Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இந்தியாவின் பலவீனமான உறுதிமொழிகள் !

Featured Replies

இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் இந்தியாவின் பலவீனமான உறுதிமொழிகளை ஆதாரத்துடன் இந்தியா ராஜதந்திரிகளுக்கும் அனைத்துலக இராஜ தந்திரிகளுக்கும் எடுத்துக் கூறி , சிங்கள அரசாங்கங்களுடன் பேசி ஒப்பந்தம் போட்டு தீர்வு காண முடியாது , தமிழீழமே நீதியுடன் தமிழர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்து வாழ்வதுக்கான ஒரே வழி என்பதை பின்வரும் ஆதாரங்கள் மூலம் நிரூபித்து அவர்களின் ஆதரவை பெறுவது காலத்தின் தேவையாக உள்ளது :

1 . நீண்ட பேச்சுவார்த்தைகள் மூலம் காலத்தைக் கடத்தி , இறுதியில் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கை அரசாங்கம் எழுத்தில் போட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் 25 வருடங்களின் பின்பும் அதன் ஒரு சரத்தை கூட இந்தியாவால் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து செயல்படுத்த முடியாமலிருக்கும் போது இன்னொரு பேச்சுவார்ததை நடத்தி சிங்கள அரசுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்துக்கும் இதே கதி தான் ஏற்படும் .

2 . இணைத்தலைமை நாடுகளான உலக வல்லரசுகளின் ஆதரவுடனும் கண்காணிப்புடனும் செய்து கொள்ளபபட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஒருதலை பட்சமாக இலங்கை கிழித்து எறிந்து விட்டு சிங்கள ஜனாதிபதியின் நேரடி உத்தரவில் யுத்தத்தை நடத்தி யுத்த குற்றம் புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில், எப்படி அவர்களுடன் சேர்ந்து வாழுவது .

3 . சிங்கள ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே யுத்தம் நடந்தது , யுத்தம் நடத்துவதற்காக தெரிவுக் குழுவோ , தேர்தல் மூலமோ , அல்லது வேறு வழிகளிலோ மக்கள் ஆணை பெறப்படமலே சொந்த நாட்டு எல்லைக்கு உள்ளயே தனது மக்களை சர்வதேச சட்டங்களை மீறி படுகொலை செய்தது . இப்போது பேச்சுவார்த்தைக்கு மட்டும் தெரிவுக்குழு அமைத்து யுத்தத்துக்கு உத்தரவிட்ட நிறைவேற்று அதிகாரமுடைய , பாராளுமன்றில் மூன்றில் இரண்டு ஆதரவு உடைய ஜனாதிபதி நழுவப்பார்ப்பது , இவர் எந்த தீர்வையும் நடைமுறைப்படுத்த போவதில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது .

4 . தீர்வு என்பது ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து வரவேண்டுமே தவிர , அதிகாரம் ஏதுமில்லாத பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமாக அல்ல . அப்படி இல்லை , பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் தான் தீர்வு என்றால், அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பு தலைவர்கள் இந்தியாவை வலியுறுத்த வேண்டும்.

5 . இறுதியாக , யுத்தத்தில் வென்ற பின்பும் இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய காரணம் , அதன் அரசியல் இராணுவத் தலைமைகளை யுத்த குற்ற தண்டனையில் இருந்து தப்ப வைப்பதற்காகவே . அவ்வாறு தண்டனை வழங்கப்படுமானால் தமிழீழம் என்பது ஐ. நா அங்கீகாரத்துடன் அமைவது இந்தியாவால் கூட தடுக்க முடியாது .

எனவே நீதியுடன் கூடிய தீர்வுதான் மீண்டும் சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்து இன அழிப்பை தடுத்து தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் . இத்தியவின் பலவீனமான உறுதிமொழிகள் , குற்றவாளிகள் தப்பித்து மீண்டும் மீண்டும் தமிழர்களின் மீது இன அழிப்பு நடைபெறவே உதவி செய்யும் .

ஆக்கம்: BEACON

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.