடு கட்டி நின்றிருந்தது.

"தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்', "மனித சஞ்சாரம் காணாமல் நீண்டு வளர்ந்த காட்டுச் செடிகள்', வெடிக்கும் அபாயத்தினை இன்னும் இழந்திடாத ஆயுத எச்சங்கள்' ,"கரிய நிறத்தில் தூய்மைப்படுத்தப்பட்டிராத கிணற்றுத் தண்ணீர்',"முள் வேலிகளால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள இராணுவ வலயங்கள்', "கம்பிகளுக்கப்பால் கைகளில் சுடு கருவிகளோடு வக்கிரம் காக்கும் கண்களோடு சீருடைப் பேய்கள்' இவைதான் இன்றைய பொழுது வரை கேப்பாப்பிலவு, மந்துவில் போன்ற கிராம மக்களுக்காக முல்லைத்தீவின் அரச பணியாளர்கள் யாவரினதும் கடின உழைப்பின் (?) பயனாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வாழும் வசதிகள்! மர நிழல்களில் இறக்கிவிட்டு, பொதி செய்த சமைத்த உணவினை எறிந்து விட்டு நகர்ந்து விட்ட அரச இயந்திரத்தினர்களில் எவனுமே தமிழனில்லையா?

அறிவித்த நேரத்திற்கு அரைமணி மேலதிகமாக மின்சாரம் தடைப்பட்டிருந்தால், தொலைபேசிக்கு பதிலளிக்கும் மின்சார சபை ஊழியருக்கு எவ்வளவு வசை விழுந்திருக்கின்றது? வாங்கிய அரிசியில் மிக மிக சொற்பமாக, மண்ணெண்ணெய் வாடை அடித்தாலே போதுமே, கூட்டுறவுக் கடை முகாமையாளரைக் "கொலைவெறியுடன்'' திட்டியிருக்கின்றீர்களா இல்லையா? குழாய்க் குடி நீரை திறந்து மூட வரும் மாநகர சபை ஊழியன், வெறும் இரண்டு நிமிடம் முந்தி வந்து நிறுத்த முயன்றாலே ஏதோ செய்கூலி, சேதாரத்துக்கு பேரம் பேசுபவர்களின் கணக்காய் எவ்வளவு நியாயம் கேட்டு வார்த்தை களை வீசி இருக்கிறீர்கள்?

கேபிள் தொலைக்காட்சியில் சன் ரீ.வி வராமல் போய் விட்ட நாளில், இணைப்புச் சரி பார்க்கும் பையனின் கைத்தொலைபேசிக்கு எத்தனை அழைப்புக்களை விட்டிருக்கின்றீர்கள்?

இவையெல்லாம் உங்களுக்கு மட்டும் ஆடம்பரமாக இல்லாமல் அத்தியாவசியமாக தெரியும்போது, பால்மா இல்லையே? குடிநீர் இல்லையே? மலசலகூடம் இல்லையே? மரநிழலைத் தவிர வேறு இடம் இல்லையே? மறுநாள் சமைக்க நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லையே? என்கின்ற கூக்குரல்கள் எவையுமே ஏன் வலிக்கவில்லை இன்னமும்?

உனக்கு வந்தால் "இரத்தம்'' அயலா னுக்கு வந்தால் "தக்காளிச் சட்னியா''?

லட்சங்களில் பொறுக்கித் தின்னும் அரசியல்வாதிகளாயினும், பல ஆயிரங்களில் பிச்சையெடுக்கும் அதிகாரிகளாயினும், சில ஆயிரங்களில் "சுட்டு' சேமிக்கும் அரச ஊழியர்கள் ஆயினும், தவறிய கடமை தன் சக மனிதனின் உயிர்பாதிப்பிற்கு நிகரானதென்பதை ஏனைய்யா உணர மறுக்கிறீர்கள்? ஆபத்து நிறைந்து பூமியில் இறக்கி விடுவதைப் பூர்த்தியாக்கும் உங்களுக்கு மேல் உள்ளவனின் உத்தரவை நிறைவேற்றுவதில் உள்ள திருப்தி மட்டும்தான் மனு தர்மமா?

வவுனியா காளிகோயிலில் தேங்காய் உடைத்து, கிளிநொச்சி சந்தியில் பதாகை ஏந்தி ஆர்ப்பரித்தால் மட்டும் தீருமா இந்த இழிநிலை? எப்போது போராடஎழுந்தாலும், "காய்' எப்போது "கனியாகும்' என்று மட்டுமே பேச்சுப் பல்லக்கில் ஏறுபவர்களே? ஏனடா வேரை விசாரிக்க அடிக்கடி மறந்து போகிறீர்கள்? தவித்த வாயோடு தாய்மடி மீது இளைத்துறங்கும் கேப்பாப்பிலவு மண்ணின் குழந்தையொரு வனிலிருந்துதானே தொடங்குகின்றது தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர் என்கின்ற அறவுண்மையை மறுத்துப் பேசும் வேட்டிகள் யாவையுமே வெண்மையா?

ஊருக்கு உண்மை சொல்லப்போன செய்தியாளன், களபூமியில் தடுத்து நிறுத்தப்படும்போது ஏன் அவ்விடத்தில் எந்த தமிழ்த்தேசியவாதியும் நின்றிருக்கவில்லை? இரவிரவாக மரநிழலில் தான் உறங்கப்போகிறார்கள் என்று தெரிந்த பின்னரும், "பிக்கப்பில்' விரைந்து வீட்டுக்குப் போன அரச நிர்வாகிகளின் சம்பளம் குபேரனின் நேரடிக் கஜானாவிலிருந்தா சொரிகிறது? தமிழ்த்தேசியம் என்கின்ற தீராக் கனவின், அடிப்படை அலகுகள் ஒவ்வொரு ஏழைத் தமிழனும்தான் என்கின்ற தெளிவினை உணரும் வரை உங்களுக்கும், "ஹெவின் காட்டருக்கும்' குறைந்த பட்சம் "ஆறு வித்தியாசம்' கூட கண்டுபிடிக்க முடியாது எவராலும்?

சக இனத்தவரின் அழுகுரல் அதீதித்து ஒலிக்கும் அவல வேளைகளில், ""கட்சியாகப் பதிந்து கொள்வதற்காக கடிபடும் பஞ்சாயத்துக்களும்'', ""பத்திரகாளி அம்மன் வாயிலில் மாலை சூடி புளகாங்கிக்கும் பொழுதுகளும்'', ""இன்னமும் முஸ்லிம் காங்கிரஸின் வாயைப் பார்த்து ஏங்கி நிற்கும் இழிவுகளும்'', அவ்வளவு கொள்ளை அழகா தோழர்களே! குற்றவுணர்வென்ற கொல்லும் மனச்சாட்சி நிறைந்த நேரிய மனம் தங்களிடம் மீதமிருக்குமாயின், அடுத்தடுத்த தசாப்தங்களில் வரலாற்றின் பக்கங்கள் கேப்பாப்பிலவு மக்களின் கதைகளை கண்ணீர் சொரிந்து சொல்லுகையில், அந்த நேரம் அந்தி நேரம் தங்களுக்கும் தூக்க மாத்திரைகளோ, முழக்கயிறோ, நச்சுப் போத்தலோ நிச்சயம் தேவைப்படும். அக்கணம் வரைக்கும் குற்றவுணர்வின் முன்னோடி, இன்னமும் மன்னிக்கப்பட்டிராத "ஹெவின்' மட்டுமே! ""நாளைக்கும் நிலவு வரும், நாம்.......?''

செந்தூரி

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.