Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைக்கதைகள் என்ற வடிவத்தில் உளவியல் போரில் ஈடுபட்டுள்ள ஆனந்தவிகடன்! அதற்கு காவடி தூக்கும் தமிழ் இணையங்கள்!! – ம.செந்தமிழ்.

Featured Replies

எதிரியின் சகலவிதமான முற்றுகைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்த தமிழர்களை தாயகத்தில் முற்றிலுமாக அழித்தொழித்து காடுகளில் அலையவிட்டுள்ள சிங்களம் புலத்தில் உள்ள தமிழர்களை குறிவைத்து 2009 மே 18 முதற்கொண்டு இன்றுவரை காய்களை நகர்த்தி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு சக்தியாக திகழ்ந்து வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடையே பல்வேறு போட்டிக் குழுக்களை உருவாக்கி பலவீனப்படுத்த கட்டம் கட்டமாக பல்வேறு முயற்சிகளில் சிங்கள உளவுத்துறையும் துணைக்கு இந்திய உளவுத்துறையும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாகவே இந்த ஊடக யுத்தத்தை பார்க்க வேண்டியுள்ளது.

உலகத் தமிழர்களது ஆத்ம பலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத் தொடர்பான ஐயப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் உலகத்தமிழர்களை மூச்சடங்க வைத்து மூலையில் முடக்கிவிடலாம் என சிங்களமும் அதற்கு துணைநிற்கும் சக்திகளும் பெருமுயற்சியெடுத்துவந்தன.

ஈழ தேசத்தின் சொத்தாக விளங்கும் உலகத் தமிழர்களது தலைமகன் பிரபாகரனது இருப்புத் தொடர்பாக ஆரம்பத்தில் எதிர்மறையான சிந்தனைகள் இருந்தாலும் தமிழின விடுதலைக்கு இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன பங்களிப்பை ஆற்றவேண்டும் என்ற உண்மையினை உணர்ந்த புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உறுதியுடன் அதனை முன்னெடுத்து வருகின்றனர்.

அனைத்துலக அரங்கில் தனித்தனியாகவும் குழுவாகவும் அமைப்புகளாகவும் இயக்கங்களாவும் ஒன்றியங்களாகவும் கழகங்களாகவும் பேரவைகளாகவும் புலம்பெயர் தமிழர்கள் விடுதலைக்கான பணியை செவ்வனஆன செய்துவருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் உலக நாடுகளதும் ஆட்சி மன்றங்களினதும் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றங்களாகும்.

வெறுமனே தீவிரமான சிந்தனையுடைய ஒரு இயக்கத்தினுடைய கோரிக்கையாகவே தமிழீழத்தையும் தமிழினத்தின் விடுதலையையும் இதுவரை நோக்கிவந்த உலக நாடுகள் ஒட்டுமொத்த தமிழர்களின் பெருவிருப்பே அதுவென உணரத்தலைப்பட்டுள்ளன.

சில நாடுகள் வெளிப்படையாக தமிழர்களிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அழுத்தமாக குரல் கொடுத்துவருகின்ற நிலையில் பெரும்பாலான நாடுகள் வெளிக்காட்டுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றதை அவதாணிக்கக் கூடியதாக உள்ளது.

இதற்கு காரணம் அவர்களது அரசியல் சுயநலமே. அமெரிக்காவாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் தனித்து நிற்கமுடியாத புறச்சூழலே நிலவுகின்றது. நேரடியாக ஒரு நாட்டை பகைத்துக் கொள்ள முடியாத இக்கட்டில் உலகம் மாட்டிக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமது நலன்சார்ந்தே இந்த உலகநாடுகள் செயல்பட்டுவருகின்றன. பாக்கிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு படுகாயமடைந்த மாணவியின் விடையத்தில் உலகநாடுகள் செயல்பட்டவிதம் இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஒரு பாக்கிஸ்தான் மாணவியின் உயிருக்காக துடிக்கும் உலகம் ஈழத்தில் சிங்கள பேரினவாதப்படைகளால் சிதைக்கப்பட்டுவரும் ஈழத்தமிழர்களை கண்டுகொள்ள மறுக்கின்றது. நடந்தவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு நடைபெறவேண்டிய விடையங்களில் கவனம் செலுத்துவோம் என கூறும் சிங்களமும் உலகமும் தற்போது ஈழமண்ணில்; தமிழினப்படுகொலையின் தொடர்ச்சியாக அரங்கேற்றப்படும் மனித உரிமை மீறல்களையும் நிலப்பறிப்புக்களையும் கடத்தல்கள் காணாமல் போதல்களையும் பாலியல் வன்கொடுமைகiயும் பற்றி பேசவோ தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவோ மறுத்துவருகின்றன.

