Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைமறைவு நடவடிக்கைகளும் மாறுவேடதாரிகளும்..!– மதுசன்

Featured Replies

[size=4]

உளவு நடவடிக்கைகள் மூலம் தகவல் சேகரிப்பு, எதிரிகளின் திட்டங்களை முறியடித்தல், எதிரி நாட்டிற்குள் ஊடுருவல், எதிரியின் கேந்திர நிலைகள் மீது தாக்குதல் நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இதை விடத் திரைமறைவு நடவடிக்கைகள் என்ற பகுதியும் இருக்கிறது.[/size][size=4]

திரைமறைவு நடவடிக்கைகள் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது பற்றிப் பெரிதாகப் பேசப்படுவதில்லை, ஏனெற்றால் அது மிகவும் இரகசியமாக நடத்தப்படுகிறது. ஆனால் அப்படியானதொரு நடவடிக்கை இருப்பது நூறு விழுக்காடு உண்மை.[/size][size=4]

உலகின் முக்கிய உளவமைப்புக்கள் திரைமறைவு எனப்படும் இரகசிய நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இந்த வகை நடவடிக்கை (Clandestine Activities) என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க சிஜஏ அமைப்பில் இந்த நடவடிக்கைகளுக்காக ஒரு தனிப் பிரிவு இருக்கிறது.[/size][size=4]

இரகசிய நடவடிக்கைகளுக்குப் பெரும்பாலும் பெண்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களிடம் “தேன் பானை” (Honey Pot) இருப்பதாக அமெரிக்கர்கள் குறிப்பிடுவார்கள். இந்தப் பானையில் ஆண்கள் வீழ்வார்கள் என்பது உட்பொருள். பைபிளின் பழைய ஏற்பாட்டில் பெண் உளவாளிகளின் சாகசங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[/size][size=4]

CIA%20tk.jpg[/size][size=4]

எகிப்து, ஜோர்தான், சீரியா ஆகிய அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேயில் 1967ம் ஆண்டு நடத்திய பெரும் போருக்கு உளவுத் தகவல் சேகரிப்பதிலும் திரைமறைவு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் யூதப் பெண்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.[/size][size=4]

எகிப்து நாட்டு விமான மற்றும் தரைப்படைத் தளபதிகளை யூதப் பெண் உளவாளிகள் தமது தேன் பானை மூலம் செயலிழக்கச் செய்தனர். இஸ்ரேயில் விமானங்கள் எகிப்து மீது தாக்குதல் தொடுத்த போது இந்தத் தளபதிகள் பெண் உளவாளிகளோடு படுக்கை அறைகளில் கிடந்தனர். எகிப்தின் தோல்விக்கு இது முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.[/size][size=4]

தேசப்பற்று. உயர்ந்த ஊதியம், புதிய அனுபவத் தேடல் ஆகிய மூன்று முக்கிய காரணங்களுக்காக அழகும் வசீகரிக்கும் திறமையுள்ள பெண்கள் திரைமறைவு நடவடிக்கைப் பிரிவுகளில் இணைந்து பணியாற்றுகிறார்கள். நாடுகளின் இரகசியங்கள் பறிபோவதற்கு இந்த வகைப் பெண் உளவாளிகள் காரணமாகின்றனர்.[/size][size=4]

சிஐஏயின் மாறுவேடப் பிரிவு (Disguise Division) அதனுடைய திரைமறைவு நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்கிறது. இந்தப் பிரிவின் தலைவியாக இருந்தவர் யோனா மென்டெஸ் (Jonna Mendez) என்ற பெண.[/size][size=4]

யோனாவின் இரண்டாவது கணவர் அன்தோனியோ மென்டெஸ் (Antonio Mendez) என்பவரும் சிஐஏ உளவமைப்பு பணியாளராவர். தோனி மென்டெஸ்(Tony Mendez) என்று சுருக்கமாக இவர் அழைக்கப்படுகிறார்.[/size][size=4]

