Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று சில கசப்பான உண்மைகளை பேச வேண்டியுள்ளது. - மனோ கணேசன்

Featured Replies

இந்த நொடியில், என் மனதில் (13/11/12) >>>>>>

(தயவு செய்து இந்த பதிவை மீள்-பதிவு செய்யுங்கள். please share this post)

இன்று தீபாவளி. (வாழ்த்துக்கள் !).

இன்று சில கசப்பான உண்மைகளை பேச வேண்டியுள்ளது. அடுத்த தீபாவளின்போது இன்று பேசியவைகளை நினைவில் மீட்டு பார்ப்போம்.

புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும், தமிழக கட்சிகளும் தமது போராட்ட வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும்.

புலத்திலும், தமிழகத்திலும், உள்நாட்டு தமிழ் தலைமைகளின் போக்கிலும் உரிய வியூக மாற்றங்கள் ஏற்படாவிட்டால் - சாட்சிக்காரனின், சொந்தக்காரனின் கால்களில் விழுவதைவிட சண்டைக்காரனின் கால்களிலேயே விழுவோம் என்ற கொடும் முடிவுக்கு காலம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை தள்ளி விடலாம்.

ஒரு இலக்கை நோக்கி இலங்கை அரசு காய் நகர்த்துகிறது. அது படிப்படியாக நடந்துவிட்டால், விடுதலை புலிகளைபோல், இலங்கை தமிழர்களும் வரலாறாகி விடுவார்கள். புலத்தின் அமைப்புகளும், தமிழக கட்சிகளும், இலங்கை தமிழர் தொடர்பான வரலாற்று பெருமைகளை மாத்திரம் பேசி, மாநாடுகள் நடத்தலாம்; கொண்டாடலாம். இது எச்சரிக்கை.

முழு இலங்கையையும் சிங்கள பெளத்த மயமாக்கி, தமிழ், முஸ்லிம் மக்களை 'ஆக வாழ்வதற்கு மாத்திரம் அனுமதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள்' என்ற அந்தஸ்த்தில் வைக்கும், இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றது.

ஆயுத போராட்டத்தில் தோற்று போன தமிழர்கள் (ஆயுத போராட்டம் செய்யாத முஸ்லிம்களும் கூட...), கொடுப்பதை வாங்கி கொண்டு, அடங்கி வாழ வேண்டும் என்ற கொள்கைதான் இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படை.

இந்த வேலைத்திட்டத்தை முறியடிக்க கூடிய சக்திகள் மூன்று.

ஒன்று-உள்நாட்டு தமிழ்த்தலைமை, இரண்டு-புலம்பெயர் தமிழர் அமைப்புகள், மூன்று-தமிழக ஆதரவு சக்திகள்

(சர்வதேசமும், தென்னிலங்கை சிங்கள அமைப்புகளும் துணை வேலைகளைத்தான் செய்ய முடியும்)

உள்நாட்டில் அறவழி ஜனநாயக போராட்டங்களை முன்னேடுப்பதுக்கு தர வேண்டிய முக்கியத்துவத்தை (முன்னுரிமையை), சர்வதேச அரசாங்கங்களுடன் கலந்து உரையாடுவதற்கு மாத்திரம் தருகின்ற போக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடைபிடிப்பதால், அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தங்கு தடை இன்றி வெற்றிகரமாக நடை பெறுகிறது. இந்த யதார்த்தம் உள்நாட்டில் தமிழர் மத்தியில் பாரிய நம்பிக்கையீனத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்களின் அமைப்புகளும், இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னெடுக்கும் தமிழக அரசியல் கட்சி-அமைப்புகளினதும் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அங்கே நிலைமைகள் என்ன?

இலங்கை தமிழர்களுக்கு 'பணி'யாற்றுவதில், தமிழக அமைப்புகளுக்கு இடையில் இடம்பெறும் குத்துவெட்டுகளும், ஒற்றுமையின்மையும் இலங்கையில் வாழும் தமிழர்களை மனக்கிலேசத்துக்கு உள்ளாக்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்து கட்சிகள் மத்தியில் இருக்கின்ற 'அவர் வந்தால், நான் வரமாட்டேன்-நான் வேண்டுமானால் அவர் கூடாது' என்ற போட்டா-போட்டி சிந்தனைகள் ஏமாற்றமளிக்கின்றன.

அதேபோல இலங்கை தமிழர்களான புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகின்ற, இன்னமும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த ஒரே நேர்கோட்டில் சிந்திக்காமை மற்றும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலில் உரியவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரிசைப்படுத்தாமை ஆகிய விவகாரங்கள் இலங்கை வாழ் தமிழர் மத்தியில் சலிப்பு தட்டும் செய்திகளாக இருக்கின்றன.

