Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜயவர்தனாக்களையும் பிரேமதாஸாக்களையும் விஞ்சி நிற்கும் ராஜபக்ஸக்கள் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜயவர்தனாக்களையும் பிரேமதாஸாக்களையும் விஞ்சி நிற்கும் ராஜபக்ஸக்கள் -

26 அக்டோபர் 2012

சட்டம் நீதி நிர்வாகத் துறைகள் மீது ஊழித் தாண்டவம் - செய்தி ஆய்வு - நடராஜா குருபரன்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாத பிரேரணையில் கையெழுத்து பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பதகுந்த அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று சுப நேரத்தில் அந்த பிரேரணையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தனவின் ஆலோசனைபடி குறித்து கொடுக்கப்பட்ட சுப நேரத்தில் அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இந்த சம்பவங்களுக்கு காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசர், நீதிச் சேவை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் ஒருவராக விளங்குகிறார்.

இதேவேளை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக ஐக்கியதேசியக் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது எதிர்க் கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சட்டத்தரணிகளாகவும் இருந்த பலர் கையொப்பமிட மறுத்தனர். குறிப்பாக தற்போதைய நீதி அமைச்சரும் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் கனவான் அரசியலுக்கு பொருத்தமானவர் என முன்னர் பலராலும் போற்றப்பட்டவரும் சட்டத்தரணியுமான ஹக்கீம் உள்ளிட்ட அவரது கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட மறுத்தனர். காரணம் பிரதம நீதியரசர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அது நீதித்துறையின் மீதான அழுத்தத்தை கொடுப்பதோடு நீதித்துறையில் மக்கள் கொண்டு இருக்கும் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கும் என காரணம் கூறியிர்ந்தார் அமைச்சர் ஹக்கீம். இப்போ நீதி அமைச்சராகவும் சட்டத்தின் காவலனாகவும் இருக்கும் ரவூவ்ஹக்கீம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப் போகிறாரா? நிராகரிக்கப் போகிராரா? ஏன்ற கேள்வி எழுவது நியாயமானதே.

எனினும் நீதிபதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்திருந்த அழைப்பானது, நீதிமன்றத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தம் என தெரிவித்து, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஊடக அறிக்கையை வெளியிட்டதால், மக்கள் மத்தியில் நீதிமன்றம் தொடர்பில் தவறான தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இந்த விவாதம் நடைபெற்ற போது ஜனாதிபதியின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் விதமாகவே நடந்து கொண்டுள்ளார்.

மாறாக அரசாங்கம் நீதித்துறையில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைணை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

நீதித்துறை அல்லது வேறு நிறுவனங்கள் தொடர்பாக எமக்கு அர்த்தப்படுத்தல்கள் இருக்கின்றன. இவை சுதந்திரமான, கௌரவமான நிறுவனங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து காலக்கட்டங்களிலும் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு விரும்பானவையாக இருக்கின்றன. இதனால் இவற்று மதிப்பளிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. குறித்த ஒரு தரப்பினரின் தேவைக்காக செயற்படும் நிறுவனங்கள் பணம் இருப்பவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் இருவேறு விதமாக செயற்படுகின்றன.

முதலாளித்துவ ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு சில நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்று வழங்கப்படும் பெறுமதியை வீழ்ச்சியடைய செய்வது அரசாங்கமே. இவை முற்றாக நீதியான, நியாயமான விழிமியங்களை கொண்ட நிறுவனங்கள் அல்ல.

வெலிகடை சிறையில் இருப்பவர்களை பார்க்க எவரும் ஆடம்பர வாகனங்களில் வருவதில்லை. தோட்டத்தை சேர்ந்த மனிதரோ அல்லது வறிய நிலையில் உள்ளவர்கள் முச்சக்கர வண்டிகளில் வருகின்றனர். ஒரு சமூக மட்டத்தில் இருப்பவர்கள் மாத்திரமே இந்த சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருளை பயன்படுத்துபவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருளை விற்பனை செய்பவர்கள் வெளியில் உள்ளனர். இதுதான் சட்டம். நியாயம் என்பது ஒன்று சட்டம் என்பது இன்னுமொன்று என அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. நீதியும், நியாயமும் என்பது வேறு ஒன்று எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால் புலிகளை எதிர்க்கிறோம் என கங்கணம் கட்டி ஆகாயத்தில் போன பேயை ஏணி வைத்து இறக்கி ஜனாதிபதி கதிரையில் இருத்திய பெருமையில் பெரும் பங்கு ஜேவிபியையே சாரும்.