தோனியும் யோனாவும் மாறுவேடப் பிரிவுத் தலைமைப் பதவியை ஒருவர் பின் ஒருவராக மொத்தம் 52 வருட காலம் வகித்துள்ளனர். இருவரும் இணைந்து ஸ்பை டஸ்ற் (Spy Dust) என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளனர் இந்தப் புத்தகம் உளவுத்துறைப் பயிலகங்களில் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.[/size][size=4]

யோனாவுக்கு இப்போது 67 வயது. அவர் தனது வாழ்க்கையை பள்ளி ஆசிரியையாகத் தொடங்கினார். அவருக்கு நிழற்படம் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம். அவருடைய பிற்கால வாழ்க்கையில் இந்த ஆர்வம் மிகப் பெரிய பங்களிப்புச் செய்தது. அவருடைய அமைதியான வாழ்க்கையில் அவருடைய முதலாவது திருமணம் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.[/size][size=4]

அவருடைய முதல் கணவரும் ஒரு சிஐஏ உளவாளி தான். ஆனால் அவர் இந்த விவரத்தை மனைவியிடம் இருந்து மறைத்து விட்டார். விவாகம் நடப்பதற்கு இரு நாட்கள் இருக்கும் போது தான் யோனா இதைக் கண்டுபிடித்தார். விவாகம் நடந்த பிறகு யோனாவும் முதல் கணவரும் ஆசியாவின் தூர கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.[/size][size=4]

யோனாவுக்கு செயலர் (Secretary) வேலை கிடைத்தது. கணவர் என்ன வேலை செய்கிறார் என்பதை அவர் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். தானும் அந்தப் பணியில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததும் சிஐஏ உயரதிகாரிகளிடம் தனக்கும் பயிற்சி வழங்கும்படி நச்சரிக்கத் தொடங்கினார். அவருக்கு திரைமறைவுப் படப்பிடிப்பு இரகசிய எழுத்துத் (Secret Writing) தொழில் நுட்பம் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட்டது.[/size][size=4]

சிறிது காலத்தில் முதல் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொண்ட யோனா 1966ல் சிஐஏயின் முழு நேரப்பணியாளராக இணைந்தார். அவர் ஜேர்மனியின் தொழில் நகரமான பிராங்க்போட்டின் (Frankfurt) சேஸ் மான்ஹாற்றன் வங்கியில் (Chase Manhatton Bank) பணியாற்றினார். தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.[/size][size=4]

யோனா சிஐஏயின் மாறுவேடப் பிரிவில் 25 வருடம் பணியாற்றியவர். அவர் உளவாளிகள் பயன்படுத்தும் இரகசியப் படப்பிடிப்புக் கருவிகளில் நிபுணராவார். 1986ல் அவர் சிஐஏ தலைமைச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு இரண்டாவது கணவர் டோனி மென்டெசுடன் இணைந்து சோவியத் ஒன்றியத் தலைநகர் மொஸ்கோவில் திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.[/size][size=4]

சோவியத் ஒன்றியம் உடைந்த இறுதி நாட்களில் இருவரும் மொஸ்கோவில் தங்கியிருந்தனர். சோவியத் ஒன்றியத்தின் கேஜீபி, கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராசி(Stassi) உளவமைப்பு, பல்கேரியாவின் உளவமைப்பு ஆகியவற்றுடன் போட்டியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.[/size][size=4]

கணவனும் மனைவியும் மாறுவேடத்துறையில் அருஞ்சாதனை நிகழ்த்தியுள்ளனர். இருவரும் இன்று சிஐஏயின் ஆலோசகர்களாகப் பணியாற்றுகின்றனர் இருவருக்கும் ஒரு 18 வயது மகன் இருக்கிறார்.[/size][size=4]

இருவரும் தலைநகர் வாஷிங்ரனில் அமைதியாக வாழ்க்கை நடத்துகின்றனர்.[/size][size=4]

