Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கம்பளிப்பூச்சியின் கதை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]

[size=2]

[size=4]நமது இதிகாசங்களும் புராணங்களும் இன்னபிற பண்பாட்டுச் சாதனங்களும் நமது பொதுப்புத்தியிலும் நம்ம வீட்டு பெண்களின் பொதுப்புத்தியிலும் மிகுந்த சூழ்ச்சியோடு ஏற்றி வைத்திருக்கும் கருத்துக்களில் ஒன்றுதான் “ கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருசன் “ என்பது. இதை ஒரு கருத்தாகவன்றி தங்களின் வாழ்க்கை தத்துவமாகவே நமது பெண்கள் வரித்துக்கொண்டுவிட்டனர். அது நம்மைப்போன்ற வல்லாட்டம் போடும் ஆண்களுக்கு மிகுந்த வசதியாகப் போய் விட்டதால், ‘ஆமாமாம்..பேஷ்..பேஷ்..அப்படித்தான் பொண்ணா லட்சணமா சமர்த்தா நடந்துக்கணும்‘ என அதற்கு அவ்வப்போது தூபம் போட்டு வளர்த்தும் வருகிறது ஆணாதிக்கச் சமூகம். அந்த பித்தலாட்டத்திற்கு வலு சேர்க்கத்தான், புருசனை விலைமாது வீட்டுக்கு கூடையில் வைத்து தூக்கிக்கொண்டு போனாள் உத்தமப் பத்தினி நளாயினி என்று கதைக்கட்டிவிட்டோம். அதையும் நம்பித்தான் நம்ம வீட்டு பெண்களும் வெள்ளிக்கிழமையானால், காக்க காக்க கணவனைக் காக்க.. என்று விளக்கும் கையுமாக குத்துவிளக்கு பூஜைக்கு போய்வந்து கொண்டிருக் கிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]பெண்களைச் சுற்றி இறுக்கிக்கட்டப்பட்ட இந்தச் சனாதனச் சங்கிலியின் கண்ணிகளில் எங்காவது லேசான விரிசல் தென்பட்டாலும் உடனே பதறிப்போய் விடுகிறோம். ஊடகச் சாத்தான்களின் உதவியுடன், பச்சை புடவை கட்டு...மஞ்சள் ஜாக்கெட்டு போடு...ஐந்துமுக விளக்கு ஏற்று...வாசலில் மாவிலைச் செருகு... சஷ்டி..புஷ்டி..என புதியபுதிய சாஸ்திர சடங்குகளை உருவாக்கி எப்போதும் கடவுளுக்கும் கணவனுக்கும் விசுவாசமாகவே இருக்குமாறு பார்த்துக்கொள் கிறோம். அப்படியும் அடங்கிக்கிடக்கிற பெண்களை சும்மா விடுவதுமில்லை. நமது வன்முறை வன்மங்களை அரங்கேற்றுவதற்கான சோதனைச்சாலையாகவே அவர்களை எப்போதும் வைத்திருக்கிறோம். அதன் கோரமுகத்தைத்தான் சமீபத் தில் அஸாமின் வீதிகளில் ஒற்றைப் பெண்ணை விரட்டிவிரட்டி வேட்டையாடிய ஆண் மனத்தின் வெறியாட்டத்தை கண்டு நாடே அதிர்ந்து கிடக்கிறது.[/size][/size][size=2]

[size=4]கருத்தால் அடக்கிவைத்திருக்கும் பெண்களை, கரத்தாலும் அடக்கி ஒடுக்குகிற கொடுமை வரலாறு நெடுகிலும் நடந்தேறி வந்திருக்கிறது. ஆதியில் காடுபிடிக்க நடந்த மோதல்களிலும் பின்னர் நாடு பிடிக்க நடந்த போர்களிலும் முதல் களப்பலியானது பெண் இனம்தான். போர்களின் வன்முறைக்கும், அதன் பேரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமைக்கும் ஆளான பெண்களின் துயரமிக்க பாடல் இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. இந்த நவீன யுகத்திலும் அந்த வன்முறை தொடர்வதற்கும், துரத்திதுரத்தி குதறும் வல்லூறுகளின் பிடியிலிருந்து தப்பிக்க கதறியபடியே பெண்கள் ஓடிக்கொண்டேயிருப்பதற்கும் சமீபகால ரத்த சாட்சியாய் முள்ளிவாய்க்காலின் பேரோலம் பதுங்குகுழிகளிலிருந்து இன்னமும் முடிவுறாத் துயரப்பாடலாய் தமிழ் நிலப்பரப்பின் நெஞ்சறுத்துப் பாய்கிறது. அந்த ஓலத்திற்குமிடையே அவர்கள் குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கிறார்கள். என்ன துயரம்தானென்றாலும் அவர்கள் கணவனுக்கான கடமைகளையும் செய்துதான் தீரவேண்டும் என்று சமூகம் விதி செய்துவைத்திருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்த சமூக விதியை நிறைவேற்றவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் ஒரு ஜப்பானியப் பெண்ணின் மனப்போராட்டங்களை அதிரவைக்கும் காட்சிகளுடன் பதிவுசெய்திருக்கும் படம்தான் “ கேட்டர்பில்லர் “ ( CATERPILLAR ).[/size][/size][size=2]