இதேவேளை சட்டத்துறையின் பரிதாப நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ, இலங்கையில் 13 ஆயிரம் சட்டத்தரணிகள் இருப்பதாகவும் எனினும் நாட்டில் சட்டத்தை செயற்படுத்த அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை எனவும் இது சட்டத்தின் இறுதியான கொடூரம் என தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் தலையிடும் இந்த அரசியல்வாதிகள் நீண்டநாட்கள் செல்லும் முன்னர் பிரதிபலனை அனுபவிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், நீதிமன்றத்தின் சுதந்திரம் படிப்படியாக குறைந்தது. அத்துடன் 17வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்பட்டமை நாடாளுமன்றம் செய்த கொடூரமான குற்றமாகும்.

நாடு ஒன்றின் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் உள்ளது. தூதுவர்கள், சட்டமா அதிபர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின்னர், அரசியலில் பிரவேசிப்பது தவறானது. இந்தியாவில் இந்த பிரச்சினை உள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடைபெறுகின்றன. நாட்டில் இடம்பெறும் பெருபாலான குற்றங்களின் குற்றவாளிகள் அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமே இவ்வாறான நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பை உருவாக்கி மக்களால் தெரிவு செய்யப்படும் iனாதிபதியை னைநாயகத்தினூடான சர்வாதிகாரியாக மாற்றிய ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் தானே நியமித்த பிரதம நீதியரசரை (பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை) நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தூக்கி எறிவதா? ஆல்லது நீராக போகப் போகிறீரா என மிரட்டியதுடன் அவரது வீட்டிற்கு கல்லெறிந்து பயமுறுத்தி அவரை ராஜினாமாச் செய்தார்.

இப்போ இலங்கையில் ஏற்கனவே இருந்த எல்லா ஜனாதிபதிகளையும் முழுங்கி உலகில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து தலைவர்களையும் விட கொடூரமான சர்வாதிகாரியாக உள்ள மகிந்த ராஜபக்ஸ ஸிராணிபண்டாரநாயக்காவை தூக்கி எறிய அனைத்து விதமான போக்கிலித் தனங்களையும் புரிய ஆரம்பித்து உள்ளார்.

இதன் ஒரு கட்டமாகவே பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவின் கணவர் பிரதீப் காரியவாசத்தின் மீதும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூலம் அழுத்தங்களை கொடுக்க தொடங்கியுள்ளார் மகிந்த ராஜபக்ஸ.

அதன் முதற்கட்டமாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கு சுமார் 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசத்துக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொதழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவேடு நல்லுறவு நிலவிய நேரத்தில் அவரது கணவர் பிரதீப் காரியவசத்தை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்ததார். இந்த நியமனம் கூட அரசியல் ரீதியாக பிரதம நீதியரசரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்த அரசியல் நியமனத்தை உண்மையில் பிரதம நீதியரசர் அப்போது நிராகரித்திருக்க வேண்டும். ஆதனை அவர் அன்று செய்யாததனால் இன்று அதன் பலனை எதிர் கொள்கிறார்.

