Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்விச் செயற்பாட்டினை மேலும் குழி தோண்டிப்புதைக்க ...

Featured Replies

கடந்தகால யுத்தத்தால் வடமாகாணத்தில் இன்னமும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்காதுள்ள நிலையில் வடமாகாண ஆளுனரின் உத்தரவின்பேரில் 400 மில்லியன் ரூபாய் வன்னி மாவட்டத்தில் வலிந்து குடியேற்றப்பட்டுள்ள சிங்களப் பகுதி உள்ளிட்ட சிங்களப் பாடசாலைகளுக்கும் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் நிர்மாண மற்றும் புனரமைப்பிற்கும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்தறை அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

 

இதற்கான விலைக்கேள்விக்கான கோருதல் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் பத்திரைகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 

 

533495_308328529271066_1009585343_n.jpg

 

யுத்தத்தால் அழிவுக்குள்ளான தமிழ் மக்களின் கல்விச் செயற்பாட்டினை மேலும் குழி தோண்டிப்புதைக்க அரசினால் மேற்கொள்ளப்படும் இனவாத நடவடிக்கையே இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்; மேலும் தெரிவித்துள்ளதாவது:

 

இவ்வருட நவம்பர் மாத பிற்பகுதியில் வடமாகாண ஆளுநரால் வட மாகாண கல்வி அமைச்சில் அதிகாரிகள் முன்னிலையில் நடாத்தப்பட்டுள்ள விசேட கூட்டத்திலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இங்கு, இவ்வருட இறுதிக்குள் அமுலுக்கு வரும் வகையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 22 சிங்களப்பாடசாலைகளும் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 7 பாடசாலைகளுமாக மொத்தம் 29 சிங்களப்பாடசாலைகளும் மன்னார் கல்வி வலயத்தில் 10 முஸ்லிம் பாடசாலைகளும் முல்லைத்தீவு வலயத்தில் ஒரு பாடசாலையும் யாழ்ப்பாணத்தில் ஒரு பாடசாலையுமாக மொத்தம் 12 முஸ்லிம் பாடசாலைகள்; திருத்துவதற்கும் மற்றும் புதிய நிர்மாண வேலைகள் தொடங்கப்படுவதற்கும் தெரிவு செய்யப்பட்டு, அதற்கென ரூபா. 400 மில்லியன் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிதியில் முல்லைத்தீவில் ஒரு தமிழ்ப் பாடசாலையும் மன்னார் முள்ளிக்குளம் காயாக்குழி றோ.க.த.க பாடசாலையும் நிர்மாண வேலைகளுக்காக தெரிவு செய்யப்படடிருக்கின்றன.


அதன்படி, 29 சிங்களப் பாடசாலைகளுக்கும் ரூபா 193 மில்லியனும்; 12 முஸ்லிம் பாடசாலைகளுக்கும் ரூபா.115 மில்லியனும் தமிழ் பாடசாலைக்கு ரூபா.11 மில்லியனும றோ.க.த.க பாடசாலைக்கு ரூபா. 5 மில்லியனும் வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இவற்றுள் மூன்று மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் சிங்களப் பாடசாலை ஒன்றுக்கு ரூபா. 45 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைவிட கொக்கச்சான்குளம் தமிழ் கிராமம் பின்னர் கலாபோகஸ்வெள என பெயர்மாற்றப்பட்டு சிங்களவர்களைக் குடியேற்றி அங்குள்ள அ.சி.க பாடசாலையிற்கு 2வகுப்பறைக்கட்டடம், 2 வீதிகள், மலசலகூடம், விளையாட்டு மைதானம் ஆகிய புதிய நிர்மாண வேலைகளுக்கும் தளபாடங்கள் கொள்முதலுக்காகவும் ரூபா. 98 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளன.


அரியகுண்டான்சோலை என்னும் பூர்வீகத் தமிழ் கிராமம், ‘அதவட்டுவெள’ என சிங்களக் குடியேற்றமாக்கப்பட்டு அங்குள்ள சிங்களப்பாடசாலைக்கு பிரார்த்தனை மண்டபம் வகுப்பறைகள், அலுவலகம், (கேற்)வேலி முதலானவை நிர்மாணிப்பதற்கும் வீடுதிகள் திருத்த வேலைகளுக்குமாக ரூபா. 111இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுமுள்ளன.

