Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர பிரஜைகள் அல்லர்: தமிழ் நேசன் அடிகளார்

Featured Replies

[size=4]தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ இந்த நாட்டில் இரண்டாம்தரப் பிரஜைகள் அல்லர். பெரும்பான்மை இன மக்களைப் போன்று அவர்களும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கின்ற மக்களாக சமமாக நடத்தப்படவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்' என மன்னார் மக்கள் பேரவையின் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும் உறவையும் கட்டி எழுப்பும் நோக்கோடு தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர்கொண்ட மக்கள் பேரவை உறுப்பினர்கள் மன்னாருக்கு விஜயம் செய்திருந்தனர்.

இக்குழுவினர், நேற்று வியாழக்கிழமை மன்னார் ஆர்.பி.ஆர்.நிறுவனத்தில் மன்னார் மக்கள் பேரவையினரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே மன்னார் மக்கள் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் குறிப்பாக யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் அரசிடமிருந்தோ ஏனைய நிறுவனங்களிடமிருந்து உலக நாடுகளிடமிருந்தோ சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தமது உரிமைகளைத்தான் எதிர்பார்;க்கின்றார்கள்.

இன்று யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகிய பின்னரும் யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்து மக்கள் இன்னும் விடுபடவில்லை. யுத்தத்தின் சத்தங்கள் ஓய்ந்துவிட்டன. ஆனால் யுத்தத்தின் வலிகள் இன்னும் ஆறவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் இன்னும் குடியமர்த்தப்படவில்லை.

முகாம்களில் இருந்த அவர்கள் காடுகளுக்குள் கொண்டுபோய் விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கென சொந்தமான வீட்டுக்காணிகள், தோட்டக்காணிகள், வயல் காணிகள் இருந்தும் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது.

இதற்கு மிதிவெடி அகற்றப்படவில்லை என்று காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் மிதிவெடி அகற்றப்பட்டுள்ள இடங்களிலும் இந்த மக்கள் குடியேற அனுமதிக்கப்;படவில்லை என்பதே உண்மை நிலையாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ இந்த நாட்டில் இரண்டாம்தரப் பிரஜைகள் அல்லர்' என தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின்போது வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/53302-2012-11-23-06-10-25.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.