Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டத்துக்கு எதிரான ராஜபக்­ஷ அரசை வீழ்த்த மக்கள் பேரவை உருவாக்கம்

Featured Replies

[size=4]நாட்டின் அரசமைப்புக்கும், சட்டத்துக்கும் எதிராகச் செயற்பட்டுவரும் ராஜபக்ஷ ரெஜிமென்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் மாபெரும் சக்தியான மக்கள் பேரவையை தாம் உருவாக்கியுள்னர் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அமெரிக்கப் பிரதிநிதிகள் சுயாதீனமாக முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கையே இன்றைய ஐக்கிய அமெரிக்க இராச்சியம் உருவாக வழிவகுத்தது என்று தமது செயலுக்கு உதாரணங்காட்டினார்.

"மக்களுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மக்கள் தமது கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கவேண்டும். இதனை அடிப்படையாகக்கொண்டு நாம் அடுத்த வருடம் ஆரம்பம் முதல் வீதிக்கு இறங்கி நாடு முழுவதும் அரச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற "மக்கள் பேரவை' ஆரம்ப நிகழ்வின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

மக்களை அடக்கும் ராஜபக்ஷ "ரெஜிமென்டுக்கு' எதிராகக் குரல் எழுப்பவே நாம் இந்த மக்கள் பேரவையை உருவாக்கியுள்ளோம். வேறுபல நாடுகளிலும் அரசுக்கு எதிராகப் பல அமைப்புகள் உருவாகி அந்த அரசுகளை வீழ்த்தியுள்ளன.

ஆயுத பலத்தைப் பிரயோகிக்காமல் ஜனநாயக முறையில் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இந்த அரசை எதிர்க்கும் நடவடிக்கைகளில் நாம் இறங்கவுள்ளோம். பிரிட்டனில் சார்ள்ஸ் மன்னர் முன்னொரு காலத்தில் நாடாளுமன்றத்தை மூடச்சென்றபோது மக்கள் சபையாக நாடாளுமன்றம் கூடியது.

அத்துடன், பிரிட்டன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சுயாதீனமாக ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கைகள்தான் இன்று ஐக்கிய அமெரிக்க இராச்சியம் உருவாக வழிவகுத்தது. சீனாவில் தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கு ஒரே ஒரு ஆலோசகர் சபையாகச் செயற்படுவது மக்கள் சபைதான்.

ராஜபக்ஷ ரெஜிமன்ட் நாட்டின் அரசமைப்புக்கும், சட்டத்துக்கும் அடிபணிந்து செயற்படுமாயின் மக்கள் பேரவை அமைத்து அதனூடாக அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டிருக்காது. [/size]

[size=4]மக்களின் நலன்களுக்கமைய நாடாளுமன்றம் செயற்படவேண்டும். ஆனால், நமது நாடாளுமன்றம் அவ்வாறு செயற்படுவதில்லை.

1952ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தபோதும் அரசில் இருந்த பல மாறுபட்ட கருத்துகளால் டட்லி சேனாநாயக்க, ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவா ஆகியோருக்கிடையில் பேதம் ஏற்பட்டது. [/size]

[size=4]இதுபோலவே வரலாற்றில் சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் நாடாளுமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றும் வாய்ப்புள்ளது. மக்களது பிரச்சினைகள் குறித்து ஆளுந்தரப்பினர் நாடாளுமன்றத்தில் கதைப்பதில்லை. எதிர்க்கட்சியிலுள்ள 63 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இதுபற்றிக் கதைக்கின்றனர்.

அரபு நாடுகளில் அரசு மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்க்க அரபு வசந்தம் தோற்றம் பெற்றது. அதனால் நாம் இன்று வரவுசெலவுத்திட்டம் குறித்து சுதந்திரமாகக் கருத்து வெளியிடவேண்டும்.

மக்கள் பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அடுத்த வருடம் ஆரம்பம் முதல் வீதிக்கு இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில் அன்று நடந்ததைப்போலவே இலங்கையில் இந்த அரசின் ஆட்சியில் ஜனநாயக கட்டமைப்பு அப்படியே சீர்குலைந்துள்ளது.

எனவே, ஜனநாயக் கட்டமைப்பை மறுபடியும் கட்டியெழுப்ப இந்த மக்கள் பேரவையூடாக நடவடிக்கை எடுத்து மஹிந்த ரெஜிமன்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றார்.[/size]

http://onlineuthayan.com/News_More.php?id=557281634623661933

  • தொடங்கியவர்

cartoon-of-the-day-23_11_2012-600-1.jpg

ub1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.