Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷாக்கள் காட்டும் மாயை.

Featured Replies

முதற் தடவையாக பராஒலிம்பிக் போட்டிகளில் பதக்க மொன்றை அண்மையில் இலங்கை வென்றெடுத்துள்ளது. விரைவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ அதற்கான கௌரவத்தையும் கூட ராஜபக்ஷாக்களே தட்டிக் கொள்ளக் கூடும்.

பயிற்சிக்குக் கூட எந்தவொரு அரச உதவியும் கிட்டாத நிலையில் தனது சுயமுயற்சியால் மாத்திரமே வெற்றிவாகை சூடிக் கொண்ட அந்த விளையாட்டு வீரருக்கு, விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு உட்பட அனைத்துத் தேவைகளையும் தனது சொந்தப் பணத்திலேயே மேற்கொள்ள நேர்ந்தது.

அரசின் பிரசாரங்களுக்காக கோடிக் கணக்கில் செலவழிக்கும் நாடொன்றிலேயே இந்த அவல நிலை அந்த விளையாட்டு வீரருக்கு ஏற்பட்டது. அந்தப் பிரசாரங்களுக்கு அமைய, நாட்டின் சுபீட்சத்துக்கும் மக்களின் சௌபாக்கியத்துக்கும் தம்மை அர்ப்பணம் செய்வோர் ராஜபக்ஷாக்கள் மாத்திரமே.

இத்தகைய புகழ் கொண்ட இந்த நாட்டில் பணவீக்கம், கல்வி முறைமையில் நலிவு நிலை, சிறுவர் துஷ்பிரயோகம், காணாமல் போகச் செய்தல் போன்ற சிற்சில பிரச்சினைகள் நிலவினாலும் கூட, அவை நாட்டின் சுற்றுலாத் துறைக்கும் முதலீடுகளுக்கும் சிறுஅளவு பாதிப்பை ஏற்படுத்துமாகையால் அவற்றைப் பெரிதுபடுத்தாதிருக்க வேண்டுமென்பது பாதுகாப்புச் செயலரின் நிலைப்பாடு.

அந்த வகையில் ராஜபக்ஷ சகோதரர்களின் உதவி கிட்டியிருப்பதன் காரணமாக எம்மால் சிறப்பாக வாழமுடிகிறது என நம்புவதே உண்மையான தேசப்பற்றின் இலட்சணமாகும். நாட்டின் பாதுகாப்புக்கும் சுபீட்சத்துக்கும் எதிராக மறைமுகமாகச் செயற்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சதிகாரர்களின் கையாட்களுக்கு இந்த தெளிவான சிந்தனை உதிக்கப் போவதில்லை. ஏகாதிபத்தியத்தின் புதிய உடையைப் போன்று இந்த அச்சுறுத்தலை தேசப்பற்றாளர்களால் மாத்திரமே கண்டறிந்து கொள்ள முடியும். தேசப்பற்றுள்ள ஒரே தலைமைத்துவம் என்ற ராஜபக்ஷ தரப்பினரால் மாத்திமே இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்றாகிறது.

ஆனாலும் நம்பத்தக்க காரணிகளுடன் அதை நிரூபிப்பதென்பது சாத்தியமற்ற ஒன்றே. அது நாட்டின் குடிமக்களை மனிதர்களாகக் கருதும் நிலைப்பாட்டையும் கெடுத்து விடுவதாக அமையும். எனவே இந்த சுப்பர் மேன் மாயையை உச்சத்தில் நிறுத்த வேண்டுமானால் அவர்களைத் தவிர்ந்த நாட்டிலுள்ள ஏனையோர் மனிதர்கள் என்ற தரத்திலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டாக வேண்டும். சுப்பர் மேன் என்ற இந்த அதீத ஆற்றல்களைக் கொண்டுள்ள தலைவர்களை விமர்சிக்கத்தக்க ஆற்றல் படைத்த குடிமக்கள் நாட்டில் இருக்கக் கூடாது. புறக்கணிப்புக்களைத் தாங்கிக் கொள்ளத்தக்க அடிபணிந்து நிற்கும் முதிர்ச்சியுறாத பொதுமக்களே நாட்டில் இருக்க வேண்டும் என்பதே அந்த அதீத ஆற்றல் படைத்த தலைவர்களின் விருப்பமாகும்.

அந்த வகையில் அவர்களின் வழிகாட்டல்கள் போதனைகள் மற்றும் பாதுகாப்பு இன்றி வாழ இயலாத நலிவுற்ற தரப்பினரே இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை ஏற்கச் செய்யாது ராஜபக்ஷாக்கள் சுப்பர்மென்களாகி விட இயலாது. அதே போன்று சுதந்திரக் கட்சியின் தலைவர்களைத் தமக்குத் தலைவணங்கி நிற்கும் சிஷ்யகோடிகளாக்கிக் கொள்ளாது, சுதந்திரக் கட்சியை தமது ஆதிக்கத்துக்கு உள்ளாக்கிக் கொள்ள இயலாது போகலாம்.

