Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்கள் தனியான தேசிய இனமாக அங்கிகரிக்கப்படவேண்டும்

Featured Replies

[size=4]இலங்கைத் தமிழர்கள் தனியான தேசிய இனமாக அங்கிகரிக்கப்படவேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக் கொண்டார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்து ஆராயும் காலக்கிரம மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெறுவதற்கு முன்பாக, மனித உரிமை அமைப்புக்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட கூட்டம் நேற்று இடம்பெற்றபோது, ஆயர் இலங்கையில் இருந்து ஸ்கைப் வழியாக உரையாற்றினார்.

13 ஆவது திருத்தம் அடிப்படையில் தவறானதெனவும், அது தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாதெனவும், மாறாக தமிழர்கள் தனியான தேசிய இனமாக அங்கிகரிக்கப்படுவதுதான் தீர்வாக அமையுமெனவும் அவர் கூறினார்.

வன்னிப் போரின்போது ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம் பேர் காணாமற்போயுள்ளார்களென இலங்கை அரசிடம் பல தடவைகள் கூறியபோதிலும், அதற்குப் பதிலெதுவும் கிடைக்கவில்லையென அவர் கூறினார். குற்றங்களைப் புரிந்தவர்கள் யாரென்பது தமக்குத் தெரியுமென அவர் தெரிவித்தார்.

போர் நிறைவடைந்த பின்னரும் இலங்கைப் படையினர் வடக்குக் கிழக்கில் ஏன் நிலைகொண்டுள்ளார்களென்பது புரியவில்லையெனவும், வடக்குக் கிழக்கில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் மன்னார் ஆயர் கூறினார்.

மேலும் பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அங்கு உரையாற்றினார்கள்.

தமிழர் பகுதிகளில் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதன் காரணமாக, தமிழர்கள் சிறுபான்மையாக மாற்றப்படுவதாக டுயறலநசள சுiபாவள றுயவஉh ஊயயெனய அமைப்பைச் சேர்ந்த கரி ஆனந்தசங்கரி அவரது உரையில் குறிப்பிட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மணியும் அங்கு உரையாற்றினார். இலங்கையில் இடம்பெறுவது அனைத்துலக பிரச்சினையென கூறிய அவர், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு ஆதரவாக உள்ளதாக கூறினார்.[/size]

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13095

  • தொடங்கியவர்

[size=5]Bishop of Mannar’s Push for Recognition of the Tamil Nation and Tamil Self Rule Sets Benchmarks for Political Solution for Eelam Tamils[/size]

[size=5]By: Usha S Sri-Skanda-Rajah, Senator TGTE[/size]

[size=5]“Our solution does not lie in the 13th Amendment but on the Tamil nationhood to be recognised. We are not a minority. From the beginning of history there have been two nations that must be recognized”[/size]

[size=5]With these profound words that is sure to resonate well with the Tamil Diaspora and the Tamil heartland in the North and East of the island of Sri Lanka, the outspoken Bishop of Mannar, in characteristic fashion set the benchmarks as it were for any future dialogue for a political solution for Eelam Tamils; benchmarks that must be heeded not just by the Rajapaksa administration but by the UN, the international community and India, requiring immediate international intervention.[/size]

[size=5]His Worship, the courageous and forthright spiritual leader revered by Eelam Tamils, chose a forum in Geneva where Sri Lanka’s Universal Periodic Review is set to begin any moment, to make the assertion that the “13th amendment is fundamentally flawed”, that the Tamil people have to be recognised as a nation and have a “right to rule”, reflecting in principle, the long held fundamental demand of Eelam Tamils……….[/size]

http://www.tamilcanadian.com/article/6274

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 4, நவம்பர் 2012 (10:54 IST)

இலங்கை பிரச்னைக்குத் தமிழீழமே தீர்வு: ஐ.நா.வில் ஜி.கே.மணி வலியுறுத்தல்

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.

இலங்கையில் நடைபெற்ற போரின்போதும், அதற்கு முன்பும் பின்பும் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட்டன என்பது தொடர்பான விசாரணை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் பங்கேற்க ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருந்த பசுமைத் தாயகம் அமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி பாமக தலைவர் ஜி.கே.மணியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் அருளும் விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் ஜி.கே.மணி வேட்டி சட்டை அணிந்தே பங்கேற்றதுடன் தமிழிலேயே பேசியுள்ளார்.

கூட்டத்தில் ஜி.கே.மணி பேசியது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

இலங்கைப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் நடப்பதை அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கக்கூடாது. இன அழிப்பாகத்தான் பார்க்க வேண்டும். தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரையும் அவர்களின் சொந்த ஊர்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை இனப் பிரச்னைக்கு தமிழீழமே ஒரே தீர்வு. உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அவர் பேசியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=85510

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.