[size=4]1940 ஆம் ஆண்டில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே இரண்டாவது யுத்தம் நடந்து கொண்டிருக்கும் சமயம் அது. அப்போது ஜப்பானியக் கிராமங்களிலிருந்து போர்முனைக்கு ராணுவ வீரர்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். அது ஒரு உணர்வுபூர்வமான சடங்காகவே நடக்கிறது. ஊரே ஒன்றுகூடி தங்கள் கிராம வழக்கப்படி புதிய வீரனை போர்முனைக்கு வழியனுப்பிவைக்கிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]அப்போது ஒருநாள் போர்க்களத்திலிருந்து ராணுவத் தளபதி குரோகாவாவை அவனது கிராமத்திற்கு திரும்ப கொண்டுவருகிறார்கள். போரில் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் இழந்துவிட்ட குரோகாவாவை சகவீரர்கள் தூக்கிவந்து அவனது வீட்டில் வைக்கிறார்கள். கூடவே போரில் அவன் பெற்ற பதக்கங்களையும், அவனது போர் சாகசம் பற்றிய செய்திகளடங்கிய புகைப் படத்தையும் கொண்டுவந்து வைத்துவிட்டு மரியாதை செலுத்திவிட்டு சென்று விடுகின்றனர். கைகால்கள் வெட்டப்பட்டு முண்டமாகக் கிடக்கும் குரோகாவைக் கண்டு அவனது மனைவி ஷிகேகோ அதிர்ச்சியடைகிறாள். அவனது அந்தக் கோலத்தை காணச் சகிக்காமல் வீட்டைவிட்டு வெளியே ஓடுகிறாள். சேற்றில் விழுந்து புரண்டு கதறிக்கதறி அழுகிறாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களும் அவளது கணவனின் சகோதரனும் அவளை ஆறுதல்படுத்துகின்றனர்.[/size][/size]

[size=2]

[size=4]‘’ குரோகாவா இப்போது போர்க்கடவுள் ஆகிவிட்டான். அவனை நன்கு பராமரிக்க வேண்டியது மனைவியாகிய உனது கடமை. இது ஒரு புனிதமான பணி. இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது. இந்தப்பணியை நன்றாகச் செய்து நல்ல மனைவியாக நடந்துகொள்...’’ என்று ஊர்மக்கள் ஷிகேகோவுக்கு புத்திமதி சொல் கின்றனர். அதோடுக்கூட அவனை போர்க்கடவுளாகவும் கொண்டாடி மகிழ்கின்ற னர். போர்க்கடவுளாகிவிட்ட தன் கணவனை, ஷிகேகோ எப்படி கவனித்துகொள்ளப்போகிறாள், மனைவிக்கான தனது கடமையைச் சரியாக நிறைவேற்றுவாளா, அதன்மூலம் நாட்டுக்கும் நாட்டின் மன்னருக்கும் எப்படி மரியாதை செய்யப்போகிறாள்..என ஊரே அவளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]கல்லானாலும் என்ன..புல்லானாலும் என்ன..கைகால் போன முண்டமானாலும் என்ன...கணவன் என வந்துவிட்டால் அவனை மனம் கோணாமல் கவனித்துக் கொள்வதுதானே ஒரு நல்ல மனைவியின் கடமை. அது இந்தியப்பெண்ணானாலும் சரி..ஜப்பானியப் பெண்ணானாலும் சரி.. அதுதானே பெண்களுக்கென விதிக்கப்பட்டது. அதற்கு ஷிகேகோ மட்டும் விதிவிலக்கா என்ன..! வீட்டின் கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கணவனை அருகில் நெருங்கி வந்து பார்க்கிறாள்.[/size][/size]

[size=2]