தமிழக, புலம்பெயர் அமைப்புகள், புலிக்கொடிகளை சுமந்துகொண்டு போராட்டங்கள் நடத்துவது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அமைப்பினதும் சுய முடிவுகளை அடிப்படையாக கொண்டது.

விடுதலை புலிகளின் அர்ப்பணிப்பு, தியாகம், நேர்மை ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டியதில்லை. அவை வரலாற்றில் பதிவாகியுள்ளன.

ஆனால், இன்றைய நவீன சவால்களை வெற்றிகரமாக சந்திப்பதற்கு நாம் எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். எடுத்ததற்கெல்லாம் வரலாற்றில் பதில் தேடினால் எப்படி?

இன்றைய சவால்களை சந்திக்க, இன்றைய யதார்த்தங்களை புரிந்துகொண்டுதான், நாம் வியூகங்களை அமைக்க வேண்டும். இதை புரிந்துக்கொண்டு நாம் செயல்படாவிட்டால், 'எல்லாமே' விரைவில் முடிவுக்கு வந்து விடும்.

இதை நான், டொரோண்டோ-பாரிஸ்-லண்டன்-சிட்னி அல்லது சென்னையிலிருந்து சொல்லவில்லை. இங்கே சிங்கத்தின் குகையில் (கொழும்பில்) இருந்தபடி என்னால் (நம்மால்) இயன்ற அனைத்து பணிகளையும் ஆற்றியப்படித்தான் சொல்கிறேன்.

'தமிழீழம் வரும், மீண்டும் தலைவன் வருவான், மீண்டும் போராட்டம், தனி நாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பு.......' ஆகிய பல்வேறு கோஷங்களுடன் புலத்திலும், தமிழகத்திலும் கருத்துருவாக்கங்களும், அமைப்புகளும், போராட்ட முன்னெடுப்புகளும், மாநாடுகளும் நடைபெறுகின்றன.

இவை பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால், இந்த மேல்மட்ட நோக்கங்களை முன்னிறுத்தி செயலாற்றுவதை இடை நிறுத்தி விட்டு, நேரடி-குறிப்பட்ட பிரச்சனைகளை (specific issues) அடையாளம் கண்டுகொண்டு வியூகங்களை மிக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று சொல்கிறேன்.

இதை புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர்களின் அமைப்புகளும், இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னெடுக்கும் தமிழக அரசியல் கட்சி-அமைப்புகளினதும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

குறிப்பாக, இன்று இங்கே பதிமூன்றையும் பின் தள்ளிவிட்டு பத்தொன்பதை கொண்டு வருவதற்கு அரசு தயாராகி வருகிறது. பதிமூன்றில் எதுவும் இல்லை; ஆகவே அது போனால் போகட்டும் போடா என்று சொல்லிக்கொண்டு இருப்பது சரியல்ல.

இது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தை. தமது 'ஈழ போராட்டத்தை' சற்று ஒத்திவைத்துவிட்டு தமிழக அமைப்புகள் இந்த உடன் பிரச்சினைகளில் தலையிட வேண்டும். இந்திய மத்திய அரசை தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

அத்துடன், நில அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம். இராணுவ குடியிருப்புகள் அமைப்பு, தமிழர்கள் செறிந்து வாழும் மாகாண-மாவட்ட எல்லைகளை மாற்றியமைக்கும் முயற்சி, அரசியல் கைதிகளின் பிரச்சினை, வன்னி நில பெண்களின் பரிதாப நிர்க்கதி நிலைமை, காணாமல் போனோரின் பிரச்சினை, கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் சிபாரிசுகள்கூட நடைமுறைபடுத்தாமை, போர் முடிந்து மூன்று வருடமாகியும் அரசியலமைப்பின் 13ம் திருத்ததையும்கூட அமுலாக்காமை, நம்ப முடியா காரணங்களை சொல்லிக்கொண்டு இன்னமும் வட மாகாண தேர்தலை நடத்தாமை ஆகிய பல்வேறு 'எரிந்து' கொண்டு இருக்கும் பிரச்சினைகளை பற்றி தமிழக கட்சிகள் மற்றும் புலம் பெயர் அமைப்புகள் பேச வேண்டும்.

குறிப்பட்ட அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் (specific issues) தொடர்பில் பேசி, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவை சம்பந்தமான மேலதிக தகவல்களை எம்முடன் பரிமாறிக்கொள்ளவேண்டும்.