மனித மிருகம் ராசபக்சேவை மீறி சிறிலங்கா இனப்பிரச்சினை விடையத்தில் தலையிட முடியாத உலகநாடுகள் ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறும் மனிதஉரிமைகள் அமர்வுகளின் மூலம் அழுத்தங்களை கொடுக்க முனைகின்றது.

அத்தோடு தமிழர்களிற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்துள்ளமை முன்னேற்றமான நிலையாகும். முற்றுமுழுதாக சிங்களத்தை ஆதரித்து நடைபெற்று முடிந்த இனஅழிப்புப் போரிற்கு ஒத்துழைத்த நாடுகள் அந்த நிலைப்பாட்டில் இருந்து கருத்தியல் ரீதியாக மாறியுள்ளமை புலம்பெயர் தமிழர்களது இடைவிடாத பெரு முயற்சியின் பலாபலன்களாகும்.

எப்படி அடித்தாலும் தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி வீறுடன் பயணிக்கும் புலம்பெயர் தமிழர்களது போர்குணத்தை கண்டு கலங்கும் எதிரிகள் வேறு வடிவத்தில் தொடுத்துள்ள உளவியல் யுத்தமே உண்மைக்கதை என்ற வடிவத்தில் ஆனந்தவிகடனில் வந்துள்ள கதையாகும்.

ஆனந்தவிகடன் பத்திரிகை தமிழ் பத்திரிகை உலகில் நீண்ட காலம் நிலைத்துநின்று சேவையாற்றி வருகின்றது என்ற அடிப்படையில் எமது ஆதரவு என்றும் உண்டு. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் இதனை செய்திருந்தாலும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் படையணியின் தளபதி ஒருவர் பாலியல் தொழிலாளியாக உள்ளார் என்பது உலகத் தமிழினத்தை உலுக்கும் விடையமாக இருந்தாலும் அதனுடன் வந்துள்ள அரசியல் சார்ந்துள்ள விடையங்களும் தலைவர் இறந்துவிட்டார் என்ற தகவலும் வலிந்தே திணிக்கபடப்பட்டுள்ளது.

பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டிருக்கும் முன்னால் பெண் போராளித் தளபதி மீதான பரிதாபமோ அக்கறையோ போரின் மறுபக்கத்தை சமரசமின்றி வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற சமூக அக்கறையோ துளியும் இந்த செய்தியில் வெளிப்படாமல் பின்னணியில் நிற்பவர்களது எண்ணங்களே பட்டவர்த்தனமாக வெளித்தெரிகின்றன.

இந்த பெண் போராளித் தளபதியைவிட பலர் இன்று வயிற்றுப்பிழைப்பிற்காக எங்கெங்கோ தம்மை வெளிப்படுத்தாது உழைத்துவருகின்றனர். பெரும்பாலானவர்கள் பொய் களவு செய்யாது நேர்மையாக உழைத்துவருவது கண்கூடு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யாரும் வெறுமனே கருவிகளை தூக்கிக் கொண்டு எதிரில் நிற்பவர்களை கொன்று குவிக்கும் இரத்தவெறிபிடித்தவர்களாக இருக்கவில்லை. அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அது சார்ந்த பிரிவுகளில் அவர்களை உள்வாங்கி அந்தத் துறைகளில் அனுபவரீதியான அறிவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் புகட்டியது என்பது வரலாற்று உண்மையாகும்.

அந்த பட்டறிவை கொண்டு இன்று எத்தனையோ போராளிகள் சாரதிகளாகவும் வாகனங்கள் இயந்திரங்கள் பழுது பார்ப்பவர்களாகவும் கணணி வல்லுணர்களாகவும் இரும்பு உருக்கு ஆலைகளில் தொழிலாளர்களாகவும் பணியாற்றி உழைத்துவருகின்றார்கள். சிலர் சொந்தமாகவும் அது சார்ந்த தொழில்களை அமைத்துள்ளார்கள். ஏனையவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தம்மால் முடிந்த வேலைகளை செய்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

போராளிகள் என்றால் தாயகத்தில் முன்பு இருந்த மதிப்பை அறிந்தவர்கள் இன்று அவர்கள் தங்களை வெளிப்படுத்தாது இவ்வாறு வேலைசெய்வதை பார்த்து ஆதங்கப்படுவதை யாரறிவார்கள்.

ஆனந்தவிகடனில் குறிப்பிட்ட பெண் போராளித் தளபதி போன்று பாலியல் தொழிலாளியாக்கப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவரைப்போன்று பாலியல் தொழிலாளி ஆக்கப்பட வேண்டும் என்பது அவர்களிற்கு நேர்ந்த கொடுமையின் பாதிப்பேயாகும்.

சிங்கள இராணுவ அரக்கர்களால் கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களிற்கு உடலை விற்றுத்தான் உழக்க வேண்டும் என்ற புறச்சூழலிற்கு வலிந்து தள்ளப்படும்போது அதனை ஏற்றுக் கொள்வது இயல்பானது.

