Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்
09 டிசம்பர் 2012
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் குழு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
 
யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் இந்த விசேட பிரதிநிதிகள் குழு கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஜப்பான், நைஜீரியா, ரொமானியா, பங்களாதேஷ் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நிரந்தர பிரதிநிதிகளே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
 
இவர்களுடன் இத்தாலி, பிரேசில், தென் ஆபிரிக்க உள்ளிட்ட ராஜதந்திரிகளும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
 
இந்தப் பிரதிநிதிகள் குழு, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிரந்தரதீர்வு கிடைக்கும் வரை ஐ.நா. படையை நிறுத்துங்கள்; யாழ்ப்பாணம் வந்த வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் வலியுறுத்து
 
நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது.
 
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற சம்பவங்களில் இருந்து அரச படைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை இருப்பதால் இவ்வாறு ஐ.நா. படையை நிறுத்தும் யோசனையை சிவில் சமூகம் முன்வைத்ததாக அதன் பிரதிநிதி ஒருவர் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் விதிவிடப் பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் வந்தது. ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்ன குழுவுக்குத் தலைமை தாங்கினார். ஜப்பான், பங்களாதேஷ், ருமேனியா, நைஜீரியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 
 
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வடக்கின் நிலைமையை நேரில் ஆராய்வதற்காகவே இந்தக் குழுவினர் வருகை தந்திருந்தனர். அவர்கள் சமூகத்தின் பல தரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். 
 
யாழ்ப்பாணத்தில் உள்ள சமாதானத்துக்கும் நல்நெலண்ணத்துக்குமா தூதுக்குழுவினர் காலையில் யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து ஐ.நா. குழுவினரைச் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தனர்.
 
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்து கொள்வதும் மீண்டும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுமே தமது பயணத்தின் நோக்கம் என்று ஐ.நா. குழுவினர் தெரிவித்தனர். 
 
"இலங்கையில் சகல இன மக்களும் சகல விடயங்களிலும் சமமாக நடத்தப்படுவதில்லை. மொழி உரிமை தொடர்ந்தும் மீறப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிகாரப் பகிர்வைக் கேட்டுப் போராடியவர்களுக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் கேட்காதவர்கள் அதனை அனுபவிக்கிறார்கள். 
 
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ் மக்கள் மனதை வெல்ல வேண்டும். ஆனால் அதற்குரிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தமிழர்கள் தமது தனித்துவங்களைப் பேண முடியாத நிலையில் இருக்கின்றோம். 
 
பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதும் படை முகாம்கள் பல அமைக்கப்பட்டிருப்பதும் நல்லிணக்கத்துக்குத் தடையாக இருக்கின்றது.
 
தென்னாபிரிக்காவைப் போன்றதொரு நல்லிணக்கத்தை இங்கு ஏற்படுத்த முடியாது. அங்கு சட்டரீதியான உரிமைகளை மதித்து கறுப்பின மக்கள் வெள்ளையர்களுடன் இணக்கத்திற்கு வந்திருந்தார்கள். 
 
ஆனால் இங்கு இதுவரை செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு ஒப்பந்தங்களும் மதிக்கப்பட்டதில்லை. இங்கு கருத்துச் சுதந்திரமோ பத்திரிகைச் சுதந்திரமோ கிடையாது. இரண்டுமே அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.'' இவ்வாறு சிவில் சமூகத்தினர் ஐ.நா. குழுவினரிடம் வலியுறுத்தினர். 
09 டிசெம்பர் 2012, ஞாயிறு 8:05 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்


இதுகூட நம்பியாரின் பயணம் போன்றோ அல்லது பாங்கிமூனின் பயணம் போன்றோ இல்லாது இருப்பின் வரவேற்பிற்குரியது.

ஆனால்...........

- அரசுத்தலைவருடன் சந்திப்பு
- எதிர்க் கட்சிகளுடன் சந்திப்பு
- அபிவிருத்தத் திட்டங்கள் பார்வை
- செய்தியாளர் மகாநாடு

 குழுவின் சாராம்ச அறிக்கை:

அபிவிருத்திகள் ஏற்படுகின்றன. தமிழர்கள் பொறுமை காக்க வேண்டும். பிரச்சினை தீர்வுக்கு வருகிறது. இராணுவத்தின் அர்ப்பணிப்பு நன்றாக உள்ளது. புலிகளை அழித்த பின் பல்கலைக்கழக மாணவர்களை அழிப்பது அச்சுறுத்துவதூடாக விரைவில் அபிவிருத்தி வேலைகளும் நிறைவடைந்து சிறிலாங்கா உலக அதிசயமாகும்.
 

Edited by nochchi

வந்தோரை தேசபற்றுள்ள தேசிய இயக்கம் எதிர்க்காமல் இருக்கின்றபடியால் 

 

இந்த விஜயம் அரச விஜயமாக இருக்குமா?

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.