Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிராக 4 அம்சத் திட்டம்

Featured Replies

அவுஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் நான்கு அம்சத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழித்துக்கட்டுவதற்கும், நீர்ப்பரப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்பு, உளவறியும் தகவல்கள் பகிர்வு, சட்டவிரோத ஆட்கடத்தலில் கிடைக்கும் வருமானக் குறைப்பிற்குமான நான்கு அம்சத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இன்று அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், இந்த நான்கு அம்சத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் கடற்படை அதிகாரிகளும் ஆராயவிருக்கின்றனர் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சட்டவிரோத ஆட்கடத்தல், தேசங்களுக்கு இடையிலான குற்றச்செயல்கள் என்பன சம்பந்தமான கூட்டு செயற்குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் பங்குபற்றவென செனட்டர் பொப் கார் கொழும்பில் தங்கியுள்ளார்.


'இந்தப் பேச்சுக்களின் அடிப்படையில் இலங்கை மக்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வழங்கப்படும். படகில் பயணம் செய்வதையடுத்து, உங்களுக்கு உயிராபத்து ஏற்படுவதோடு, உங்களது பணத்தையும் இழந்து இலங்கைக்கு நீங்கள் திருப்பி அனுப்பப்படுவீர்கள்' என்பதே அந்தச் செய்தியாகும் என்று செனட்டர் பொப் கார் கூறினார்.

 

'உளவறியும் தகவல்கள் பகிர்வு, கடற்படைகளுக்கிடையில் ஒத்துழைப்பு, இலங்கையை புனரமைப்பதில் உதவி என்பன சம்பந்தமாக தெளிவான நிகழ்ச்சித் திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம். இவை அனைத்தும் சட்டவிரோத ஆட்கடத்தலைக் குறைப்பதற்கு பெரிதும் உதவும்.


'சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிரான இலங்கையின் பலமான ஆதரவை நான் வரவேற்கின்றேன். ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதில் இலங்கையின் அதிகரித்த ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கின்றேன்' என்றும் அவர் கூறினார்.

 

இந்நிலையில், கீழ்க்காணும் விடயங்கள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்படும் என்றும் செனட்டர் பொப் கார் கூறினார்.


தகவல் மற்றும் உளவறியும் தகவல்கள் பகிர்வு

• சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், படகுகள் புறப்படும் நேரம் மற்றும் இடம் என்பனவற்றைக் கண்காணிக்கவும், இலங்கை கொண்டுள்ள சக்தி வளத்தை விஸ்தரிக்கவென மேலதிக உளவறியும் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை அவுஸ்திரேலியா வழங்கும்.

• இலங்கையின் உளவறியும் நிபுணத்துவத் தன்மையை மேம்படச் செய்யவென, 2013ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலிய - இலங்கை, கூட்டுப் பயிற்சித் திட்டம் அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும்.

சமுத்திர நீர்ப்பரப்பு நடவடிக்கைகள்

• இலங்கை எதிர்நோக்கும் உபகரணப் பற்றாக்குறையை இனங்கண்டு, சமுத்திர நீர்ப்பரப்பில் இலங்கை கடற்படை மேற்கொள்ளும் சீர்குலைப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்த உதவுதல்.

• கரையோரப் பிரதேச மற்றும் வான் பிரதேச கண்காணிப்பு உட்பட இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு அவுஸ்திரேலியாவில் பயிற்சி.


• இடைமறிக்கப்பட்ட மற்றும் கடற்பயணத்திற்கு தகுதிபெறாத படகுகளில் இருந்து பயணிகளை காப்பாற்றுவதில், தேடுதல் மற்றும் ஆபத்து உதவி உபகரணங்களை வழங்குதல்.


பிரசார நடவடிக்கைகள்

• சட்டவிரோத ஆட்கடத்தலின் கேந்திர ஸ்தானங்கள் எனக் கருதப்படும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் நேரடியாகவும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட விளம்பரங்கள் மூலமும் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு 700,000 டொலர் நிதியுதவி.

ஆட்கடத்தலுக்கான கோரிக்கைகள் குறைப்பு

• வறிய மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் வறுமையை ஒழித்து, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் மூலம், பணம் சம்பாதிப்பதற்கான இடம்பெயர்வைக் குறைப்பதற்கென AusAID(அவுஸ் எயிட்) எனும் அமைப்பு ஐந்து வருட காலத்தில் 45 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும்.

 

அவுஸ்திரேலியா 5,000 வீடுகளையும், 23 பாடசாலைகளையும் ஏற்கனவே நிர்மாணித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த வருடம் 65 படகுகளில் 2,900பேர் மேற்கொண்ட சட்டவிரோத இடம்பெயர் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது உட்பட, தற்போது இலங்கை அளித்து வரும் ஒத்துழைப்புக்கு செனட்டர் பொப் கார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

 

2012 ஓகஸ்ட் மாதத்தில் இருந்து சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த 700 இலங்கையர்கள் கட்டாயத்தின் அடிப்படையில் தாயகம் திரும்பியமை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54965--4-.html

  • கருத்துக்கள உறவுகள்
சட்டவிரோதமான அவுஸ்திரேலியா வருவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர்!
17 டிசம்பர் 2012
 
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு:-
 
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
 
நான்கு அம்சத் திட்டமொன்று தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
 
சட்டவிரோத ஆட்கடத்தல்களை தடுப்பது தொடர்பில் இலங்ழைக அரசாங்கததுடனும், கடற்படையினருடனும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த பொப் கார் இன்றைய தினம் தமது விஜயத்தை நிறைவு செய்து கொண்டார்.
 