ஆனால் எமது சகோதரிகள் தாய்மார்கள் பிள்ளைகள் இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டமைக்கு நாம் ஒவ்வொருவரும் காரணமாகும். ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு தலைவன் காட்டிய பாதையில் விடுதலைப் போர் வன்னியில் உக்கிரமடைந்த போது நாம் வாழாது இருந்ததே இந்த இழிநிலைக்கு காரணமாகும்.

என்னதான் ஆயிரம் காரணங்கள் கூறினாலும் நடந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் பெண் போராளித் தளபதியின் இன்றைய வாழ்வை படம் பிடித்துக் காட்டுகின்றோம் என்ற பெயரில் நடைபெற்றுள்ள இந்த மோசடியை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

உண்மைக்கதை என்ற போர்வையில் ஆனந்தவிகடனில் வெளிவந்ததை அப்படியே பரபரப்பாக பிரசுரித்து சில தமிழ் இணையத்தளங்கள் தொடர்ந்தும் பொறுப்பற்றவிதமாக செயல்பட்டுவருவது வேதனையாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மீதும் தாயகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மீதும் சகட்டுமேனிக்கு குற்றம்சாட்டப்பட்டுள்ளமை திட்டமிட்டு சேர்க்கப்பட்டதாகும். அவரவர் அவர்களது எல்லைக்குள் நின்று தம்மாலான வழிமுறைகளில் தமது பங்களிப்பை செய்து கொண்டுதான் உள்ளார்கள். யாரும் யாரையும் கைநீட்டி குற்றம் சொல்ல முடியாது. இது எமக்கான விடுதலை. நாம்தான் போராடிப் பெற்றாக வேண்டும்.

போராடும் உரிமை எல்லா உயிர்களிற்கும் உள்ளது. நாங்கள் போர் வெறியர்கள் இல்லை. கொலைவெறிபிடித்து திரிபவர்களும் இல்லை. ஆனால் போர் சிங்கள பேரினவாத சிங்கள அரசுகளால் வலிந்து ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும். அதன் விளைவே அறவழியில் போராடிய தலைவர்கள் ஓய்ந்து போக இளைஞர்கள் புதுவேகம் கொண்டு கடந்த முப்பதாண்டுகளிற்கு மேலாக விடுதலைப் போரை நடத்தினார்கள்.

இனியும் அடிதான். இதை தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சொல்லவில்லை. அதுதான் உண்மை. நாம் போர் மீது காதல் கொண்டு கருவிகளுடன் கண்களில் கொலைவெறி பிடித்து அலையவில்லை. மாறாக விடுதலை தாகம் கொண்டு சீற்றம் கொண்டு அலையும் வேங்கைப்புலிகள்.

சிங்களனிற்கு தெரிந்த ஒரே மொழி போர்தான். அது இன்று நேற்றல்ல என்றுமே சிங்களத்திற்கு தெரிந்த மொழி அதுவே. நிச்சயம் அந்த மொழியில் நாமும் பதிலடி கொடுப்போம். அது எமது வரலாற்று உரிமையும் கூட. சர்வதேசத்திற்கு தெரிந்த மொழியான அரசியல் வடிவில் நடைபெற்றுவரும் போர் தமிழர்களது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்று அங்கீகரிக்கும் இறுதித்தீர்வை பெற்றுத்தராவிட்டால் சிங்களத்தின் மொழியிலும் பேச நாம் தயார். அதனை முடிவுசெய்ய வேண்டியவர்கள் நடுவில் வந்து பஞ்சாயத்து செய்யும் உலக நாடுகளும் சிங்களமும்தான்.

தாயகக் கனவை சுமந்து காற்றோடு காற்றாகவும் கடலோடு கடலாகவும் மண்ணோடு மண்ணாகவும் வானோடு வானாகவும் கரைந்துவிட்ட எமது மாவீரச் செல்வங்களை நினைத்து வழிபடும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எமது மாவீரர்களை நினைத்து கண்ணீர்சிந்தும் நேரத்தில் அவர்களது விடுதலைக்கனவையும் சேர்த்து பெரு நெருப்பாக ஒவ்வொரு தமிழர்களும் அக்கினிப் பிரளயமாவோம்.

ஆயிரம் எரிமலைகள் எதிர்த்து நின்றாலும் எரிமலைகளையே வென்ற எமது மாவீரர்கள் எமக்குத் துணைநிற்கின்றார்கள் எம்மை வழிநடத்திச் செல்ல தமிழீழத் தேசியத் தலைவர் உள்ளார். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அழிவுகளைக் கண்டு மிரண்டுவிடாது எமது விடுதலையை நோக்கிய பயணத்தை உறுதியுடன் மேற்கொள்வோம். வென்றெடுப்போம் சுதந்திர தமிழீழத்தை.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் :- ம.செந்தமிழ் (04-11-2012)

http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17205:2012-11-04-21-10-30&catid=34:2009-04-30-10-08-44&Itemid=29

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.