மக்களின் அன்புக்குப் பாத்திரமாகியிருந்த வடகொரியாவின் தலைவர் கிம்ஜோன் நாட்டு மக்களை வழிநடத்திச் செல்லும் பணியில் மனத்தளவிலும் உடலளவிலும் கடுமையாக உழைத்ததன் காரணமாக ஏற்பட்ட இதயப்பாதிப்பினாலேயே மரணமடைந்ததாக அந்த நாட்டில் பேசப்பட்டது.

அந்த வகையில் ""மக்களுக்காக கடுமையாக உழைக்கும் தலைவர்'' என்ற சொற்பதமானது ஏகாதிபத்திய மாயை செல்லுபடியாவதற்கு இன்றியமையாத அம்சமொன்றாகும். தூக்கத்தை மறந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதென்ற தோற்றத்தை உருவாக்குவதும் ஏகாதிபத்திய வாதத்தை நிலைநாட்ட இன்றியமையாததொன்றே.

கிம் ஜோனையொத்த தலைவரொருவரின் பாத்திரம் குறித்த விவரணத்துக்கு அமைய இந்த தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிம்ஜோனின் பாத்திரமாக மாறிப்போயிருந்ததாகக் கொள்ளமுடிகிறது.

அந்த வகையில் தமது அன்றாடப் பொறுப்புக்களுக்கிடையிலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆயத்தமாகும் மாணவர்களுடன் அளவளாவுகிறார். எம்பிலிப்பிட்டிய வாரச் சந்தைக்குச் சென்று அதை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்குமாறு பணிப்புரை விடுக்கிறார். பஸ்தரிப்பு நிலையமொன்றில் காத்திருக்கும் பயணிகளுடன் அளவளாவுகிறார். உடவளவை தேசிய வனத்துக்குச் சென்று யானைகளைப் பார்த்து ரசிக்கிறார்.

சந்திரிகா குளத்துக்குச் சென்று அதைப் புனரமைப்புச் செய்யப் பணிக்கிறார். எம்பிலிப்பிட்டிய ஏற்று நீர்ப்பாசனத் தொகுதியைப் பரிசீலிக்கிறார். அதே வேளை இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை ஈட்டித் தந்த பிரதீப் சஞ்ஜயவை சந்திப்பதோடு அடுத்து இடம்பெறும் பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தட்டிக் கொள்ள வேண்டுமென அவரை உற்சாகப்படுத்தி தட்டிக் கொடுக்கும் விதத்தையும், விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் சென்று விண்வெளியை வெற்றி கொள்ளும் விதம் குறித்து அளவளாவும் ஒருவராக ஜனாதிபதியை நோக்க முடிகிறது.

எந்தவொரு தலைவராலும் இயலாது போயிருந்த இலங்கையின் நீண்ட கால யுத்தமொன்றை முடித்து வைத்த இந்த யுத்த வெற்றியானது ராஜபக்ஷ குடும்பத்துக்குப் பெரும் புகழையும் பலத்தையும் அவர்களது தலைமைத்துவம் குறித்து நம்பகத் தன்மையையும் ஈட்டித் தந்தது. ஆனாலும் கூட இன்று எதையும் அடிபட்டுப் போக செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும் வலுவான துருப்புச் சீட்டு என்றிருந்த அதன் பேராற்றல் நலிவுற்று வருவதைக் காணமுடிகிறது. அந்த போர் வெற்றிக்கு மக்கள் நன்றிக் கடன் செலுத்துவதைத் தொடர்ந்தும் எதிர்பார்க்க இயலாது என்பதையும் ராஜபக்ஷ சகோதரர்கள் நன்கறிவர்.

அபிவிருத்தி யுத்தத்தை மஹிந்த , பஸில், கோத்தபாய என்ற முத்தரப்பினால் மட்டுமே நடத்திச் செல்ல முடியுமென்ற மாயையையும் அவர்கள் மக்கள் மத்தியில் பரவலாக்க வேண்டியுள்ளது. ஆனாலும் அபிவிருத்தியை யுத்தமொன்றாகக் காட்ட இயலாது. அனைத்து சம்பவங்களையும் புறமொதுக்கி வைத்து அதுவே முக்கியமானதென்ற ரீதியில் முன்னெடுத்துச் செல்லும் கருமமொன்றும் அல்ல அது.

