Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களால் தமிழர்களுக்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும்

Featured Replies

நம்பிக்கை வையுங்கள் என்கிறார் சிறிதரன் எம்.பி

[size=1]

[size=4]இலங்கை அரசின் மீது அழுத்தங்களையும் நிர்ப்பந் தங்களையும் சர்வதேசம் பிரயோகித்து வருகிறது. இதனால் தமிழர்கள் தமக்கான தீர்வைப் பெறுவது வெகு தொலைவில் இல்லை என்பதை பல்வேறு சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. இலங்கை அரசு மிகவும் கபடத்தனமாக, சூழ்ச்சிகரமாக தமிழர்களை கூறுபடுத்தி சிதைக்கும் நாசகாரத்திட்டங்களை எமது மண்ணில் அரகேற்றி வருகிறது. இச் செயல்திட்டங்கள் மூலம் உலக சமூகத்தின் பார்வையிலிருந்து அது தப்பிப் பிழைக்க முயற்சிக்கிறது எனத் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

இலங்கை அரசு இருப்புகளுக்காக கலாசார பண்புகளை குறிப்பாக பெண்களுடைய தனித்துவப் பண்பாட்டை சிதைக்கும் முயற்சிகளில் அரச படைகளின் பங்களிப்போடு அரசு ஈடுபட்டு வருகின்றது. [/size][/size][size=1]

[size=4]எமது மக்களிடையேயுள்ள அறியாமை, வறுமை, பயந்த சூழ் நிலை மற்றும் இராணுவ ஆதிக்க நிலை என்பவற்றை வாய்ப்பாக்கி அவர்களை அச்சுறுத்தியும் ஆசை காட்டியும் மோசம் செய்து வருகிறது. [/size][/size]

[size=1]

[size=4]எமது மாவட்டத்தில் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம் ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, வட்டக்கச்சி விவசாயப் பண்ணை ஆகியவற்றை மூடி வைத்துள்ளார்கள். பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக்கூடிய இத் தொழிற்சாலைகள் இன்னும் இயக்கப்படவில்லை.[/size][/size]

[size=1]

[size=4]ஆனால் இராணுவமயப்பட்ட ஆட்சேர்ப்புகளும், சி.எஸ்.டி. போன்ற துணை நிலை ஆட்சேர்ப்புகளையும் பலத்த உள்நோக்கம் கருதி செயற்படுத்தி வருவது கவலை தருவதும் கண்டிக்கத்தக்கதுமாகும். இளம் பெண்களை இலக்கு வைத்து இராணுவப் படைக்கு இணைத்து மிக மோசமான நீண்டகால இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. [/size][/size]

[size=1]

[size=4]கவர்ச்சிகர சம்பளங்கள், சலுகைகள், அச்சுறுத்தல்கள், தொந்தரவுகளை குறித்த இலக்குக் குடும்பங்கள் மீது படையினர் பிரயோகித்து வருகின்றார்கள். பாடசாலை பிள்ளைகளைக் கூட இணைக்கும் முயற்சிகள் நடந்துள்ளது. பள்ளி அதிபர்களிடமும் கிராம அலுவலர்களிடமும் ஆட்சேர்ப்புக்கு தேவையான ஆவணங்களை இராணுவமே நேரில் சென்று பெற்று வருகின்றது. பெற்றோர்களுக்கு சிவில் அலுவலகங்களில் சாதாரண அரச உத்தியோகங்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை ஏமாற்றி மறைமுகமான பலவந்த ஆட்சேர்ப்பில் இராணுவம் ஈடுபட்டுவருகின்றது. வர்த்தமானி அறிவித்தலோ, அரச தொழில் வழங்கும் நியமங்களோ பின்பற்றப்படவில்லை. இராணுவமே நேரடியாக வீடுகளுக்குச் சென்று இப் பலவந்த ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருகின்றது. ஒரு சில இளம் பெண்கள் பருவ வயதின் அறியாமையாலும், வறுமையால் எழுந்த விரக்தியாலும் இவ்வாட்சேர்ப்பின் பின் செல்லும் நிர்ப்பந்தமும் காணப்படுகிறது. சில சந்தர்ப்பவாத அரசு, கிராம மட்டப் பிரதிநிதிகளும் ஏழைப்பிள்ளைகளை இவ்வாறு இணைக்க ஊக்குவித்து தங்கள் மேலிடச் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். [/size][/size]

[size=1]

[size=4]எமது தமிழ் கலாசாரத்துக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகவே இவ் ஆட்சேர்ப்பு பார்க்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடு சமூகத்தின் வேறுபட்ட பார்வையையும் தோற்றுவிக்கும் நீண்டகாலத்தில் கலப்பினத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படும் பேராபத்தும் அதன் பின்னே இருக்கிறது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size][/size]

[size=1]

http://www.valampurii.com/viewnews.php?ID=35655[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.