Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிக்கடை ஆவி...... யாருக்குச் சொந்தம்...? பல்லவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

welikada_CI.jpg

இலங்கையில் படுகொலைகளுக்குப் பிரபலமான வெலிக்கடைச் சிறையில் தற்போது ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக தற்போது ஓர் புதுக்கதை உலாவி வருகின்றது. ஆவிகளை அடக்கும் வல்லமை பிக்குகளின் பிரித்(து) ஓதும் வல்லமைக்கு இருப்பதாகவும் எனவே உடனடியாக சமயச் சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும் படியும் சிறைச் சாலையின் கடைநிலை அதிகாரிகள் தமக்கு மேலான அதிகாரிகளை மன்றாடிக் கேட்டுக்கொள்ளுமளவுக்கு ஆவிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

[size=3][size=4]வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக உணரப்படுவது ஆவிகள் பற்றிய செய்திகளையும் சம்பவங்களையும் நம்பும் மக்கள் மத்தியில் சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் பல சம்பவங்களின் அடிப்படையில் உண்மைத் தன்மை பெறுகின்றது. நாம் ஆவிகள் இருக்கின்றனவா அல்லது இல்லையா என வாதம் செய்து ஆவிகளை நம்பும் மக்களுக்கு விரோதமானவர்களாக மாற விரும்பவில்லை. அவசியத்தேவை கருதி அந்த மக்களின் நம்பிக்கையில் அதாவது ஆவிகள் உள்ளன என நாமும் இணைந்து சில விடயங்களை ஆராய வேண்டியுள்ளது. [/size]

[size=4]மகசின் சிறைச்சாலை எனவும் பெயர் கொண்ட வெலிக்கடை தனது தேவைகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்டையில் அவ்வப்போது தேவையான பெயர்களை எடுத்துக் கொள்வது வழக்கம். தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்புடைய விடயங்களைப் பேசும் போது மகசின் சிறைச்சாலை தடுப்பு முகாம் எனவும் கைதிகளுக்கிடையிலான முறுகல் என்ற பெயரினால் நடாத்தப்படும் படுகொலை தொடர்பில் பேசப்படும் போது வெலிக்கடை எனவும் அச் சிறைச்சாலை பெயர்களைத் தாங்கிக் கொள்கின்றது. இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலையான அந்தச் சிறைச்சாலை தற்போது ஆவிகளின் சரணாலயமாகவும் பிரபலம் பெற்று வருகின்றது. [/size]

[size=4]வெலிக்கடையைச் சுற்றி வரும் ஆவிகள் யார்? அவர்களின் தேவை என்ன? அவர்கள் யாரை இலக்கு வைத்து அலைகின்றார்கள்? அவர்களை அடக்க என்ன வழி? என வரிசையாக கேள்விகளை நீட்டினால் அக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் எதிர்பாராத விடைகள் எதிர்மறையான விடைகள் கருத்து நிலைகளில் வேறுபட்ட விடைகள் பல நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. [/size]

[size=4]1841 ம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இலங்கை இருந்தபோது அப்போதைய பிரித்தானிய ஆளுனர் கேமரூன் என்பவரின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டதே வெலிக்கடைச் சிறைச்சாலை ஆகும். எல்லாமாக 48ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள இச் சிறைச்சாலையின் மொத்தப் பரப்பளவு 190,000 சதுரமீற்றர்கள் ஆகும். ஏறக்குறைய 1700 தடுப்பு காவல் கைதகைளை தங்கவைக்கும் வசதி கொண்ட இச் சிறைச்சாலையில் இட நெருக்கடி கருதியும் சில திட்டமிடப்பட்ட மறைமுக அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களின் தேவை கருதியும் கொள்ளக்கூடிய எண்ணிக்கையிலும் அதிகமான கைதிகள் தங்கவைக்கப்படுவது வழமையான விடயம். மரணதண்டணை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடும் தூக்கு மேடை ஒன்றும் இங்கு உள்ள போதும் 1959ம் ஆண்டுக்குப் பின்னர் மரண தண்டணை தொடர்பான அரசின் மற்றும் நீதித்துறையின் கொள்கை மாற்றங்களுக்குப் பின்னர் தூக்கு மேடைக்கு வேலையில்லாமல் போனாலும் இச் சிறைச்சாலையில் திட்டமிடப்பட்டு திகதி குறிக்கப்பட்ட ஆனால் சட்டத்துக்கு முரணான மரணங்களுக்கு மலிவில்லாமல் இருந்தமை அண்மைய சம்பவம் வரை நீளும் தொடர்ச்சி. [/size]