யோனா மென்டெஸ் மாறுவேடம், உடல் உருவ மாற்றம், மறைப்பு ஆகிய துறைகளில் செய்த சாதனைகளை மிகச் சுருக்கமாக இங்கு குறிப்பிட முடியும். ஒரு புலனாய்வாளன் தன்னை இனங்காட்டாமல் சாதாரண மக்களைப் போல் அமைதியாகப் பணியாற்றுகிறான். மக்களோடு மக்களாகச் சர்வ சாதாரண மனிதனாக அவன் தன்னை இனங்காட்ட வேண்டிய அவசியம் உண்டு.[/size][size=4]

மாறுவேடத் துறை இதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. ஒரு முக்கிய நபரை நீங்கள் சந்திக்கும் போது நீங்கள் அவருடைய முகம், உடல் உறுப்புக்கள், ஆடைகள், பேசும் விதம், உட்காரும் விதம், எழுந்து நடமாடும் விதம் அவருடைய உயரம், பருமன் ஆகியவற்றை அவதானித்து நினைவில் பதிந்துக் கொள்கிறீர்கள்.[/size][size=4]

இவற்றை மாற்றி அந்த முக்கிய மனிதரைப் பிறிதோர் மனிதராக மாற்றுவது தான் மாறுவேடத் துறையின் நோக்கம். அவருடைய உயரம் பருமனை மாற்றுவது மிகவும் எளிது. அவருடைய உடல் மொழியை (Body Language)தீவிர பயிற்சி மூலம் மாற்ற முடியும். பேச்சு மொழியை மாற்றுவதும் கடினம் தான் உதாரணத்திற்கு வேற்று மொழியை அந்த மொழிக்குரியவர் போல் பேசுவது மிகவும் கடினம்.[/size][size=4]

தலைமுடியின் நிறம், அடர்த்தி, அலங்காரம் ஆகியவற்றை மாற்றினால் அதற்குரிய ஆணோ பெண்ணோ புதிய நபராக மாறிவிடுவார். மாறுவேடக் கலை மூலம் பெண்ணை ஆணாகவும் ஆணைப் பெண்ணாகவும் மாற்ற முடியும். இதற்கான உபகரணங்கள் உளவமைப்புகளிடம் உண்டு.[/size][size=4]

முகத்தில் சுருக்கங்கள், வடுக்கள், போன்றவற்றைச் செயற்கையாக ஏற்படுத்த முடியும். உடலில் செயற்கையாகக் காயங்கள், புண்கள், தோல் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஒரு நபரின் வயதை, இனத்தை, பால் அடையாளத்தை உளவுத் தேவைக்காக மாற்ற முடியும். இதற்கான பயிற்சிகளையும் உபகரணங்களையும் இந்தத் துறை கொண்டிருக்கிறது.[/size][size=4]

ஒரு நாட்டிற்குள் ஊடுருவும் உளவாளி சாதாரண ஆயுதங்களை எடுத்துச் செல்வதில்லை. அவை அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். மழை, வெய்யிலுக்குப் பிடிக்கும் குடை ஆயுதமாக மாற்றப்பட்டிருக்கும். ஒரு சிகரட் பெட்டிக்குள் ஒரு இரகசிய கமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அவன் எடுத்துச் செல்லும் புத்தகத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய வட்டப் புள்ளியைப் பெரிதாக்கிப் பார்க்கும் போது அதில் பெரிய தகவல் களஞ்சியம் பொதியப்பட்டிருக்கும்.[/size][size=4]

புலனாய்வுத் துறையில் அதிகம் பேசப்படாத அத்தியாயமாக மாறுவேடம், உருமறைப்பு, உடலமைப்பு மாற்றம் என்பன இடம்பெறுகின்றன. இந்தத் துறைசார்ந்த ஆய்வை மெற்கொள்ளும் போது பல பிரமிப்பூட்டும் உள்ளிரகசியங்கள் வெளிவரும் என்பது திண்ணம்.[/size]

நன்றி

தமிழ்க்கதிர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.