[size=4]போரில் கைகால் போனது மட்டுமன்றி, தொண்டை அறுபட்டதால் அவனால் பேசவும் முடியாது. சகிக்கமுடியாத ஒருவித ஒலியைமட்டுமே அவனால் எழுப்பமுடிகிறது. சிறுநீர் கழிக்கவும், மலம் கழிக்கவும்கூட அவனுக்கு பிறரின் உதவி தேவை என்ற நிலைதான். எப்போதும் படுக்கையில் கிடந்தபடியே, தனக்கு வழங்கப்பட்ட பதக்கங்களையே வெறித்துப் பார்த்தபடியே கிடக்கிறான். ஆனால் அவனுக்கு எப்போதும் பசித்தபடியே இருக்கிறது. அதை புரிந்து கொள்ளும் ஷிகேகோ, அவனுக்கு உணவை புகட்டுகிறாள். எவ்வளவு சாப்பிட்டாலும் அவனுக்கு மீண்டும்மீண்டும் பசிக்கிறது. அவளும் அதை உணர்ந்து உணவை தந்துகொண்டே இருக்கிறாள். ஆனாலும் அவனது தீராப்பசியை போக்க வழிதெரியாமல் தவிக்கிறாள்.[/size][/size]

[size=2]

[size=4]வயிற்றுப்பசி தீர்ந்தவுடன் அவனுக்கு உடல்பசி கிளம்புகிறது. போர்க்களத்தில் அவன் வன்புணர்ச்சி செய்த காட்சிகள் நினைவுக்கு வந்து அவனுக்குள் காமத்தை கிளறுகிறது. நகரக்கூடமுடியாத அந்த நிலையிலும் அவளது ஆடையின் நாடாவை பற்களால் கடித்து இழுக்கிறான். அவனது தேவையை புரிந்துகொள்ளும் ஷிகேகோ, அதையும் தானே நிறைவேற்றிவைக்கிறாள். காமம், பசி இரண்டும் அவனை புரட்டியெடுக்கிறது. அவளும் அதை புரிந்துகொள்வதுடன், வேறு வழியும் இல்லாததால் அதை ஒரு கடமையாக நிறைவேற்றித்தருகிறாள். ஒரு சந்தர்ப் பத்தில் அவனது பாலியல் தேவைக்கு அவள் ஒத்துழைக்க தயங்கும்போது, அவன் அவளை தாக்க முயற்சிக்கிறான். ஆனால் கைகால் இல்லாததால் தாக்க அவனால் முடியவில்லை. அவனது மனவோட்டத்தை புரிந்துகொள்ளும் அவள், ‘‘என்னை அடிக்க வேண்டும்போல இருக்கிறதா.. அதற்குத்தானே உள்ளுக்குள் ஆசைப் படுகிறாய்.. உன்னால் முடிந்தால் அடித்துக்கொள்..’’ என்று ஆவேசமாகக் கத்துகிறாள். பின்னர் குரூரமாக புன்னகைத்தபடியே தன்னை கொடுக்கிறாள்.[/size][/size]

[size=2]

[size=4]கைகால்கள் இழந்து முற்றிலும் மனைவியைச் சார்ந்தே உயிர்பிழைக்க வேண்டியிருந்தாலும்கூட குரோகாவாவின் குரூரப் புத்திமட்டும் அப்படியேதான் இருக்கிறது. ஏற்கனவே குழந்தையின்மையை காரணம் காட்டி ஷிகேகோவை பலமுறை சித்ரவதைப்படுத்தியவன்தான் அவன். இப்போதும் அந்த புத்தி மாறவில்லை. ஒருமுறை அவளை நாடும்போது, பாலியல்வேட்கைக்காகத்தான் அழைக்கிறான் என புரிந்துகொண்டு ஷிகேகோ தனது உடைகளைக் களையத் தயாராகும்போது, அவன் அதற்காக நான் அழைக்கவில்லை என்பதைப்போல உடையிலேயே சிறுநீர் கழிக்கிறான். அவனது குரூரத்தை புரிந்துகொள்ளும் ஷிகேகோ பயங்கரமாக கத்துகிறாள். அதைக்கண்டு அவனது கண்களில் மெல்லிய புன்னகை பரவுகிறது. அதற்காக அவனை பழிவாங்க நினைக்கிறாள்.[/size][/size][size=2]

[size=4]என்னதான் போர்க்கடவுளாக ஊர் உன்னை கொண்டாடினாலும் எனக்கு நீ வெறும் சதைப்பிண்டம்தான் என்பதை அவனுக்கு உணர்த்தவிரும்புகிறாள். அதற்காக அவனுக்கு ராணுவ உடைகளை அணிவித்து ஒரு தள்ளுவண்டியில் வைத்து தான் செல்லுமிடத்திற்கெல்லாம் அழைத்து செல்கிறாள். ஆரம்பத்தில் எல்லாரும் அவனுக்கு வணக்கம் செய்வதைக்கண்டு மகிழ்ச்சியடையும் அவன், பின்னர் தன்னை அவமானப்படுத்துவதற்காகத்தான் இப்படி அழைத்துச் செல்கிறாள் என நினைத்து அவளுடன் செல்ல மறுக்கிறான்.[/size][/size]

[size=2]

