Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் தேசியமும் தமிழ்த் தேசியமும் ஒருபோதும் இணையாது! - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம் உரை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் தேசியமும் தமிழ்த் தேசியமும் ஒருபோதும் இணையாது! - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தவம் உரை!!

முஸ்லிம் தேசியம் தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்து போக முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.ஐ.முகம்மத் மன்சூருக்கு சம்மாந்துறையில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தவம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தவை வருமாறு:

'சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அரசாங்கத்துடன் ஆட்சியமைத்திருக்கின்றது. ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை அரசாங்கத்துடனான உறவுகளிலே இருக்கின்ற விரிசல்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் நம்பிக்கையைக் கட்டி வளர்க்க வேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது.

எதிர்க்கட்சியால் இன்னுமொரு ஆட்சி மாற்றத்திற்கான சூழல் தோன்றியிருக்கிறதா எனப் பார்த்தால் அதையும் காணவில்லை. இப்படியான சூழ்நிலை இருக்கும் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் எதிரணியில் போய் அமர்ந்து என்ன சாதிக்க முடியும்? ஒன்றுமே செய்ய முடியாது.

முஸ்லிம் சமூகம் மிக நீண்ட காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிர்வாக ரீதியிலான எந்தப் பிரச்சினையிலும் ஏதாவது ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நிறைவேற்றித் தரமுடியுமா? இல்லை. அவர்களுக்கே அவர்களுடைய பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற எத்தனையோ பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது?

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிய முதலமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு எமது பிரச்சினைகளை எவரிடம் கேட்பது என்ற விடயம் இருக்கிறது. அது மாத்திரமல்ல, அரசோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தெளிவான உடன்படிக்கையை செய்திருக்கிறது. அடுத்த இரண்டரை வருடங்களுக்கு முஸ்லிம் முதலமைச்சர் கிடைக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களைக் கொண்ட ஒரு நிர்வாக அலகு, குச்சவெளியிலும், புல்மோட்டையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட நிர்வாக அலகுகள் என்று முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கின்ற அரசியல் உடன்படிக்கையை இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் செய்யமுடியுமா? முடியாது.

அதேபோல் அம்பாறை மாவட்ட நிர்வாக அலகு என்று பல ஒப்பந்தங்களை அரசுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்திருக்கின்றது. தெளிவான எழுத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இறுதித் தீர்வில் முஸ்லிம்களுக்கு என்ன அந்தஸ்தை கூட்டமைப்பு தரப்போகிறார்கள் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாக இதுவரைக்கும் கூறவில்லை. எனவே, முஸ்லிம் தேசியம் தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்துபோக முடியாது. இது யதார்த்தம்' என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம் தெரிவித்துள்ளார்.

http://www.pongutham...88-074c272037fe

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் உறவுகள் ஒருபோதும் சிதையாது! - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு அரியநேத்திரன் பதில்!!

கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவைச் சிதைக்கப் பொய்யான தகவல்களைக் கூறி இனவாதத்தைக் கக்கித் திரியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் தக்க பதில் வழங்குவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தேசியம் தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்து போக முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்த கூற்றுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

'சம்மாந்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தமிழ், முஸ்லிம் உறவை உடைக்கும் வகையில் உரையாற்றியுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

அதில் குறிப்பாக அதாவுல்லாவின் கட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டு ஹக்கீமின் காலடியில் வந்து விழுந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வாக்குப் பிச்சை கேட்டு வெற்றி பெற்ற உறுப்பினர் தவம் முஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்து போக முடியாது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்தக் கருத்து கட்சி ரீதியானது என்பதல்ல. இது அவரின் தனிப்பட்ட கருத்து. இதை தமிழ், முஸ்லிம் மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். இவருக்கும், இவருடன் சேர்ந்து தமிழ், முஸ்லிம் உறவைச் சிதைக்க இனவாதத்தைக் கக்கித் திரிவோருக்கும் எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் மக்களே தக்க பதில் வழங்குவார்கள்.

யார் எதைக் கூறினாலும் தமிழ், முஸ்லிம் உறவு ஒருபோதும் சிதையாது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாதிரி நாம் முஸ்லிம் மக்களை நடுத்தெருவில் விடமாட்டோம். முஸ்லிம் மக்களை அரவணைத்தே நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பங்கெடுப்போம்' என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.pongutham...3d-a95efbec83fd

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம் டக்ளஸ், முஸ்லிம் கருணா என்ற வகைக்குரியனவின் அரசியல் கூட்டமையின் இணைவால் மக்களாதரவற்று ஆநாதை ஆகிவிடுமே. எனவே எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.