இந்த விஜயம் தொடர்பில்ழ இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
நீர்ப் பரப்புக்களில் ஒத்துழைப்பு, புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், ஆட்கடத்தல் நடைபெறும் இடங்களுக்கான வசதிகளை குறைத்தல் உள்ளிட்ட நான்கு விடயங்கள் குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.
 
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போர் பணத்தை இழப்பதுடன் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் என வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார்.
 
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கையுடன் பூரண ஒத்துழைப்புடன் செயற்படத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சட்டவிரோதமான அவுஸ்திரேலியா வருவோர் 72 மணித்தியாலத்துள் நாடுகடத்தப்படுவர்!
 
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் வகையில் சட்டவிரோதமாக குடியேறுவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் எச்சரித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் தஞ்சம் கோருவோரை தாம் பொருளாதார புகலிடக் கோரிக்கையாளர்களாகவே கருதுவதாவும், அவர்கள் அவுஸ்திரேலியாவில் வருமானத்தை ஈட்டி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
 
இன்றைய செய்தியாளர் மாநாட்டின் போது அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்.
 
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி அகதி அந்தஸ்து கோருவோரை நாம் பொருளாதார தஞ்சக் கோரிக்கையாளர்களாகவே கருதுகின்றோம். அவர்கள் அவுஸ்திரேலியாவில் வருமானம் ஈட்டலாம் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்து செல்கின்றனர். 
 
மக்கள் இவ்வாறு பயணிப்பதானால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. ஏனெனில் அவுஸ்திரேலிய அரசு புதிய சட்டதிட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது சட்டவிரோதமாக குடியேறி புகலிடம் கோருவோர் 72 மணித்தியாலங்களுக்குள் நாடுகடத்தப்படுவர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 800 பேர் இவ்வாறு நடுகடத்தப்பட்டுள்ளனர்.
 
நிலைமை இவ்வாறிருக்க பணம் சம்பாதிக்கும் நோக்கில் சில கடத்தல்காரார்கள் மக்களை ஏமாற்றி, அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெறலாம், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையை வளர்த்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
 
இவ்வாறு ஏமாறும் மக்களும் பணத்தை கொடுத்து, உயிர் ஆபத்து மிக்க பாதுகாப்பற்ற பணங்களை மேற்கொள்கின்றனர். இதில் சிலர் உயிரிழந்து இருக்கினறனர்.
 
எனவே இனிவரும் காலங்களில் அவ்வாறு யாரும் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறினால் அவர்கள் 72 மணித்தியாலத்திற்குள் திருப்பியனுப்பப்படுவர் என்ற கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
 
அத்துடன் சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்களைத் தடுப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து ஒரு செயற்திட்டமொன்றையும் மேற்கொள்ளவுள்ளோம். 
 
கடல்வழி பாதுகாப்பு ஒத்துழைப்பு, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் உட்பட 4 அம்ச வேலைத்திட்டமென்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

இங்க தான் இலங்கையின் நரி மூளை வேலை செய்கின்றது....... அளவுக்கு அதிகமான ஆக்களை அனுப்பி வைத்து அதனால் Australia அரசியலில் குழப்பத்தை உண்டு பண்ணி அவர்களை இலங்கைக்கு வர செய்து பேச்சுவார்த்தை நடத்தி ஓகே உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்ணுறம் அதற்காக நீங்க எங்களுக்கு சில உதவிகள் செய்யணும் எண்டு சொல்லி மேற்கிலகை சமாதனப்படுத்த Australia வை பயன்படுத்த போகின்றது இலங்கை ஐக்கிய நாடுகள் சபையை கூட ஆஸ்திரேலியா ஊடக இலங்கை சமரசம் செய்யக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றது

இது எப்பிடி இருக்கு :(

  • தொடங்கியவர்

இங்க தான் இலங்கையின் நரி மூளை வேலை செய்கின்றது....... அளவுக்கு அதிகமான ஆக்களை அனுப்பி வைத்து அதனால் Australia அரசியலில் குழப்பத்தை உண்டு பண்ணி அவர்களை இலங்கைக்கு வர செய்து பேச்சுவார்த்தை நடத்தி ஓகே உங்களுக்கு நாங்க ஹெல்ப் பண்ணுறம் அதற்காக நீங்க எங்களுக்கு சில உதவிகள் செய்யணும் எண்டு சொல்லி மேற்கிலகை சமாதனப்படுத்த Australia வை பயன்படுத்த போகின்றது இலங்கை ஐக்கிய நாடுகள் சபையை கூட ஆஸ்திரேலியா ஊடக இலங்கை சமரசம் செய்யக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றது

இது எப்பிடி இருக்கு :(

 

 இந்தப்பருப்பு வேகாது  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.