Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவளி அறிந்தவையும் அறியாதவையும்

Featured Replies

DiwaliLight.jpg

தீபாவளி தெற்காசிய சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகையாக இன்று மாறிவிட்டது. ஆனால் தீபாவளி குறித்துப் பலருக்கும் ஒன்றும் தெரியாமலேயே இருக்கின்றது. ஒரு தமிழ் பெண்மணியிடம் உரையாடும் போது அவர் கூறினார் தீபாவளி முருகன் சூரனை வதம் செய்த நாள் தானே என்றார், அடப் பாவமே, இந்த லட்சணத்தில் தான் பல இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகின்றார்கள். ஊரோடு சேர்ந்து கும்மியடிப்பது போலவே திக்கு திசையின்றி ஒட்டுமொத்தமாக ஊருக்கு கிளம்பி போவது, புத்தாடை, இனிப்பு, பட்டாசு, எதாவது ஒரு கோவிலுக்குக் கடமைக்காக ஒரு விசிட், பிறகு புதுப் படம், தொலைக்காட்சிகளில் மீதி நாள் எல்லாம் இடுப்பாட்டம் பார்ப்பது. சற்றே சிலர் குடி, ஆட்டு இறைச்சிக் கறி என ஒரு ஒதுக்குப்புற பார்ட்டி.

[size=4]இதனைத் தாண்டி தீபாவளி குறித்து வேறு ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவோ நமக்கு நேரமோ ஆர்வமோ இல்லை எனலாம். [/size]

[size=4]தீபாவளி இந்துக்கள் பண்டிகை இல்லை : [/size]

[size=4]முதலில் தீபாவளி இந்துக்கள் பண்டிகை மட்டுமல்ல என்பது நம் எத்தனை பேருக்குத் தெரியும். தீபாவளி வைணவர்களால் மட்டும் கொண்டாடப்படவில்லை, மாறாகச் சமணர்கள், சீக்கியர்களால் கூடக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் காரணங்கள் மட்டுமே வேறாகும். இன்றைய நிலையில் இந்து மதத்தில் உள்ள சைவர்கள் உட்பட அனைவரும், சில இந்திய கிறித்தவர்களும், சில இந்திய முஸ்லிம்கள் கூடத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். [/size]

[size=4]தீபாவளி ஒரு நாள் பண்டிகை இல்லை : [/size]

[size=4]தீபாவளி என்பது கார்த்திகை மாதத்தின் முதல் மறைமதி ( அமாவாஸ்ய ) நாட்களில் பதின்மூன்றாம் நாள் தொடங்கி முழுமதி ( பௌர்ணமி ) இரண்டாம் நாள் வரை ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். [/size]

[size=4]தீபாவளி சைவர்களால் : [/size]

[size=4]தீபாவளி முழுமையாக வைணவர்களால் கொண்டாடப்பட்ட பண்டிகை ஆகும். ஏனெனில் ஐந்து நாள் பண்டிகை முழுமையும் வைணவ கடவுளர்களைப் போற்றியே பூசைகள் செய்யப்படுகின்றது. சைவர்களால் பழங்காலத்தில் தீபாவளி கொண்டாடப் பட்டமைக்கான சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் பிற்காலங்களில் தீபாவளியை சைவர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக லிங்கயாத சைவர்கள் தீபாவளி தினத்தைச் சன்னபசவண்ண தினமாகக் கொண்டாடுகின்றனர். சில சைவர்கள் தீபாவளித் தினத்தைக் கேதார கௌரி விரதமாகக் கொண்டாடி வருகின்றார்கள். [/size]

[size=4]தீபாவளி வைணவர்களால் : [/size]

[size=4]தீபாவளி வைணவர்கள் மத்தியிலேயே வெகுவாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் தீபாவளி தினம் கொண்டாடப்படுவதற்கு வைணவர்கள் சொல்லும் காரணம் இடத்துக்கு இடம் மாறு படுகின்றது. காரணம் ஒரு பண்டிகை கொண்டாடப்படுமானால் ஒரே காரணம் மட்டுமே இருக்க முடியும், ஆனால் வைணவர்கள் பல காரணங்கள் சொல்வதால். இந்தப் புனைவுகள் யாவும் தீபாவளி பண்டிகையோடு பிற்காலத்திலேயே சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றேன். [/size]

