Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான் பயப்பட ஆரம்பித்துள்ளது -றிக் டிக்ஸ்ரா

Featured Replies

[size=3]

[/size][size=3]

[/size][size=3]

[/size][size=3]

rick%20dykstra_CI.jpg

சர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான் பயப்பட ஆரம்பித்துள்ளது என இலங்கைக்கான கனேடிய நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது.

கனடா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேச நாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும்.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், தமிழர்கள் சம பிரஜைகளாக வாழக்கூடிய வழியேற்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தாங்கள் மீளாய்வு செய்யப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் கனடாவிற்கு திருப்தியான முடிவு ஏற்படாதபட்சத்தில் கனடியப் பிரதமர், இலங்கையில் அடுத்தவருடம் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடிய மனிதவுரிமை மையத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[/size]

நன்றி

குளோபல் தமிழ்

சிலவற்றில் சில விவேகமில்லாத ஆராய்வுகள் சர்வதேச மட்டத்தில் கட்டி எழுப்பட்டுவிட்டது. அதனால் இந்த கனேடிய பா.உ தமிழ் மக்களுக்கு நல்ல செய்ய வெளிக்கிட்டு தன்னை அறியாமல் தீமை செய்துவிடப்போகிறார்.

ஐ.நா 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கிறது. இது எள்ளவும் சரியில்லை. இதில் தமிழரின் சொத்துகள் அடங்கவில்லை. இதில் 1956 இலிருந்து அரசாங்கங்கள் செய்த கொலைகள் அடங்கவில்லை. கொலைகள் தமிழரின் பெரும்பாண்மை அழிக்க செய்யபட்ட கொலைகள்.

பெரும்பாண்மையை அழிக்க மேலும் இரண்டு வகை கொலைகள் செய்யப்பட்டன. அதில் முதலாவது இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமை சட்டத்தில் நடை பிணங்களாக்க பட்டு அழிக்கபட்ட தமிழர். இரண்டாவது, சிங்கள அரசின் கொலை முயற்சிகளில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்யோடிய அகதித்தமிழர். அதாவது ஜனநாயகத்தை கையில் எடுக்க தென் பகுதி சிங்கள மக்கள் செய்த கொலைகள்தாம் இவை.

உண்மையாக சிங்கள அரக்கன் அரசுகள் மீது பழி சுமத்துவதாயின், 2-3 மில்லியன் தமிழரை இலங்கையிலிருந்து அழித்த திருப்தியில் இருப்பதாகதான் குற்றம் சாட்ட வேண்டும். ஆனால் இதனால் மிஞ்சிய தமிழருக்கு ஒரு நன்மையும் வராது. எனவே தேவையானது அவர்களின் நிலங்களை காப்பாற்றி அவர்களை அவர்களின் போக்கில் வாழவிடுவதாகும்.

வெளிநாடுகள், தமிழருக்கு உரிமை கொடுக்காவிட்டால் வன்முறை திரும்ப வெடிக்கும் என்று சிங்கள அரசை மிரட்டப்பார்கின்றன. ஆனால் அதேநேரம் உரிமை கொடுத்தால் வன் முறை வெடிக்கும் என்ற சிங்கள அரசுகளின் கூற்றை செவி மடுக்க தவறுகின்றனர்.

இலங்கையில் ஆயுத போராட்ட இயக்கம் தோன்றி்த் தமிழ் மக்காளால் அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டத்தின் காரணம் சிங்கள அரசுகள் என்பதுதான் வெளிநாடுகள் நம்புவது.

தமிழ் மக்களின் இயல்பு உரிமைக்காக போரடுவது என்பதால் இந்த அனுமானம் பிறக்கிறது. இது நடந்த உண்மைகளை மறைத்துவிடுகிறது. அதாவது 1948ம் ஆண்டு தொடக்கம் தமிழருக்கு இருந்த உரிமைகளை பறிக்கத்தான் சிங்கள் மக்கள் போராடினார்கள். இவைதான் 1958,1977, 1981, 1983 இன் போதும் அதன் பின்னரும் நடந்தை எல்லாம். இவைகள், தமிழ் மக்களின் உரிமைகளை பறிக்க, சிங்கள மக்கள் போராடி தமிழர்களைக் கொலசெய்து சிங்கள அரசிடம் பலத்தை கையளித்த நிகழ்ச்சிகள்.

தமிழரின் உரிமை சம்பந்தமாக, ஆயுத போரில் எப்படி சிங்களவரும் தமிழரும் ஒருவரை ஒருவர் நிகர்த்தார்களோ அதே மாதிரியே அரசியல் போரிலிலும் இரு பக்கமும் ஒருவரை ஒருவர் நிகர்த்தார்கள்.

சிங்களவர்கள் DS இன் தலைமையின் கீழ் UNP யை அமைத்து வாக்குரிமைகள், மொழி உரிமைகளை பறித்தார்கள். தமிழர்கள் தமிழ் காங்கிரசை, தமிழரசுக்கட்சியை அமைத்து உரிமைகள் கேட்டார்கள். சிங்களவர்கள் SLFP அயை அமைத்தார்கள். இதை சமாளிக்க தமிழர்கள் கூட்டணியை அமைத்தார்கள். சிங்களவர்கள் கூட்டுக்கட்சி ஆட்சிமுறைக்கு போய் தமிழர் உரிமைகளை பறித்தார்கள். தமிழர் கூட்டமைபை உருவாக்கினார்கள்.

இதிலிருந்து சர்வதேச நாடுகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 1948லிருந்து சிங்களவர்கள் தமிழரின் உரிமைகளை பறிக்க அரசியல், ஆயுத போராட்டங்களை தொடர்ந்து பயன் படுத்தி வருகிறார்கள். இதை கவனிக்காமல் தமிழர் அரசியல் போராட்டம் நடத்தி, அது ஆயுத போராடமாக மாறிய வரலாற்றை வைத்து, திரும்ப ஆயுத போராட்டம் வெடிக்கலாம் என்பது பொருத்தமில்லாதது. இனி தமிழருக்கு போராட அரசியல், ஆயுத வெளிகள் இல்லை எனபதால் அவர்களின் போராட்டங்கள் போராடங்களாக இருக்காது. ஆனால் இனி தமிழருக்கு உரிமைகளை கொடுத்தால் அதனால் சிங்கள மக்கள் நடத்தப்போகும் போராட்டங்களில் இருந்து ஒரு தமிழரும் தப்ப முடியாது.

[size=3]வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், தமிழர்கள் சம பிரஜைகளாக வாழக்கூடிய வழியேற்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தாங்கள் மீளாய்வு செய்யப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்[/size]

எனவே இந்த பிரயோசனமில்லாத முயற்சிகளை நிறுத்திவிட்டு இலங்கைக்கு வெளியே போர்க்குற்ற விசாரணையை நடத்தி தமிழரின் நிலங்களை அவர்களிடம் கையளிக்க வேண்டும்.

பிருத்தானியா DS இடம் தமிழ் மக்களின் நிலங்களை கையளிததற்கு மன்னிப்புக் கோரி அழிந்து போன உயிர்களுக்கும் சொத்து பத்துக்களுக்கும் நட்ட ஈடு வழங்க மனிதாபிமான முறையில் முன் வரவேண்டும்.

இதை தமிழர் பக்கத்திலிருந்து, பிருத்தானிய, கோடுகளில் ஒரு வழக்காக தாக்கல் செய்து பிருத்தானிய பிரசைகளுக்கு நடந்தவற்றை விளங்கப்படுத்த வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.