அது சீர்தூக்கிப் பார்த்து மீளவும் மதிப்பீடுகளை மேற்கொண்டு இணக்கப்பாடுகளுடன் மேற்கொண்டு செல்லும் பயண மொன்றேயாகும். அபிவிருத்திக்கான ராஜபக்ஷாக்களின் முழுமையான இந்த முன்னெடுப்பின் மூலம் பலமான பொருளாதார அடித்தளமொன்றைக் கட்டியெழுப்பி சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கட்டியெழுப்புவதே அதன் பெறுபேறாக அமைய வேண்டியுள்ளது.

என்றாலும் கூட, அதற்குப் பதிலாக சந்தேகத்துக்கிடமான தரத்தினைக் கொண்டுள்ள கொங்கிறீட் காடுகளே அவர்களால் கட்டியெழுப்பப்படக் கூடும். அவற்றின் மூலம் பெரும் புகழீட்டிக் கொள்ளும் மாயைத் தோற்ற மொன்றை ஏற்படுத்தி விட முடிந்தாலும் கூட அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு அவசியமான சிறு விடயமொன்றைக் கூட மிகச் சரியாக முகாமைத்துவப்படுத்திவிட அவர்களால் இயலாது. கலப்படமில்லாத எரிபொருள்களைத் தருவிப்பதற்கோ, தவறுகள் இல்லாத பரீட்சைகளை இடம்பெறச் செய்வதற்கோ அவர்களால் இயலாது.

கடலளவுத் தேவைகள் என்பதன் மத்தியிலே சிறு தீவொன்றை மட்டுமே அவர்களால் நிறுவ இயலக் கூடும். இவற்றைக் காட்டியே இந்த சுப்பர்மேன் மாயையினுள் ஒளிந்து மறைந்து கொள்வதற்கு ராஜபக்ஷ முயற்சிக்கிறார்.

ராஜபக்ஷாக்கள் கூறுவதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் நாட்டின் ஒட்டு மொத்த மக்களதும் மூளைகளைச் சலவை செய்வதே அவர்களின் தற்போதைய தேவையாகியுள்ளது. தமது புதல்வன் விண்வெளிவீரரொருவராகப் புகழடைவதற்கு பில்லியன் கணக்கில் செலவிடும் நிர்வாகத் தரப்புக்கு சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ரிஸானா ஹபீக்குக்காக வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகளுக்குச் செலுத்துவதற்கு பணமில்லையென்ற நிலையை கண்டு கொள்ளாத இனமொன்றே அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

தனது சிரமமான வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கு வீரச் செயல்களைப் பற்றி பகல் கனவு காணும் ஜேம்ஸ் காபர் நாவலின் வோல்ட்டர் மிட்டி பாத்திரத்தைப் போன்று எம்மையும் கூட சிறுமையின் அடிமட்டத்துக்கே மூழ்கிச் செல்கையில் புகழ் என்ற மாயையில் கனவு காண வைப்பதே ராஜபக்ஷ சகோதரர்களின் தேவையாகியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த சமூகங்களையே ராணுவமயமாக்கி விடுவதே இந்த உள்ளார்ந்த அரசியல் திட்டங்களின் இன்றியமையாத அம்சமொன்றாகும். ஏனெனில் ராணுவத்தினுள் ராஜபக்ஷமாரின் மனோராச்சியத்துக்குப் பொருந்தும் ஆயுதமுள்ளது.

விமர்சிப்பதற்கோ, சிந்திப்பதற்கோ அனுமதிக்கப்படாத கீழ்ப்படிதல் மட்டுமே என்ற கொள்கை நடைமுறையே அங்குள்ளது. ஒருவரது வாழ்க்கையின் உண்மையான பெறுமதிகள் கீழ்ப்படிதலின் மூலமே கிட்டுவதாக ராணுவச் சிந்தனைகள் குறிப்பிட்டுள்ளதாக "த நியுயோக் ரிவியூ ஒப் புக்ஸ்' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு தகவல் தொழில்நுட்பத்தையும் ஆங்கில அறிவையும் விட ராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சியைப் பெறுவதே முக்கியமாகக் கருதப்படுவதற்கு இதுவே காரணமாகிறது. நாட்டில் பொருளாதாரம் சரிந்து வீழ்ந்திருந்தாலும், அரசியல் நலிவு நிலை தென்பட்டாலும் கூட அவற்றின் மத்தியில் கூட சுப்பர் மேன் குடும்பம் சம்பந்தப்பட்ட மாயையை மக்கள் மீது சுமத்திவிடுவதே ராஜபக்ஷாக்கள் குறிவைத்துள்ள இலக்காகியுள்ளது.

வடகொரியா மக்கள் தமது தலைவரின் புதல்வரை அவரது அரசியல் வாரிசாக மகிழ்ச்சியுடன் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது போன்று பைத்தியக் காரத்தனமான எதையும் தலைமேல் தூக்கி வைத்து அங்கீகரிக்கும் இனமொன்றே எமது இனம்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.