[size=4]1. ராமர், சீதை ஆகியோர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து, இராவணன் என்னும் தென்னாட்டு மன்னனை கொன்ற பின்னர் இலங்கையில் இருந்து திரும்பிய தினத்தை அயோத்திய மக்கள் விளக்கேற்றி வரவேற்ற தினம் தான் தீபாவளி எனச் சில மக்களால் நம்பப் படுகின்றது. [/size]

[size=4]2. தென்னாட்டை ஆண்ட பாலி என்னும் மன்னனின் செருக்கை அடக்குவதற்காக வாமன வடிவில் விஷ்ணு அவதாரம் எடுத்து தன் ஒற்றைக் காலில் நசுக்கி பாதளத்துக்கு அனுப்பிய தினம் தான் தீபாவளி என ஒரு சில மக்களால் கூறப்படுகின்றது. [/size]

[size=4]3. காமரூபம் என்றழைக்கப்பட்ட இன்றைய அசாமை ஆட்சி செய்த நரகாசூரன் என்னும் மன்னனை போரில் கிருஷ்ண அவதாரம் எடுத்த விஷ்ணு தோற்கடித்துக் கொன்ற தினத்தையே தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழ்நாட்டில் பலரும் நம்பி வருகின்றனர். [/size]

[size=4]4. கோகுலத்தில் வாழ்ந்த மக்கள் மீது இந்திரன் கடும் மழை பொழிந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டதாகவும், அவர்களையும் ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை ஒற்றை விரலால் குடையாக்கி கிருஷ்ணர் காப்பாற்றிய தினத்தையே தீபாவளியாகக் கொண்டாடியதாக வடநாட்டில் சிலர் நம்பி வருகின்றனர். [/size]

[size=4]ஆகவே தீபாவளிக்கு ஒரு பொதுவான காரணங்கள் வைணவர்கள் மத்தியில் காணப்படவில்லை. ஆகவே இந்தப் புனைவுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டு இருக்கும் என்பது உறுதியாகின்றது. [/size]

[size=4]தீபாவளி சமணர்களால் : [/size]

[size=4]பலரும் அறியாத ஒரு விடயம் தீபாவளி சமணர்களால் கூடக் கொண்டாடப்படுகின்றது. சமணர்களின் இறுதி தீர்த்தங்கரர் ஆன மகாவீரர் மோட்சம் அடைந்த தினத்தையே தீபாவளியாகச் சமணர்கள் கொண்டாடுகின்றார்கள். மகாவீரரின் மூத்த சீடரான கணாதர கௌதமர் என்பவர் கேவல ஞானம் அடைந்த தினமும் தீபாவளி என அவர்களால் கூறப்படுகின்றது. [/size]

[size=4]தீபாவளி குறித்த மிகப் பழமையான குறிப்பு சமண நூல்களிலேயே முதன்முறையாகக் காணப்படுகின்றது. ஆச்சார்யா ஜினசேனர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் எழுதிய சக சம்வதம் என்னும் நூலிலேயே முதன்முறையாகத் தீபாவளிக் குறித்த தகவல் காணப்படுகின்றது. [/size]

[size=4]தீபாவளி சீக்கியர்களால் : [/size]

[size=4]சீக்கிய மக்களுக்குத் தீபாவளி தினம் முக்கியத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. சீக்கியர்களின் ஆறாவது குருவான, குரு அர்கோபிந்த் சிங்க என்பவர் சிறையில் இருந்து விடுதலையான தினமாகத் தீபாவளி கருதப்படுகின்றது. [/size]

[size=4]தீபாவளி பௌத்தர்களால் : [/size]

