Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரைட்டு...! சைத்தான்கள் கப்பலில் வருது..?! வருவது பசில், ஜகத் ஜயசூரியா தான்..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

[size=4]ரைட்டு...! சைத்தான்கள் கப்பலில் வருது..?! வருவது பசில், ஜகத் ஜயசூரியா தான்..! ஈழதேசம் செய்தி..! [/size]

[size=4]

தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும் இலங்கை சவால்..! [/size][size=4]

இந்திய - இலங்கை ஒத்துழைப்புக்கு ' சிறிய பிரதேசம் ' ( அதுதான் தமிழகம்..) சவால் விட முடியாது - இலங்கை..! [/size][size=4]

இந்திய அரசை இயக்குவது ராஜபக்சே கூட்டம் - வைக்கோ குற்றச்சாட்டு..! [/size][size=4]

இந்தியாவில் இலங்கை ராணுவத்தினர் பயிற்சி மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் - பசில் ராஜபக்சே..![/size]

[size=4]

தமிழ் நாட்டில் இலங்கை ராணுவத்தினர் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழ் நாட்டில் பக்தி சுற்றுலா மேற்கொண்டபோது தமிழகத்தில் உள்ள கட்சியினரால் தாக்கப்பட்டதையும் இலங்கைக்குச் சென்றிருக்கும் இந்திய பத்திரிக்கையாளர்களிடம் தங்களது கண்டனங்களை பசில் ராஜபக்சே தெரிவித்தார். [/size]

[size=4]

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள நட்புறவுக்கு மிக நீண்ட வரலாறு உள்ளது, மேலும், சீனாவில் பயிற்சி பெறுவதைவிட இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ பயிற்சி மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் என்றார் பசில். [/size]

[size=4]

சரி தான் பசில் அவர்களின் யோசனையும் முடிவும்..? ஆமாம் அப்படி என்னதான் பயிற்சி எடுக்கிறது இலங்கை ராணுவம்..? சீனா தானே.. அமெரிக்காவிற்கு நிகராக நவீன ராணுவத்தை வைத்திருக்கிறது. ஆக இத்துப்போன பாகிஸ்தான் நாடும்[/size][size=4]

கமிசன், ஊழல், லஞ்சம் இவைகளில் எப்பயாவது அல்ல....! எப்பொழுதுமே சிக்கிக் கொள்ளும் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றால் சிறப்பாக இருக்கும் என்கிறார். அதெப்படி சிறப்பாக இருக்கும்..? யாருக்கு எவருக்கு என்றெல்லாம் கேள்விகளை கேட்க வேண்டாம். சீனா ராணுவம் அதிகமாக கமிசன் கொடுக்க முடியாது. ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அங்கு. கமிசன் கொடுக்கப்பட்டது தெரிந்தால் தலையை எடுத்து விடுவார்கள் வேறு. கமிசனுக்கு ஆசைப்பட்டு யாராவது தலையை கொடுத்து விட்டு முண்டத்தோடு திரிவார்களா என்ன..? [/size]

[size=4]

இந்திய ராணுவத்தில் கணக்கு வழக்குகளே கிடையாது. இலங்கை அரசு யுத்தத்திற்குப் பிறகு ட்ரைனிங் எடுப்பதற்கு என்று எவ்வளவு பட்ஜெட் போட்டு நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்..? அந்த நிதியில் இந்திய ராணுவம் மற்றும் பாக் ராணுவம் பயிற்சி கொடுக்கும். ஒரு நடைக்கு ( அதுதான்... ஒரு டீம் வந்து இங்கு தங்கி, பயிற்சி எடுத்து, இன்பச் சுற்றுலா மற்றும் பல போக்குவரத்து செலவுகள் உள்பட...! ) சுமார் 5000 கோடி என்று வைத்துக் கொள்வோம்.எப்படியும் இந்த தொகையில் தோராயமாக ஒரு 3000 கோடி ரூபாயை ஆட்டையை போட்டுவிட மாட்டார்களா என்ன..? மகிந்தா ராஜபக்சே குடும்பம். [/size]

[size=4]

பாகிஸ்தான் ராணுவத்தில் ட்ரைனிங் எடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நடைக்கு ...ஒரு 4000 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். பாக் ராணுவம் என்ன செய்யும்..? கூட 500 கோடியை கமிசனாக கொடுத்து, மகிந்தா குடும்பத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க அடிப்பார்களா..? மாட்டார்களா என்ன. ஏனென்றால் நட்பு நாடு இலங்கைக்கு ராணுவ பயிற்சி கொடுக்கிறோம் என்று கூறி பாகிஸ்தான் பட்ஜெட் தொகையில் இருந்து ஒரு 8000 கோடியை சுருட்டுவார்களா மாட்டார்களா..? என்ன. [/size]

[size=4]

எனவே தான் கோபம் கொப்பளிக்க இலங்கை ராணுவத் தளபதி இவ்வாறு கூறுகிறார். தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம். வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்பு படையணியை சேர்ந்த 45 உயரதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர். முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும் என்கிறார் ஜகத் ஜயசூரியா. [/size]

[size=4]

ஆகா..! உயர் அதிகாரிகளின் சிறப்பு பயிற்சி வேறு உள்ளது. அப்படியெனில் 'அமவுண்ட்டை' கூட்டிக் கொள்ளுங்கள். இதுவரை இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் 800 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம் என்றார் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜகத் ஜயசூரியா அவர்கள்.[/size]

[size=4]

இரண்டு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு உள்ளது. சிறிய பகுதியான தமிழகம் ஒன்று செய்ய முடியாது. முடிந்தால் தடுத்தப் பாருங்கள் என்கிறார் ஜகத். பிறகென்ன யாராவது எதையாவது செய்ய முடியுமா என்ன..? [/size]

[size=4]

சங்கிலிக்கருப்பு [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.