(குறிப்பாக இராணுவ ஆட்சியில், வன்னி நில பெண்களின் பரிதாப நிர்க்கதி நிலைமைபற்றி தமிழக பெண்கள் அமைப்புகளுக்கு எவ்வளவு தெரியும்? இந்த பிரச்சினை உலக மகளிர் அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்).

இவை எதுவும் நடைபெறாவிட்டால் – அதாவது, புலத்திலும், தமிழகத்திலும், உள்நாட்டு தமிழ் தலைமைகளின் போக்கிலும் உரிய வியூக மாற்றங்கள் ஏற்படாவிட்டால் – சாட்சிக்காரனின் - சொந்தக்காரனின் கால்களில் விழுவதைவிட சண்டைக்காரனின் கால்களிலேயே விழுவோம் என்ற கொடும் முடிவுக்கு காலம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை தள்ளி விடலாம்.

ஏற்கனவே, இலங்கையின் மேற்கு கரையில் ஒருகாலத்தில் வாழ்ந்த தமிழர்கள், இன்று தமிழர்கள் இல்லை. அவர்களது, மதம், மொழி ஆகியவை மாற்றப்பட்டு, சிங்கள இனத்துக்கு உள்ளே அவர்கள் (assimilation) உள்வாங்கப்பட்டுவிட்டார்கள் . இன்று அவர்கள் தமிழர்கள் இல்லை.

இந்த இலக்கை நோக்கித்தான், இலங்கை அரசு காய் நகர்த்துகிறது. இவை படிப்படியாக அது நடந்துவிட்டால், விடுதலை புலிகளைபோல், இலங்கை தமிழர்களும் வரலாறாகி விடுவார்கள். புலத்தின் அமைப்புகளும், தமிழக கட்சிகளும், இலங்கை தமிழர் தொடர்பான வரலாற்று பெருமைகளை மாத்திரம் பேசி, மாநாடுகள் நடத்தலாம்; கொண்டாடலாம். இது எச்சரிக்கை.

http://www.facebook....s/3329055244359

[size=5]

ஆயுத போராட்டத்தில் தோற்று போன தமிழர்கள் (ஆயுத போராட்டம் செய்யாத முஸ்லிம்களும் கூட...), கொடுப்பதை வாங்கி கொண்டு, அடங்கி வாழ வேண்டும் என்ற கொள்கைதான் இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படை.

இந்த வேலைத்திட்டத்தை முறியடிக்க கூடிய சக்திகள் மூன்று.

ஒன்று-உள்நாட்டு தமிழ்த்தலைமை, இரண்டு-புலம்பெயர் தமிழர் அமைப்புகள், மூன்று-தமிழக ஆதரவு சக்திகள்

(சர்வதேசமும், தென்னிலங்கை சிங்கள அமைப்புகளும் துணை வேலைகளைத்தான் செய்ய முடியும்)

[/size]

[size=4]யதார்த்தாமான கருத்துக்கள். இதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும், இல்லை என்றால் "தமிழன் வாழ்ந்தான்" என்ற வரலாறே மிஞ்சும்.[/size]

சனம் வன்னிக்காட்டுகளில் உயிரோடு வைத்து நடமாடுகிற பிதிராய், பசாசாய் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் போது மேற்நாடுகளின் ஜனநாய இடைவெளிகளை, அந்த அவல நிலைகளை பற்றிய செய்திகளை மேற்கு நாடுகளுக்கு கொண்டுவரப்பாவிக்காமல், இலங்கையை கவனித்துக்கொண்டிருக்கும் மேற்கு நாட்டவர்களின் கண்களில் மண்ணைதூவத்தக்கதா புண்ணாக்குதனமாய் யாழில் 30,000-40,000-50,000 பேரை கூட்டி மானம் இல்லாததனமாய் கச்சேரி வைத்து காட்ட முடியும் என்று வீரம் காட்டுகிறார்கள்.

மனோ கனேசன் இப்படி ஒரு செய்திவிட்டால் யாழில் கருத்து எழுதவே உறவுகளுக்கு கூட காசு கொடுத்துதான் அழைத்துவர வேண்டும்.

கனடாவில் இசை நிகழ்ச்சி குழம்புமாயின் 10 திரி திறந்து ஜனநாயகம் விவாதிப்பார்கள்.

கேவலம் :wub:

யாழில் நமது புலம் பெயர் இயங்கங்களை ஒற்றுமையாக்கி புதிசாய் டிசல் அடிச்சு எப்படி உயிர்ப்பாய் ஓடவைக்கலாம் என்று விவாத்தித்தால் எப்படி?

மனோ கனேசனின் தீபாவளிச் செய்தியை உங்கள் மின்னல் அஞ்சல்கள் மூலம் எல்லோரும் பரப்புங்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.