த ஃபினான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் சுமார் 78 லட்சத்துக்கும் அதிகமான பங்குகளை பிரதீப் காரியவசம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டத்துக்கு முரணான வகையில் வாங்கியதன்மூலம் அரசுக்கு சுமார் 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் ஷான் சண்முகம் என்பவரை குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்ததன் மூலம் பிரதீப் காரியவசம் நாட்டின் லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தை மீறியுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ஆனால் இவ்வாறு பங்குகளை கொள்வனவு செய்த போதும் ஷான் சண்முகத்தை நியமித்த போதும் அரசாங்கமும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவும் மௌனம் காத்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக பிரதீப் காரியவசத்துக்கு அழைப்பாணை விடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி ஏற்றுக்கொண்டதுடன் பிரதீப் காரியவசத்தை எதிர்வரும் பெப்ரவரி 28-ம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் முன்னர் கொடுங்கோல் ஆட்சிகளை புரிந்தார்கள் எனப் புகழ் பெற்ற ஜே ஆர் ஜெயவர்த்தனா, றணசிங்க பிரேமதாஸா ஆகியோரை விஞ்சிய கொடுங்கோலராக மகிந்த ராஜபக்ஸ உருவெடுத்துள்ளார். இவரது அடாவடித்தனங்களுக்கு தாளம் போடுகிறவர்களும் விரும்பியோ விரும்பாமலோ ஆதரிப்பவர்களும் அல்லது மௌனமாக இருக்கும் அரசியல் கனவான்களும் நிட்சயமாக அதற்கான விலையை கொடுப்பார்கள். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தவின் முன்னைய நண்பருமான மங்களசமரவீர, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஜேவீபீ கட்சியும் அதன் நாடாளுமன்ற உறுப்பிர்கள் என பல சிறந்த உதாரணங்கள் எம் கண்முன்னே தெரிகின்றன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84732/language/ta-IN/article.aspx

Law படிக்கவில்லை என்றாலும் இப்போதைக்கு சிராணியை என்னால் காப்பாற்ற முடியும். ஆலோசனையை கவனமாக கேட்க வேண்டும்.

முதலாவது இந்த ரக்ஷ்மி சிங்க(ள) புலி தூய சிங்களம் இல்லாதது. (இந்த சிங்கம்) தான் இதுவரையில் எதிலும் மாட்டியிருக்காவிட்டாலும் பிரதீப் காரியவாசம் மீது கடுமையான தீர்ப்புக்கள் வழங்கவேண்டிய இக்கட்டில் இருக்கிறது. தூய சிங்களவர் அல்லாத பிரதீப் காரியவாசம் தூய சிங்களத்தியான சிராணியை காட்டி கொடுத்தவர் என்ற பெயர் இனி எடுத்தேயாக வேண்டும். அதாவது இவர் கோட்டில் சிராணியை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி ஏதாவது சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படப்போகிறார். சிராணியின் மதிப்பு சிங்களவரிடம் அழிக்கப்படபோவது இந்த காரியமான வாசத்தின் அழுக்கு வாயால்த்தான்.

கிருணிக்காவிடம் கேட்டால் தெரியும்; மந்திரிமார்களின் புதல்வர்களை வைத்துகோண்டு சங்கடப்படாமல் தனிய இருந்தால் சந்தர்பங்களுக்கு ஏற்பட ஈடாடலாம் எனபது. அவ தகப்பன்ன் இறந்த பின் பொடியை போ என்று சொல்லிப்போட்டா.

சிராணிக்கு இன்னமும் மீட்சி இருக்கு. ஆனால் இந்த காரியவாசத்தின் சொத்து பத்தெல்லாம் அவர் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றவை. எனவே அவை எல்லாம் அங்கே போயாக வேண்டும். அதாவது தோட்டக்காறன் கிடாய் ஆட்டுக்கு ஒவ்வொருநாளும் தன்னுடைய பணத்தை செலவழித்து புண்ணாக்கு வாங்கி போடுவது, திருவிழா அன்று இரண்டாக அறுத்து போடவே. சும்மா ஓடித்திரியும் அணில் அதற்குள் தானாக ஓடினால் வெட்டு அணிலுக்கும் சேர்த்துத்தான். காரி வாசம் இனி தப்பாது. சிராணி குறுக்கே நிற்காவிடால் தான் தப்ப முடியும்

எனவே இந்த கரிவாசத்தை நேரத்திற்கே கையைவிட்டுவிட்டால் சிராணி மீது லஞ்ச ஊழல் குற்றங்கள் கணவர் சாட்சியமாக வெளிவராது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.