[size=4]பசி, கோபம், காமம், மனைவி மீதான வெறி, போர்முனையில் தான் வன்புணர்ச்சி செய்து சிதைத்த பெண்களின் ஓலக்குரல் எல்லாமும் சேர்ந்து அவனை சித்ரவதை செய்கின்றன. மனைவியோடு சேரும்போதுகூட, அந்த ஓலக்குரல்களும் வன்புணர்ச்சிக்காட்சிகளும் பிம்பங்களாக வந்து அவை விரட்டுகின்றன. தன் எதிரே வைக்கப்பட்டிருக்கும் பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் அவனது நிம்மதியைக் குலைக்கின்றன. இதனால் மிகுந்த மனவேதனைக்குள்ளாகும் குரோகாவா, தனது மனைவி வெளியில் சென்றிருக்கும் நேரம் பார்த்து தற்கொலை செய்துகொள்கிறான். ஒரு கம்பளிப்பூச்சியைப் போல ஊர்ந்து சென்று வீட்டின் வெளியே உள்ள ஒரு குட்டையில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்கிறான். ஒரு செத்த கம்பளிப் பூச்சியைய் போல அவன் உடல் மிதக்கிறது. அடுத்த காட்சியில் படத்தில் வரும் கோமாளி ஒருவன் ‘’ போர் முடிந்தது ‘’ என உரக்க கூவியபடியே செல்வதுடன் படம் நிறைவடைகிறது.[/size][/size]

[size=2]

[size=4]2010 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர், ஜப்பானின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோஜி வாக்காமாட்சு. எடோகாவா ராம்போ என்பவர் எழுதி 1929 களில் தடை செய்யப்பட்ட சிறுகதை ஒன்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. அறுபதாவது பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக்கரடி விருதினைப் பெற்ற இந்தப்படம், போர் பற்றிய பெருமிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. போர்க்காலத்திலும் அமைதிக்காலத்திலும் ஜப்பானியப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட நியாயமற்ற பொறுப்புகளையும் இப்படம் கேள்வி கேட்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]போர் எதிர்ப்பு படமாக இது அமைந்துள்ளபோதிலும், போரிலும் போருக்குப் பின்னும் பெண்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதைப்பற்றியே படம் வலுவாகப்பேசுகிறது. படம் நெடுகிலும் கோமாளியைப் போன்று எக்காளம் முழங்கியபடியே வலம்வரும் ஒரு பாத்திரத்தை அந்த மக்களின் மனசாட்சியாகவே மனம் கொள்ளத்தோன்றுகிறது. அப்பாத்திரம் போர் குறித்த விமர்சனங்களை படம் முழுவதும் கிண்டலுடன் முன்வைக்கிறது. படத்தில் வரும் போர்க்கடவுள் பிம்பத்தை அப்பாத்திரம் கேலி செய்து ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது.[/size][/size][size=2]

[size=4]படம் முழுவதும் ஏராளமான பாலியல் உறவுக்காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால் அந்தக் காட்சிகள் பார்வையாளனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக கடும் அதிர்ச்சியையே அக்காட்சிகள் ஏற்படுத்துகின்றன.ஒவ்வொரு பாலியல் காட்சியின் போதும் பார்வையாளன் பதற்றங்கொள்கிறான். இக்காட்சிகள் பெண்கள்மீது கழிவிரக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஆண்களின் மீது பெருங்கோபத்தைத்தான் உண்டாக்குகின்றன என்ற அளவில் இது இயக்குனருக் கான வெற்றி என்றே சொல்லமுடியும்.[/size][/size]

[size=2]

[size=4]தனது கணவன் குரோகாவாவை ஒரு தள்ளுவண்டியில் வைத்து அவன் மனைவி தள்ளிக்கொண்டுவருகிற காட்சி, நமக்கு நம்மூரு நளாயினியைத்தான் ஞாபகப் படுத்துகிறது. உலகெங்கிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டியிருக்கிறது.[/size][/size]

[size=2]

[size=4]ஒரு கம்பளிப்பூச்சி நம்மீது விழுந்தாலோ.. அல்லது கண நேரம் ஊர்ந்து போனாலோக்கூட நம்மால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. பதறியடிக்கிறோம். என்னவோ ஏதோ என அலறித்துடிக்கிறோம். ஆனால் அப்படியான ஆண்களோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்துதீர்க்க வேண்டிய காலக்கொடுமையின் கைகளில் ஒப்புக்கொடுத்துவிட்ட நம் பெண்களின் துயரத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம். அதன் முதல்படியாகக்கூட இந்தப்படத்தை தேடிப்பிடித்து பார்க்கலாம்.[/size][/size]

[size=2]

185147_449643125079143_506866319_n.jpg[/size]

[size=2]

[size=6]by கருப்பு கருணா[/size][/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.