[size=4]இலங்கையின் வரலாற்றில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று சுதந்திர இலங்கையை காண விழைந்த பலரும் இச் சிறைச்சாலையின் வாசல்களை தாண்டி உள்ளே சென்றிருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் சிலர் மீள வாசலைத் தாண்டி வெளியே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயம். இரண்டாவது பக்கம் சுதந்திர இலங்கை தானே என தன்னிச்சையாக சுதந்திரமாக மற்றவர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆயிரக்கணக்கான பலரும் இச் சிறைச்சாலையின் வாசலைப் பார்த்திருக்கிறார்கள். இதிலும் ஒரு சிறப்புண்டு. இவர்களில் சிலரும் சிறைவாசலைத் தாண்டி மீளவும் வெளியே வரவில்லை. இவ்வாறு பல சுவாரசியமான பிண்ணணிகளைக் கொண்ட வெலிக்கடை தற்போது ஆவிகளின் அடைக்கலவீடாகி இன்னும் தனது மவுசை அதிகரித்திருக்கின்றது. [/size]

[size=4]இந்த ஆவிகள் யார்...? [/size]

[size=4]இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடியதாக கூறப்படும் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும் தேசபிதா என விழிக்கப்படுபவருமான எ.எஸ்.சேனநாயக்காவும் இந்தச் சிறைச்சாலையில் பிரித்தானிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தான் கனவு கண்ட சுதுந்திர இலங்கையின் நிலையை காண அவரது ஆவியும் தற்போது உலாவித் திரிவதாகவும் கொள்ளமுடியும். அவருடன் கூடவே சுதந்திர போராட்டக்காரர்களான எவ்.ஆர்.சேனநாயக்க மற்றும் கப்டன் ஹென்றி பீரிஸ் அவர்களுடன் சுதந்திரப் போராட்டவாதியும் பௌத்த மத மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவருமான அநாகரிக தர்மபால ஆகியோரும் கைகோர்த்து தாம் முன்பிருந்த வெலிக்கடைச் சிறையின் தற்போதைய நிலைகாண ஆவிகளாக உலாவ முடியும். பாவம் அவர்கள் அவர்கள் புத்திரர்கள் வெலிக்கடையை மரணக் கடையாக மாற்றி வருவதைக் கண்டு கலக்கமடையலாம். [/size]

[size=4]அதேபோன்று அடிமட்டச் சிங்களவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரித்தான இலங்கையை காணவிழைந்து ஆயுதக் கலகங்களில் ஈடுபட்ட போது அடைத்து வைக்கப்பட்ட கேணல் எவ்.சி.டி.சராம் உள்ளிட்ட கிளர்ச்சி வாதிகள், முற்போக்குத் தனமாக ஜே.வி.பி இருந்தபோது இடம்பெற்ற கிளர்ச்சிகளில் பங்குபற்றி தடுத்துவைக்கப்பட்ட இளைஞர்களின் ஆவிகள் என இன்னொரு அணி ஆவிகளும் உலா வர வாய்ப்புண்டு. [/size]

