Jump to content

ஹைனாவின் சிரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹைனாவின் சிரிப்பு    

 

எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

 

 

515069-5275-35.jpg

 

 

 

இன்று பை--பாஸ் சாலை அமைந்திருக்கும் பகுதியில் ,1960கள் வரை தேனியில், மலைகளின் அடர்ந்த வனப்பகுதியில் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் வாழ்ந்து வந்தன. இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக வனங்கள் முழுதும் அழிக்கப்படுகிறது. மலையின் இதயத்தைப் பிளந்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவிட்ட.து. தவிர காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களது இல்லங்கள் அமைப்பதற்காக வனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

 

1980களில் கூட அங்கு செல்வதற்கே சற்று அச்சம் தரும் விதமாக வனம் இருக்கும். உடும்பு ,குள்ளநரி, முயல், காட்டுப்புறா ,மைனா ஏராளமான வறண்ட நில வாழ் பாம்புகள் வாழ்ந்த பூமி, இப்போது அவைகள் ஓட ஓட விரட்டப்பட்டு , அற்றுப்போகும் நிலைமைக்குத் தள்ளிவிட்டது அரசு நிர்வாகம். 60களில் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்குச் செல்வோர் கழுதைப்புலியின் சிரிப்பொலி கேட்டு நடுங்குவர். வனத்தின் ஆக்ரோஷமான மிருகம் என அழைக்கப்படும் கழுதைப்புலி, கும்பலாக வந்து தாக்கும் தன்மை கொண்டது. சிங்கம், புலி ,யானை போன்றவை கூட இவைகளைக்கண்டு சற்று பின் வாங்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஹைனாவின் குட்டிகளை அவை கொன்று இவைகளின் ஆதிக்கத்தைக் குறைக்கும். மிகுந்த உற்சாகமும், உத்வேகமும் கொண்ட கழுதைப்புலிகள், நமது வண்டலூர் உயிரியில் பூங்காவில் மட்டும் சோர்வுடன் படுத்துக் கிடந்ததைக் கண்ட போது ஏனோ என் மனது சஞ்சலப்பட்டது. இந்தியாவில் இன்று அற்றுப்போன நிலையில் , அவை ஆப்பிரிக்க வனங்களில் சற்று அதிகளவு காணப்படுகின்றன. அதற்கடுத்து என்.ஜி.சி. அனிமல் பிளானட் சேனல்களில் பார்த்தால் தான் உண்டு!

 

ஒவ்வொரு உயிரினத்தின் நுட்பமான குணமும், அவைகளின் பிரத்யேக தகவல் தொடர்பு மூலம் வளப்படுத்தப்படுகிறது .சுரப்பிகள்மூலம் வெளிவரும் திரவத்தில் காணப்படும் பாக்டீரியாக்களின் பங்கு மிக முக்கியமானது. அறிவியல் ஆராய்ச்சிகள் அதி முக்கிய கண்டுபிடிப்பாக ஒரே இனத்தைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் தங்களுக்கு என பிரத்யேக மணம் வீசும் திரவ வீச்சைத் தங்களது குழு இணைப்பு மொழியாக கொண்டிருப்பதை முதன் முதலாக கண்டறிந்துள்ளன. குழு கலாச்சாரம் கொண்ட ஹைனாக்களும் அவ்வாறான திரவ மொழியைத் தங்கள் மூக்கினால் நுகர்வதன் மூலம் வேறுபாடுகளை உணர்ந்து கொள்கின்றன. கடந்த கால ஆய்வுகளில் பாக்டீரியாக்கள் செரிமானம் மற்றும் உடல் கூறு இயக்கவியல் தொடர்புக்கு மட்டுமே உதவுகின்றன என புரிந்து கொள்ளப்பட்டன. பின்னர் நடத்திய ஆய்வில் பாலூட்டிகள் இவ்வாறான திரவ பீய்ச்சலில் தங்களது பாலினம், வயது, இனப்பெருக்கத்திற்குத் தயாரான நிலை ,எந்த குழுவைச் சேர்ந்தவை போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ள உதவியது. இங்கு பாக்டீரியாக்களின் பங்கு டி.என்.ஏ.க்களின் பங்கு போல் புதிய திடமான வம்சாவளியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடுகளில், புல்வெளிகளில் ஹைனாக்கள் ,கொத்தாக பீய்ச்சிவிட்டு செல்கின்றன. கொச்சை வாடை கொண்ட அவை , ஆய்வக ஆய்வில் ஹைனாக்களின் குழு வாழ்வியல் கூறுகளையும் எடுத்துரைப்பதாக உள்ளன. இவ்வாறான திரவ பீய்ச்சல், தங்கள் எல்லைகளை வரையறுக்கவும், மாற்றுக் குழு உறுப்பினரை விருந்தினராக ,தங்கள் குழு உறுப்பினராக ,பல சமயங்களில் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதற்கான அழைப்பாகவும் செயல்படுகிறது.

