Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரீ.என்.ஏ சட்டத்தை மதித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றது; யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரீ.என்.ஏ சட்டத்தை மதித்து அதற்கு ஏற்றவகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் ஆனால் அரச ஆர்ப்பாட்டங்கள் முன்னறிவித்தலின்றி சடுதியாக மேற்கொள்ளப்படுகின்றது என யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன் போது ஊடகவியலாளர் ஒருவரினால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்தலாமா என்ற கேள்வியும் அவ்வாறாயின் ரீ.என்.ஏ யின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏன் வீதியில் இறங்கத்தடை என்ற வினாவும் கேட்கப்பட்டிருந்தது.

அந்த வினாவிற்குப் பதிலளிக்கும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திவிநெகும திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி நேற்று முன்தினம் மணிக்கூட்டு வீதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் முடிவடைந்தது.

அதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களை சந்தித்து மகஜரையும் பெற்றுக் கொண்டார். அந்த நிகழ்வு ஆரம்பமாகி 30 நிமிடங்களின் பின்னர் தான் முடிவடைந்தது ஆனால் குறித்த 30 நிமிடமும் ஏ9 வீதியில் குறித்த பகுதியில் எந்த செயற்பாடும் இன்றி முடங்கியிருந்தது.

வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. நிகழ்வு முடிந்த பின்னர் போக்குவரத்து கண்காணிப்புப் பொலிஸார் விரைவாக செயற்பட்டு வாகனங்களை அகற்றியிருந்தனர்.

அதே நேரம் யாழ். நகர்ப்பகுதியில் ரீ.என்.ஏயின் ஏற்பாட்டில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நல்லூர் பிரதேச தலைவர் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடைபெற்றது.

அவர்கள் வீதிக்கு எதுவிதமான அசௌகரியங்களையும் மேற்கொள்ளாது தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இதனடிப்படையிலேயே பிரதிப்பொலிஸ் மா அதிபரிடம் குறித்த விடயம் தொடர்பில் வினாவப்பட்டது.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வீதிக்கு புறம்பாக நின்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியுமே தவிர வீதியை மறித்து யாரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள முடியாது.

திவிநெகும ஆர்ப்பாட்டம் தொடர்பில் எமக்கு சரியான முறையில் திட்டங்கள் எமக்கு அறிவிக்கப்படவில்லை. எம்மால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயம் அல்ல . ஆனால் மாவட்ட செயலகத்திற்குள் தான் நடைபெறும் என நாம் நினைத்தோம்.

இருப்பினும் அன்றைய ஆர்ப்பாட்டத்தில் 3ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனால் கூடுதலான சனக்கூட்டத்தினால் தான் வீதியில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை எற்பாடு செய்திருந்தவர்கள் சடுதியான முறையில் இதனை ஏற்பாடு செய்தமையால் இவ்வாறான தடங்கல்கள் ஏற்பட்டது.

ஆனால் ரீ.என்.ஏயினரை வீதிக்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுங்கள் என்று நாங்கள் யாரும் அவர்களுக்கு கூறவில்லை.ஆனால் அவர்கள் தாங்களாகவே சட்டத்தினை மதித்து வீதிக்கு வெளியில் நின்று போராட்டத்தினை மேற்கொண்டனர் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=320051529719433896

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.