[size=4]அதைவிட இன்னுமொரு முக்கிய அணியினர் உள்ளனர். பெரும்பான்மையினரால் ஆங்கிலத்தில் எழுதப்படும் வெலிக்கடையின் வரலாற்றுக் குறிப்புக்களில் மறக்கப்பட்ட இல்லை மறைக்கப்பட்ட முக்கிய அணியினர் இவர்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட போது கிளர்ந்தெழுந்த புரட்சிவாதிகளின் முதற்படியாக அமைந்து தமது உயிர்களைத் தியாகம் செய்த குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உள்ளிட்ட விடுதலைவீரர்களின் ஆவியாகவும் தற்போது உலாவும் ஆவிகள் இருக்க வாய்ப்புண்டு. பொதுவாகவே நிறைவேறாத ஆசைகளுடன் இளம் வயதில் அகாலமாக மரணத்தை தழுவிய அல்லது கொல்லப்பட்ட உயிர்களே ஆவிகளாக அலைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஆவிகளை நம்புவோர் நம்பும் விடயம். அந்த அடிப்படையில் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகளின் ஆவி தான் அது என தமிழர்கள் உரிமை கோரலாம். பிரித் ஓதி இவ் ஆவிகளை விரட்டலாமா என்பது பிரச்சனையான விடயம். பிரித் மீது அவர்களுக்கு பொல்லாத கோபம்.பிரித் ஓதவரும் பிக்குகளை தம் இலக்காக்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.[/size]

[size=4]1983ம் ஆண்டு யூலை மாதம் 25ம் திகதி, அப்போது ஆட்சியிலிருந்த ஜே.ஆர். அரசு திட்டமிட்டும் கண்டும் காணமாலும் தமது பூரண ஆசிர்வாதத்துடன் அரங்கேற்றிய சிறைப்படுகொலைகளில் தம் உயிர்களைவிட்ட 35 அரசியல் கைதிகளுடன் இரண்டு நாள் கழித்து 27 யூலை படுகொலை செய்யப்பட்ட 18 தமிழ் அரசியல் கைதிகளுமாக சேர்ந்து மொத்தம் 53 பேரும் ஆவி உருவில் தம்மை கொலைசெய்த பாதகர்களை தேடி இன்று வரை அலையலாம். தமிழ்மக்களின் விடிவை தன் கண்களால் காண வேண்டுமென ஆசைப்பட்ட குற்றத்திற்காக கண்கள் தோண்டப்பட்டு கொலை செய்யப்பட்ட குட்டிமணி அவ் ஆவிகளுக்குத் தலமை வகிக்கலாம்.[/size]

[size=4]இந்த அணியை விட இன்னுமொரு முக்கிய அணியினர் தொடர்பிலும் புலன்விசாரணைகளை நடாத்த வேண்டிய தேவை பிரித் ஓத வரும் பிக்குகளுக்கு உண்டு. ஆம் காரணங்கள் எதுவுமின்றி குற்றப்பத்திரங்களும் தாக்கல் செய்யப்படாமல் நீதிமன்ற விசாரணைகள் எதுவும் இன்றி விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் பல்லாண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வரவை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்து வயது வந்து காலமான தாய் தந்தையரும் வருத்தம் வந்து பாதியில் போன மனைவி மக்களும் தங்கள் உறவுகளைக் காண ஆவியாக உருமாறி, எவரிடமும் எந்த அனுமதியும் பெறத் தேவையற்ற இவ் உருவில் சிறைச்சாலைகளில் அலைய முடியும். [/size]

[size=4]அத்துடன் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றுமுழுதாக முதன்முதலாக இலங்கை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்த 1995 ம் ஆண்டை அண்மி;த்த காலப்பகுதிகளிலும் பின்னர் 2006 ஜ அண்டிய காலப்பகுதிகளிலும் குடாநாட்டில் கடத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டு காணமல் போனவர்களாகக் கருதப்படும் உறவுகள் வெலிக்கடையில் தங்கியிருப்பரோ எனும் வேணவாவில் [/size]

[size=4]ஆவிகள் அந்தஸ்தும் குடியுரிமையும் உடைய அவர்கள் உறவுகள் யாராவது அவர்களைத் தேடி அலையலாம்.[/size]