[size=4]பௌத்த மதத்துக்கும் தீபாவளிக்கும் முக்கியமான தொடர்புகள் எதுவும் காணப்படவில்லை. இருந்த போதும் தெற்காசியாவில் சில பௌத்தர்களால் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. முக்கியமாக நேபாளத்தில் வாழும் பழங்குடி நெவார் புத்தர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அசோக மாமன்னர் பௌத்த மதத்துக்கு மதம் மாறிய தினமாகத் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தத் தினத்தை அசோக விஜயதசமி என்றழைக்கின்றனர். [/size]

[size=4]வங்கதேசம், இலங்கையில் வாழும் பௌத்தர்கள் சிலரும் இந்த நாளை கொண்டாடுகின்றனர். ஆனால் மகாயானம், திபெத் பௌத்த பிரிவுகளிலும், தெற்காசியாவுக்கு வெளியே உள்ள பௌத்தர்களில் தீபாவளி காணப்படவில்லை. [/size]

[size=4]தீபாவளி பட்டாசுகள் அக்பரால் கொண்டு வரப்பட்டவை : [/size]

[size=4]தீபாவளியில் இன்று முக்கியமாகக் கருதப்படுவது பட்டாசுகள். ஆனால் பழம் இந்திய சமூகத்தில் பட்டாசுகள் இருந்திருக்கவில்லை. முக்கியமாக இந்தியாவை ஆட்சி செய்த முகாலய மன்னர் அக்பர் தமது அரசவையில் தீபாவளிக் கொண்டாடியதாக அய்ன் அக்பரி என்ற நூல் கூறுகின்றது. அதே போலத் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்கு முறைகளை அக்பரே முதன் முறையில் அறிமுகம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகின்றது. [/size]

[size=4]தீப ஒளி என்பது அபத்தம் பெயர் : [/size]

[size=4]அண்மையக் காலமாகத் தமிழ் மயப்படுத்த முனையும் சிலர் தீபாவளி என்பதைத் தீப ஒளி நாள் என்று கூறி வருகின்றனர். ஆனால் அதன் அவசியமே இல்லை எனலாம். ஏனெனில் தீப + ஆவளி என்ற இரு வடமொழி சொல்லே தீபாவளி ஆகும். அதாவது வரிசையாக வைக்கப்படும் விளக்கு அல்லது தீ என்று பொருள் படும். தமிழ் படுத்துவேன் பேர்வழிகளே முதலில் தீபம் என்ற சொல்லே தமிழில்லை, அதுவே வடமொழி, அப்புறம் என்னத்துக்குத் தீப ஒளி மட்டும் தமிழில். பண்டைய தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டமைக்கான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால் இத்திருவிழா வடநாட்டு ஊடாகவே வந்ததாக நம்புவோமாக. [/size]

[size=4]தீபாவளி உலகில் இன்று : [/size]

[size=4]தீபாவளி இன்று இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் எங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி தினம் விடுமுறை தினமாக இந்தியா, நேபாளம், சிறீ லங்கா, மியன்மார், மொரிசியஸ், மலேசியா, சங்கப்பூர், கயானா, டிரினிடட் - டொபாகோ, சுரிநாம், பிஜி ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. [/size]

[size=4]அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் வாழும் தெற்காசிய மக்கள் பலரும் தீபாவளியை தத்தம் வழக்கங்களுக்கு ஏற்றவாறு கொண்டாடுகின்றனர். [/size]

[size=4]தீபாவளி ஒரு பாகன் திருவிழாவின் எச்சமே : [/size]

[size=4]தீபாவளி இன்று உலகம் முழுவதும் பல்வேறு மதம் சார்ந்த மக்களால் கொண்டாடப்பட்டாலும். இதன் ஆதி தொடக்கம் பாகன் - பழங்குடி சமூகத்தில் இருந்தே தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாகத் தீ என்பது குளிரை விரட்டக் கூடியது, இருளை விரட்டக் கூடியது. நவம்பர் மாதம் என்பது வட துருவ நாடுகள் எங்கும் குளிர்காலத் தொடக்கமாகும், பகல் சுருங்கி இருள் நீண்டு இருக்கும். ஆகவே குளிரை விரட்ட, இருளை குறைக்க மக்கள் இப்படியான தீ சார்ந்த திருவிழாக்களைக் கொண்டாடி வந்தமைக்கான குறிப்புக்கள் உலகம் எங்கும் காணப்படுகின்றது. இதன் பரிணாமமே பிற்காலத்தில் புனைவு, வரலாறுகள் இணைக்கப்பட்டு இன்று தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது என்றே நான் கருதுகின்றேன். [/size]

