Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினத்துக்கு இலங்கை அனுமதி வழங்க வேண்டும்

Featured Replies

[size=2]

[size=4]ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணித்த போராளிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் திகதியை மாவீரர் தினமாக தமிழ் மக்கள் அனுஷ்டித்து வந்தனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இந்த நிகழ்வுகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலேயே இடம்பெறுகின்றன.[/size][/size]

[size=2]

[size=4]இந்த நிலையில் மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் கடைப்பிடிக்க இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு வலியுறுத்தியுள்ளது[/size][/size]

[size=2]

[size=4]போரில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் நினைவுதின நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.[/size][/size][size=2]

[size=4]மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமான நிலையில் இந்தக் கோரிக்கையை அது விடுத்துள்ளது. நேற்றுமுன்தினம் பிரஸல்ஸில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது: [/size][/size]

[size=2]

[size=4]சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்துத் தமிழ் கைதிகளின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும். போரில் பலியான விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும் அனுதாப நினைவு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட அனுமதிக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் அரசியல் நடவடிக்கைகளுக்கு சுதந்திரம் வேண்டும். அத்துடன் இராணுவ அடக்குமுறைகள் மற்றும் காணாமல் போகச் செய்யப்படும் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]மொழி உரிமைக்கு உறுதிப்பாடு அவசியம். தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியம்.[/size][/size]

[size=2]

[size=4]தமிழ் பேசும் மக்கள் தொழில் கல்வி உட்பட்ட விடயங்களில் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்திலும் படைகளிலும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றுள்ளது.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=478641632322792769

[size=4]தொடர்புடையை இணைப்பு:[/size]

[size=5]#1 : http://www.yarl.com/forum3/index.php?showtopic=111633[/size]

[size=5]#2 : http://www.yarl.com/forum3/index.php?showtopic=111602[/size]

[size=5]#3 : http://www.yarl.com/forum3/index.php?showtopic=111627[/size]

  • தொடங்கியவர்

[size=5]கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிகுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்து[/size]

[size=4]இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களை மீண்டும் விரைவில் தொடங்குமாறு மேற்கு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நெருக்கடிகள் தொடர்பான சர்வதேசக் குழு தனது நீண்ட அறிக்கை ஒன்றில் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளது.[/size]

[size=2]

[size=4]இலங்கை அரசு தொடர்ந்தும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேச மறுத்துவருகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ள அந்தக் குழு, தமிழர் பிரச்சினைக்குத்தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடனடியாகப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் இராணுவ நிர்வாகத்தை அகற்றி, வடக்கு மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் உடனடியாக நடத்தி, அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் உரிய அதிகாரப்பகிர்வுக்கு வழிசெய்ய வேண்டும் என்றும் சர்வதேசக் குழுவின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது. [/size][/size]

[size=2]

[size=4]இதற்கு சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு நேற்றுமுன்தினம் பிரஸல்ஸில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது.[/size][/size]

[size=2]

[size=4]அதில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:[/size][/size]

[size=2]

[size=4]மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு உறுதிமொழிகளை புறக்கணித்து வருகிறது. தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிராது தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களை இராணுவமயமாக்கி அங்கு அபிவிருத்திகளையும் இழுத்தடித்து வருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]போர் முடிவடைந்த பின்னர், தமிழ்க் கட்சிகள் மத்தியில் திறந்த அரசியல் நகர்வுகளுக்கான களம் திறக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு அரசு, இடமளிக்கவில்லை. மாறாக, சிங்களத் தேசியவாதிகளை ஊக்குவிக்கும் அரசு அவர்கள் மூலம் நியாயமான தமிழர் கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் ஆகியோருக்கு உறுதியளித்த இணக்கப்பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, சிங்கள வாக்குகளை மையமாக் கொண்டு இலங்கை அரசு செயற்பட்டு வருகிறது.[/size][/size]

[size=2]

[size=4]வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு காரணமாக அங்கு மாகாணசபை தேர்தலை அரசு பிற்போட்டு வருகிறது. அத்துடன் மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=653811632022850363[/size]

  • தொடங்கியவர்

[size=4]" மாவீரர் தினத்தை அனுமதிக்க வேண்டும் " - இதை சிங்களம் செய்தால் அது உண்மையான நல்லிணக்க முதலடியாக இருக்கும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.