Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் அறியும் உரிமைக்கு வடக்கு ஆளுநர் கட்டுப்பாடு; செய்தி சேகரிக்க உதயனுக்குத் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sun%20only.jpg

[size=4]வடக்கு மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு கட்டுப்பாடு போட்டுள்ளார் வடமாகாண ஆளுநரும் யாழ். குடாநாட்டில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடைபெற்ற போது இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக இருந்தவருமான ஜி.ஏ. சந்திரசிறி.[/size]

[size=4]வடமாகாண சபையில் இடம்பெற்ற தில்லு முல்லுகள் மற்றும் முறைகேடுகளை "உதயன்' தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியதற்குப் பழிவாங்கும் வகையில், "உதயன்' பத்திரிகைக்கு ஆளுநர் மாநாட்டில் செய்தி சேகரிக்கத் தடை விதித்ததன் மூலம் வடக்கில் உள்ள தமிழ் பெரும்பான்மை மக்களின் கருத்தறியும் சுதந்திரத்தை ஆளுநர் தடுத்துள்ளார்.[/size]

[size=4]ஆளுநர் மாநாடு தொடர்பான நிகழ்வுகள் எதற்கும் உதயனை அனுமதிக்கக் கூடாது என்று ஆளுநர் தனது அதிகாரிகளுக்கு கண்டிப்பான வாய்மூல உத்தரவை இட்டுள்ளார். இதனை அவர்களும் செயற்படுத்தினர். [/size]

[size=4]ஆளுநர் மாநாடு தொடர்பில் செய்தியாளருக்கு விளக்கும் முதல் கூட்டம் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கான ஒழுங்குகளை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மேற்கொண்டிருந்தார் கூட்டம் குறித்து "உதயன்'' தவிர்த்து ஏனை ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு அறிவிக்கும் படி அவர் தனக்கு கீழ் உள்ள அலுவலர்களுக்குப் பணித்திருந்தார்.[/size]

[size=4]அந்தக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களின் ஒளிப்படங்கள் கோரப்பட்டது. ஆளுநர் மாநாட்டுக்கென ஊடகவியலாளர்களுக்குத் தனியான அடையாள அட்டைகள் வழங்கப் போவதாக தெரிவித்தே ஒளிப்படங்கள் கோரப்பட்டன. [/size]

[size=4]ஆளுநர் மாநாடு தொடர்பில் இரண்டாவது செய்தியாலர் சந்திப்பு ஆளுநரின் செயலாளர் இளங்கோவனால் ஒழுங்குபடுத்தப்பட்டது. கடந்து திங்கட்கிழமை நடத்தப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பு குறித்தும் "உதயன்' பத்திரிகைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. மற்றெல்லா ஊடகங்களின் செய்தியாளருக்கு அறிவிக்கப்பட்டது. [/size]

[size=4]இவ்வாறு வேண்டும் என்றே திட்டமிட்டு வடக்கு தமிழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கட்டுப்படுத்தி உள்ளார். இதனால் மாநாடு தொடர்பான செய்திகளை "உதயன்' நேரடியாகச் சேகரிக்க முடியாமல் போயுள்ளது. [/size]

[size=4]எமது மக்களுக்குத் தகவல்களை முழுமையாகத் தரமுடியாமல் போகும் நிலை குறித்து "உதயன்' வருத்தமடைகிறார். [/size]

[size=4]எனினும் மாநாடு மண்டபத்துக்கு வெளியேயும், மாநாடு தொடர்பில் நேரடி அற்ற முறையிலும் செய்திகளை சேகரித்து மக்களுக்கு வழங்குவான் என "உதயன்' உறுதியளிக்கிறான்.[/size]

[size=4]http://www.onlineuth...701613115880890[/size]

உதயனுக்கு வாசகர்கள் உதவ முடியாது. உதயன் நடப்பதை கவனமாக பத்திரிகை தொண்டு நிறுவனங்களுக்கு அறிவிக்க வேண்டு. ஒரு நாள் சிலது நடக்கிற சந்தர்ப்பம் இருக்கு. சந்திர சிறி கூண்டில் ஏறி தனது அட்டூளியங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.