Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தVSசிராணி:அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 4ஆம் திகதி

Featured Replies

[size=5]பிரதம நீதியரசர் பதிலளித்துவிட்டார்?[/size]

[size=4]குற்றப் பிரேரணை தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுக்களுக்குமான பதிலை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பதில்களை நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார். இதன் பிரதிகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு பரீசிலனை செய்யும் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே பிரதம நீதியரசர் சிராணி தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கனவே பதிலளித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.[/size]

http://tamil.dailymi...2-13-21-25.html

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]பிரதம நீதியரசருக்காக சட்டத்தரணிகள் ஒன்றுகூடல்[/size]

[size=4]பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு முன் ஆஜராக இன்று வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் செல்லும்போது ஆறு நிறுவனங்களின் தலைமையில் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடவுள்ளனர்.[/size]

[size=4]பிரதம நீதியரசர் காலை 10 மணியளவில் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் கூடுவர் ஜனநாயகத்திற்கான சிவில் இயக்க சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இது அரசியல் நோக்கத்திலான ஒரு செயன்முறையாகும். அத்துடன் இது அநீதியானதும் அரசியல் சட்டத்திற்கு முரணானதுமாகும். நீதிமன்ற தீர்ப்புக்களை தமக்கு சாதகமாக இருப்பதை உறுதி செய்யவே இந்த குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டது என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் இயக்க உறுப்பினர் ஜே.சி.வெலியமுன தெரிவித்தார்.

சிவில் குழுக்கள், தொழிற் சங்கங்கள், மதகுருமார் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட 70 நிறுவனங்கள் இன்று சந்திக்கவுள்ளது என மதுலுவாவெ சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான இயக்கம் தெரிவித்தது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/53274-2012-11-22-16-19-37.html

  • தொடங்கியவர்

[size=5]கோரிக்கையை ஏற்க பிரதம நீதியரசர் மறுப்பு; தெரிவுக்குழு ஒத்திவைப்பு[/size]

[size=4]பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வு டிசெம்பர் 04ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 10.40 மணிக்கு ஆரம்பமானது. அந்த தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர் முற்பகல் 11.21 மணியளவில் ஆஜரானார்.

சட்டவுரைஞர்கள் இன்றி ஆஜராகுமாறு முதலில் பிரதம நீதியரசருக்கு தெரிவுக்குழுவினால் பணிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து சற்று நேரத்திற்கு பின்னர் பிரதம நீதியரசர் சட்டவுரைஞர்களுடன் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

பிரதம நீதியரசருக்கு தமது தரப்பு எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கிய தெரிவுக்குழு அதன் அடுத்த அமர்வை டிசெம்பர் 04ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

இதேவேளை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றப் பிரேரணைக்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு வரும் வரை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதமர் நீதியசர் ஷிராணிபண்டார நாயக்க எவ்விதமான பாதுகாப்பும் இன்றி நாடாளுமன்றத்திற்கு நேற்று வருகைதந்தபோது நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில் கடமையில் இருந்த பொலிஸார் அவருக்கு எவ்விதமான மரியாதையும் செலுத்தவில்லை. பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகள்,நீதவான்கள் செல்கையில் கடமையில் இருக்கும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53317-2012-11-23-09-18-36.html

  • தொடங்கியவர்

24112012-md-hr-2%20copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.