 

2426627269_6258438df0.jpg

 

மனித காதுகளுக்கு ,ஹைனாவின் சிரிப்பு ஏதோ மனிதக் கும்பல் நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொண்டு சிரித்து மகிழ்வதாகத் தோன்றும். ஒவ்வொரு தனி ஹைனாக்கு தனி அலைவரிசையிலான சிரிப்பு உண்டு. இது அவைகளின் குணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவை நல்ல மன நிலையிலோ அல்லது ஆபத்தான பதற்றமான சூழ்நிலையிலோ, உணவு கிடைத்த மகிழ்விலோ மட்டுமே ஒலி எழுப்பும். இவ்வொலி மனித சிரிப்பொலியை ஒத்து இருக்கிறது. ஆங்கிலத்தில் கிகிள் என்று கூறப்படும் நமுட்டுச்சிரிப்பைப் போல் ஒலி எழுப்பும். இவ்வொலியை ஒவ்வொரு அரை மணிநேர இடைவெளியில் எழுப்பியவாறு இருக்கும் .ஒலி எழுப்பும் ஒவ்வொரு முறையும் ஏதோ அர்த்தம் பொதிந்தததாக இருக்கும். குழுத்தலைவனாக வெற்றி பெற்றது, சண்டித்தனம் செய்த பெண்ணோடு வலிய உடலுறவு கொண்டது, எதிர்பாராத விதமாக தோற்கடிக்கப்பட்டது என உளவியல் ரீதியான பாதிப்புகளை இவ்வொலி உணர்த்துகிறது. வயதானவை எழுப்பும் ஒலி அளவு சற்று நீண்டதாகவும் இளம் வயதினரின் ஒலி அளவு குறைந்தும் உள்ளது. இதில் ஆண், பெண் வேறுபாடும் உண்டு. நிக்கோலஸ் மாத்தீவனின் ஹைனாவின் சிரிப்பு பல உண்மைகளின் திறவு கோல் என்ற கட்டுரை சுவாரசியமான ஒன்று. இவர் கென்யாவில் 17 ஹைனாக்களோடு 5 வருட காலம் வாழ்ந்து ஆராய்ந்து கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.

 

ஹைனாக்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் .மனித குழுக்களுக்கு அருகில் வாழும போது. அவை தங்கள் வாழ்வியல் முறையை மாற்றிக் கொள்வது ஆச்சரியமளிக்கும். உதாரணமாக, எத்தி யோப்பியாவில் வாழும் தேவாடோ தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவப் பிரிவினர், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டிய 55 நாட்கள் எந்த புலால் உணவோ அல்லது பால் கலந்த உணவோ உண்ணுவதில்லை. முற்றிலும் காய் கனிகளையே தங்களின் உணவாக உண்கின்றனர். இவர்கள் அன்றாடம் அருகே உள்ள காடுகளுக்குச் சென்று அங்கு வாழும் ஹைனாக்களுக்கு மிஞ்சிய புலால் உணவுகளைப் பரிமாறுவது வழக்கம். இந்த 55 நாட்கள் அவர்கள் காய்கனிகளை மட்டுமே பரிமாறுவர். அப்போது அவையும், தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டு அவர்கள் தரும் உணவையே உண்கின்றன. அந்த 55 நாட்கள் புலால் உணவு வழங்கினாலும் அதை அவை மறுப்பது ,அவற்றின் ஜீன்களிலேயே மாற்றம் பதிவாகி விட்டதை உணர்த்துகிறது.

 

மற்றுமொரு சுவையான செய்தி, இவைகளின் உண்ணும் திறன். மிக அதிக பட்சமாகவும், ஏராளமான மாமிச உணவையும் உண்ணும். மாமிசத்தில், அழுகியது, தொற்று நோய் கண்டது போன்றவற்றையும் மாமிச எச்சங்களையும் தயங்காமல் உண்ணும் . முடியை மட்டும் கக்கும். இவற்றின் ஜீரண சக்தி அளப்பரியது. ஒரு குழுவில் ஆண் தலைமை வகித்தாலும், மூத்த பெண்ணே அதிகளவு உணவை உண்ணும்.

 

தாய் இறந்தாலும் குட்டிகளைப் பிற தாயே வளர்க்கும். குட்டிகள் பருவத்திற்கு வரும் வரை பால் ஊட்டும். அந்த சமயத்தில் வளர்ப்புத் தாய் தனது பாலுறவு பருவத்தையே தள்ளி வைக்கும்! இதுவே வாழ்க்கையைக் கற்றுத் தரும் மானசீக குருவாகச் செயல்படுகிறது. அதிக பட்சமாக 20 வருடங்கள் வாழ்கின்றன அல்லது கொல்லப்படுகின்றன.!

 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6139

Link to comment
Share on other sites

 

ஹைனாக்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் .மனித குழுக்களுக்கு அருகில் வாழும போது. அவை தங்கள் வாழ்வியல் முறையை மாற்றிக் கொள்வது ஆச்சரியமளிக்கும். உதாரணமாக, எத்தி யோப்பியாவில் வாழும் தேவாடோ தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவப் பிரிவினர், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டிய 55 நாட்கள் எந்த புலால் உணவோ அல்லது பால் கலந்த உணவோ உண்ணுவதில்லை. முற்றிலும் காய் கனிகளையே தங்களின் உணவாக உண்கின்றனர். இவர்கள் அன்றாடம் அருகே உள்ள காடுகளுக்குச் சென்று அங்கு வாழும் ஹைனாக்களுக்கு மிஞ்சிய புலால் உணவுகளைப் பரிமாறுவது வழக்கம். இந்த 55 நாட்கள் அவர்கள் காய்கனிகளை மட்டுமே பரிமாறுவர். அப்போது அவையும், தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டு அவர்கள் தரும் உணவையே உண்கின்றன. அந்த 55 நாட்கள் புலால் உணவு வழங்கினாலும் அதை அவை மறுப்பது ,அவற்றின் ஜீன்களிலேயே மாற்றம் பதிவாகி விட்டதை உணர்த்துகிறது.

 

 

 

ஆச்சரியமான தகவல்!

 

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாய்லாந்தில், விசேஷ உணவாக பாம்பு சாப்பிடுவதை வலைத்தளங்களில் பாத்திருக்கிறேன். பாம்பிறைச்சிப்பிரியர்கள் துடிக்கிறார்களோ என்னவோ?
    • ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க  தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து  தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக  இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட  ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். 
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.   வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351   ##################  ##################    ###################     மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!   இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 #################  ##################    ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.