[size=4]http://www.kodangi.c...ml#.UKEIkeRQaFA[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, நாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் தமிழினம்!

கட்டுரைகள் | ADMIN | NOVEMBER 12, 2012 AT 19:21

‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ என்றால் ‘வரிசை’. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.

ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும் அதனால் தான் இதற்கு தீபாவளி என்று பெயர் வந்தது

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வௌ;வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

ஐப்பசி மாத அமாவாசைக்கு முன் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அதனடுத்த கார்த்திகை சுக்கிலப்பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளி சம்பந்தப்பட்ட நாட்களாகும். தீபாவளி என்னும் சொல்லுக்கு தீபங்களின் வரிசை என்பது பொருள். உலகில் உள்ள எல்லா இந்துக்களும் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இது மிக மிகப் பழங்காலதிருந்த்தே இந்துக்களின் வாழ்க்கையோடு கலந்துபோன கொண்டாட்டமாகும்.

கிருஷ்ண பகவான் நரகன் என்ற அசுரனை வதம் செய்தபோது அவனுடைய கடைசி வேண்டுகோளிற் கேற்ப தீபாவளிபண்டிகை கொண்டாடப்படுகிறது என்பது ஐதீகம். வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டடுவதுண்டு.

இத்திருநாளிலே எமது அக இருள் ஒழிந்து போக வேண்டுமென்றும், அக அழுக்கு இல்லாமல் போக வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள். நரகாசுரன் கண்ணனால் ஆட் கொள்ளப்பட்டபோது தன்னைப்போல் எல்லோரும் கண்ணன் திருவடிகளை அடையவேண்டுமென்று விரும்பினான். அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள்.

தீபாவளி பட்டாசு

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் ‘கங்கா தேவி’ வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை, நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சில

இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகௌரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்

தீபா’வலி’யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் ‘தீபாவளி வாழ்த்துக்கள்’ சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதான் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழினவிடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள்.

முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ஸ.

தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

சமண சமயப் பண்டிகையே தீபாவளி தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் ஸ்ரீ விளக்கு, ஆவலி ஸ்ரீ வரிசை தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி

நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80

தொகுப்பு . விபுலமாமணி சாஹித்யசாகரம் வி.ரி.சகாதேவராஜா

http://thaaitamil.com/?p=38246

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வேலைசெய்து கொண்டிருக்கும்போது தீபாவளியைப் பற்றி யாழில் எழுதி விளக்கம் கேட்க வேண்டுமென்றிருந்தேன். ஆனால் பொருத்தமான நேரத்தில் பதிவிட்ட தமிழீழனுக்கும் தொடர்ந்து பதிவிட்டுள்ள கறுப்பியவர்களுக்கும் நன்றிகள்.

ஏனென்றால், நேற்று ஒரு உரையாடலைக் கேட்டபோது இப்படி ஒரு கட்டுரை கிடைத்தால் அனுப்பித் தெளிய வைக்கலாமென்று....

இடம்: தமிழ்ப்பாடசாலை முன்றல்

(அன்பன், அறிவன், எழிலன், அகரன் ஆகியோர் சந்திக்கின்ற வேளையிலே....)

அன்பன்: வணக்கம் அறிவு.....

அறிவன்: வணக்கம்! வணக்கம்..

(எல்லோரும் எல்லோரும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்)

எழிலன்: என்னமாதிரி அன்பன் நாளையிண்டைக்குத் தீவாளியெல்லே....