[size=4]அதுபோன்று இறுதிப் போரின் போது மறுவாழ்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் படையினரிடம் தாம் கையளித்து வந்த பிள்ளைகள் கணவன்மார் தற்போது எங்குள்ளனர் என தெரியாது தவித்து ஏக்கத்துடன் இறுதி மூச்சை விட்ட உயிர்களினதோ அல்லது களத்தில் ஒன்றாக இருந்து மரணத்தில் பிரிந்த நண்பர்களின் ஆவியோ இன்று ஒப்படைக்கப்பட்டு காணாமல் போன உறவுகள் அங்குற்றனரோ எனத் தேடி அலையமுடியும். [/size]

[size=4]அல்லது போனால் மனித உரிமைகள் தொடர்பில் வார்த்தைக்கு வார்த்தை நிமிடத்துக்கு நிமிடம் உச்சரித்துக் கொள்ளும் உயர்சபைகளையோ அல்லது உயர்மட்ட மக்களையோ அதிகம் உலுக்காத அண்மைய வெலிக்கடை கைதிகள் படுகொலையின் போது கொல்லப்பட்ட சிங்கள கைதிகளின் ஆவியாகவும் இருக்கலாம். இவர்கள் வெலிக்கடையில் ஆவிகள் என்றவுடன் எல்லோருடைய ஞாபகத்துக்கும் வரும் இன்றைய முதல் மனிதர்கள்.; தற்போது சிறையில் ஆவியை கண்டதாக கூறும் பணியாளர்களின் நம்பிக்கையிலான ஆவிகளும் இவர்கள் தான். [/size]

[size=4]இவர்களின் ஆவி யாரைத் தேடி எதற்காக அலைய வேண்டும்? என்ற கேள்விக்கு வெளியே சொல்ல முடியாத பல விடைகளை காவித்திரியும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தான் இவர்களை ஆவியுருவில் கண்டுள்ளார்கள். மனச்சாட்சியில்; உறுத்தும் உண்மைகளை உரைக்க முடியாத அவர்களின் மனப்பிரமை ஆவிகளை கண்டு அச்சப்படுகின்றது. உலாவித்திரியும் ஆவிகளின் கடைசிக்கட்ட சந்ததிகளும் எதற்காக தம்மை கொலை செய்தார்கள். அவர்கள் சொல்லித்தானே அவர்களுக்காக பலவற்றைச் செய்தோம். ஏன் இறுதியில் பெயர் கூப்பிட்டு அழைத்துச் சுட்டுத்தள்ளினார்கள். தப்பவிடுவதாக வாக்குறுதி அளித்து வாசலில் வைத்து சுட்டுத் தள்ளினார்கள் என பல விடைகாண வேண்டிய வினாக்களுடன் இந்த ஆவிகள் அலையக்கூடும். எனவே சிறைக்காவலர்களே அவர்கள் கேள்விக்கான பதிலை உங்களுக்கு தெரிந்த அளவுக்கு உண்மையாக அவர்களுக்கு சொல்லிவிடுங்கள். உங்களை விட்டு விடுவார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் உங்களை விடமாட்டார்கள் என்ற அச்சமும் உங்களுக்கு இருக்கலாம்.என்ன செய்வது பேய் ஆட்சியில் சிறைகளில் ஆவிகள் வருவது ஒன்றும் புதினமில்லையே. இது தெரிந்தும் எதற்காக ஆவிகளை அடக்க பிசாசுகளை சிறைக்கு அழைக்கின்றீர்கள். இன்னும் ஆவிகள் இனம்பெருகி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல நாட்டின் பாதுகாப்புக்கும் சேர்த்துத் தான்.[/size]

[size=4]நன்றி உதயன் - பல்லவன்[/size]

[size=4]எழுதி முடித்தபின்னர் தான் ஞாபகம் வருகின்றது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வெலிக்கடையில் நாட்டுக்குத் துரோகம் இழைத்ததாக அடைத்து வைக்கப்பட்டிருந்தமை. ஆவிகளைப் பற்றி எழுதியதால் அவர்களை தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. சிலவேளை சுற்றித் திரியும் ஆவிகளின் தேடுதலில் அவர்களும் இருக்கலாம்.ஆளைவிடுங்கப்பா..நமக்கு ஆவியாகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை...[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.