 

இதனைவிட, புதிதாக முல்லைத்தீவு வலயத்துடன் இணைக்கப்பட்ட வெலிஓயா கோட்டக் கல்வி; அலுவலக திருத்த வேலைக்கும் அதன்கீழ் வரும் முல்லைத்தீவு கல்யாணிபுர வித்தியாலயத்திற்கான வேலி நிர்மாணிப்பதற்கும் ரூபா. 65 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பாடசாலையானது ஜனவரி 2013 இலிருந்து வெலிஓயா கல்விக்கோட்டத்துடன் இணைக்கப்படும்.


மேலும் வெலிஓயா கோட்டத்தில் இதுவரை சம்பத்நுவர மகாவித்தியாலய, அகதுகஸ்வெள வித்தியாலய, அதாவட்டுநுவெள வித்தியாலய (யானைவிழுந்த குளம்- பழைய தமிழ் கிராமம்), கிரிஎப்பன்வெள வித்தியாலய (பாலாமைக்குளம் – பழைய தமிழ் கிராமம்) ஜனகபுரம் வித்தியாலய ஆகிய ஐந்து சிங்களப்பாடசாலைகளே நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால், புதிதாக இக்கோட்டத்தில் கல்யாணிபுர வித்தியாலயவும் கஜபாபுர வித்தியாலயவும், பரணகம வித்தியாலயவும் இணைக்கப்படவுள்ளன. விலைக் கேள்வி கோரலில் பரணகம வித்தியாலயவிற்கு வகுப்பறைக் கட்டடம் இரண்டும் விடுதி நான்கு கொண்ட தொகுதி இரண்டும், மலசல கூடம், கிணறு, சிறுநீர் கழிப்பகம், நீர்த்தாங்கி, சுற்றுமதில், கேற் மற்றும் வேலி ஆகியன புதிதாக நிர்மாணிப்பதற்கு ரூபா. 3 கோடியே ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் (இவ் விலைக் கோரலில் அதிஉச்சத்தொகை இதுதான்)ஒதுக்கபபட்டுள்ளன.

 

வெலிஓயா கோட்டத்திற்கு மொத்தம் ரூபா.81 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாடசாலைகள் எவை எவை இக்கோட்டத்திற்குள் அடங்குகின்றன என்று யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றது. இக் கோட்டத்தில் புதிய பாடசாலை இணைப்புக்கள் இத்தகைய விலைக்கேள்விக்கான கோருதல் மூலமே வெளி உலகிற்கு தெரியவருகின்றன.


வடமாகாணத்தில் இன்னமும் 100 பாடசாலைகளுக்கு மேல் இயங்கவில்லை. பிரதான பாடசாலைக் கட்டடங்கள் உட்பட வலயப்பணிமனைக் கட்டடங்கள் பல நிர்மாணிக்கப்படவும் புனரமைக்கப்படவும் வேண்டும். உயர்மட்ட கற்றலுக்கான கட்டடங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள், நூலகம், மற்றும் செயற்பாட்டறைகள், களஞ்சியங்கள், அதிபர் பயிற்சி மையங்கள், விடுதிகள் ஆகியன கட்டப்பட வேண்டும்.

 

வவுனியா வடக்கு வலயத்தில் எட்டு பாடசாலைகள் இன்னமும் இயங்கவில்லை. மன்னார் கல்வி வலயத்திலுள்ள பாடசாலை வகுப்பறைக் கட்டடங்களில் அதிகமானவை பழையவை. இங்கு அவசரத் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மடுவலயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆறு பாடசாலைகளுக்கு ஏழு வகுப்பறைக் கட்டடங்களும் இயங்குகின்ற பாடசாலைகளில் மூன்று கட்டடங்கள் மற்றும் இருபது பாடசாலைகளுக்கு 40 ஆசிரியர் விடுதிகள், பத்து பாடசாலைகளுக்கு ஆய்வுக் கூடங்கள் , நூலகங்கள், கணனி அறைகள் முதலானவை புதிதாக நிர்மாணிக்கப்படவும் வேண்டும்.


முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இறுதியாக மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் ஆனந்தபுரம் அ.த.க.பாடசாலை முழுமையாக சேதமடைந்து பாடசாலைக் கட்டடம் இல்லாதுள்ளது. மேலும், அரசரட்னம் தமிழ் வித்தியாலயம், வேணாவில் முருகானந்தா, புதுக்குடியிருப்பு றோ.க.த.க வித்தியாலயம், அம்பலவன் பொக்கணை மகாவித்தியாலயம், மாத்தளன் அ.த.க.பா, வலயர்மடம் அ.த.க.பா,முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க.பா, முள்ளிவாய்க்கால் மேற்கு அ.த.க.பா மற்றும் சிவநகர் தமிழ் வித்தியாலயம் ஆகிய ஒன்பது பாடசாலைகள் கூரைகளில்லாமலும் கட்டடங்கள் உடைந்தும் மலசல கூடங்கள் இல்லாமலும் உள்ளன. இங்கு புதிய நிர்மாண, திருத்த வேலைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

இதனைவிட, இவ்வலயத்தில் பிரதான மற்றும் உயர்மட்ட கற்றலுக்கான கட்டடங்கள், செயற்பாட்டறைகள் புதிதாக 339 எண்ணிக்கையானவை நிர்மாணிக்கப்படவும் 45 புனரமைக்கப்படவும் வேண்டியுள்ளதாகத் திணைக்களத்தின் இவ்வாண்டிற்கான தேவைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தில் ஆறு பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றம் 12 ஆசிரியர் விடுதிகளும் அவசரமாக புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டியுமுள்ளன.


வன்னி தேர்தல் மாவட்டத்தில் மட்டுமன்றி வடமாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்கு இன்னமும் பாரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதோடு தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவும் வேண்டியுள்ள இந்த நேரத்தில், இங்குள்ள கல்வி நிர்வாகத்தினைச் சுதந்திரமாக இயங்கவிடாமலும் அவசரம் அவசரமாகப் பெருந்தொகைப் பணத்தினைச் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வாரியிறைக்கும் அரச நிர்வாகத்தின் இச்செயற்பாடானது எமது மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் எத்தகைய முக்கியத்துவமும் வழங்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டகின்றது.

இறுதியாக வட மாகாணத்தில் இடம் பெற்ற அதிபர் தரத்திற்கு உள்வாங்கும் நேர்முகத் தேர்வில் 34 பதில் அதிபர்கள் கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படாத அவலமும் இங்கு இடம் பெற்றுள்ளது.


எமது கல்வி வளர்ச்சிக்காக மனப்பூர்வமாகச் செயற்படுத்தப்பட வேண்டியன எவ்வளவோ உள்ளன. அதனை விடுத்து, ஆளுநரோ அமைச்சர்களோ எமது மக்களைப் புறந்தள்ளி விட்டு சிங்களப்பாடசாலைகளையும் இஸ்லாமிய பாடசாலைகளையும் விசேட திட்டத்தில் கவனிக்கும் இத்தகைய நிகழ்ச்சி நிரலைத் தொடர்வார்களேயானால் எமது நாட்டில் இனநல்லிணக்கம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் .
தயவு செய்து இதனை ஆவணப்படுத்துவதற்கு இதன் மூலச் செய்தி எந்த இணையத்தளத்தில் இருக்கிறது என்பதனை அறியத்தருவீர்களா ?
இதனை முறைப்படி எழுத வேண்டிய இடத்திற்கு எழுத வேண்டும் .இப்படி புகைப்பட சான்றுடன் எழுதுவது நன்று .நன்றி நிருபா 

Edited by nirubhaa

  • தொடங்கியவர்

மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் .

 
தயவு செய்து இதனை ஆவணப்படுத்துவதற்கு இதன் மூலச் செய்தி எந்த இணையத்தளத்தில் இருக்கிறது என்பதனை அறியத்தருவீர்களா ?
 
இதனை முறைப்படி எழுத வேண்டிய இடத்திற்கு எழுத வேண்டும் .இப்படி புகைப்பட சான்றுடன் எழுதுவது நன்று .நன்றி நிருபா 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/86339/Default.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.