அன்பன்: டேய்! ஓமடப்பா.... என்னமாதிரி.

எழிலன்: சா...! எங்கட கிளப்பாலை கொண்டாடியிருக்கலாம்...

அமுதன்: அது எங்கட கொண்டாட்டமில்லையே..!

அறிவன். சரியாச் சொன்னீர் அமுதன்....

எழிலன்: என்ன சொல்லுறீர்............

ஆறிவன்: ஆரியர் திணிச்சதை நாங்க பிடிச்சுக் கொண்டு நிக்கிறம்...

அமுதன்: நான் நீண்டகாலமாச்சுக் கொண்டாடி....

அன்பன்: சரி! சரி! அண்டைக்கு நாங்கள் ஒருடத்தில சந்திச்சுக் கபே குடிப்பமே!

அமுதன்.: அதுக்கென்ன... குடிப்பம்... எழிலன் என்னமாதிரி...

எழிலன்: எனக்குப் பின்னேர வேலை இந்தக்கிழமை... நான் வரப்போறன்.....

[size=4]முகநூலில் [/size]

[size=1]

[size=4]ஒருவர்:[/size][/size][size=1]

[size=4]தங்கள் முப்பாட்டன் நரகஅசுரன் கொல்லப்பட்டமையை 'தீபாவளி' விழாவாக கொண்டாடும்...ஈனப்பிறவிகளை என்னவென்று சொல்ல... மானம்[/size][/size]

[size=1]

[size=4]ரோசம்....அற்றவர்கள்தான் தீபாவளி கொண்டாடுவார்கள்....[/size][/size]

[size=4]இனி வரும் காலங்களில் பெற்றதாய் செத்த நாளையும் விழாக கொண்டாடுவார்கள் போல...

பி.கு: தயவு செய்து எனக்கு யாரும் தீபாவளி வாழ்த்து கூறாதீர்கள். நான் என் மூதாதையரை மதிப்பவன்.[/size]

[size=4]மற்றையவர் :[/size]

தீபாவளி தமிழருடைய விழா தமிழருடைய விழாக்களை தம்முடையது ஆக்கி அவர்கள் ஒரு காரணத்தை சொன்னால் அதை நாம் ஏன் சொல்கிறோம் எங்கள் பிள்ளைகளுக்கு அப்படி அவர்கள் சொல்வதையே ஈ அடிச்சான் கொப்பி மாதிரி சொல்வது தான் பிழை தவிர கொண்டாடுவது அல்ல தீபாவளி தமிழர்களின் இடங்களில் காலநிலை காரணம் ஆக வீட்டை ஊரை நகரத்தை நாட்டை சுத்தம் செய்ய செதுக்க பட்ட விழா.

எதை எடுத்தாலும் எதிர்ப்பதை விட ஏலவே எமது மக்கள் கொண்டாடுவதை எமது ஆக்குவதே புத்தி சாலிதனம்.

மற்றையவர் #2:

[size=4]தோழர்களே !!! என்றைக்கு தாய் தமிழகத்திலும் , தமிழீழத்திலும் நாம் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்திவிட்டு நம் விடுதலையை , நாம் உரிமையை மீட்டு எடுகிறோமோ அன்றுதான் நமக்கு தீபாவளி கொண்டாட்டம் மற்ற எல்லாம் ... இதை மனதில் நிறுத்தி , தீபத்தை ஏற்றி வையுங்கள் .[/size]

[size=4]மற்றையவர் #3:[/size]

[size=4]ஐயா..காரணங்கள் சொல்லி நியாயப்படுத்த முடியாது.பிழை பிழைதான்.இன்னும் ஒரு தலை முறை கழிய மே.18 கூட கொண்டாட்டமாக்கப்படலாம்...[/size]

[size=4]அதிகாரம் கொண்டோருக்கு வேண்டப்படாத எவருடை நாளும் கொண்டாடப்படலாம்.அதற்கெல்லாம் விளக்கங்கொடுத்து உற்சாகப் படுத்த ஆட்களில்லாமலா போவார்கள்???[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.