Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் குறித்து பிழையைத் தட்டிக் கேட்டதால் எமக்கு அச்சுறுத்தல்: தொடரும் சிங்கள அதிகார வெறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிழையைத் தட்டிக் கேட்டதால் எமக்கு அச்சுறுத்தல்;கடற்றொழிலாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு

தென்னிலங்கை கடற்றொழிலார்களுடைய அத்துமீறல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்து விட்டோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இதனால் மீன்பிடியினையே நம்பியிருப்பவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கை கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் குறித்து ஒன்லைன் செய்திப் பிரிவு அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது மீன்படி முறையில் கரையோர மீன்பிடியும் ஒன்று. கடல் அட்டை கரையோரப் பகுதியிலேயே பிடிக்கலாம். அதனால் தென்னிலங்கை கடற்றொழிலாளர்களது கடல் அட்டை பிடிக்கும் செயற்பாட்டினால் தொடர்ந்தும் எமது கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் இப்போது கடல் அட்டை பிடிக்கும் பருவம் இல்லை. அதனால் அவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அளவில் தான் இங்கு வருவார்கள்.

அடுத்த ஆண்டு பருவத்திலாவது இவர்களது செயற்பாட்டினை நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம் பகுதி மாத்திரம் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை இதனால் அங்குள்ள இராணுவ முகாம்களில் தங்கியிருந்து அவர்கள் சுண்டிக்குளத்தில் இருந்து மணற்காடு வரையிலான கடற்பரப்பில் கடல் அட்டை பிடித்து வருகின்றனர்.

எனினும் இது குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்து விட்டோம். ஆனால் தாம் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற்றுள்ளதாகவும் இலங்கையின் கடற்பரப்பில் எங்கும் தாம் கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி தமக்கு வழங்கப்படடுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஒரு இடத்தில் கடல் அட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் குறித்த பகுதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் அனுமதிக்கவில்லை ஆயின் தொழில் செய்ய முடியாது.

ஆனாலும் சுண்டிக்குளம் பகுதியில் வாடியை அமைத்து தொழிலை மேற்கொள்கின்றனர். இது குறித்து இங்குள்ள இராணுவத்தினரிடம் அறிவிக்கும் போது சங்கத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஒன்றும் உள்ளது.

இது குறித்து கலந்துரையாடுவதற்கு சங்க உறுப்பினர்களை தனியாக வருமாறு இராணுவத்தினர் அழைக்கின்றனர். இதனால் எமக்கு பாதுகாப்பு அற்ற தன்மையே காணப்படுகின்றது.

http://onlineuthayan.com/News_More.php?id=289561597910861998

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.