Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு

Featured Replies

கடந்த நூற்றாண்டு வரைக்கும் முல்லைத்தீவு ஒரு பழைய நகரம். அந்த நகரத்தின் கடற்கரையை மாறி மாறி கைப்பற்றிக் கொண்ட வெள்ளைக்காரர்கள் அதனை அப்படித்தான் பதிவாக்கியிருக்கின்றனர்.


பாக்கர், ஜே.பி.லூயிஸ் போன்ற நகரும் ஆவணப்பதிவாளர்கள் அதனையே முல்லைத்தீவு பற்றிய தமது குறிப்பாக விட்டுச் சென்றிருக்கின்றனர். படகுத் துறைகளும், கோட்டைகளும், பழைய தேவாலயமும், பழைய வீதியும், பாலமும் இன்னமும் ஆதாரங்களாக மூடுண்டு கிடக்கின்றன.

 

பழைய வரலாற்றை விட இந்த நகரத்திற்கும் இடையறாத துயரக் கோடுகளாலான நினைவுத் தொடர்ச்சியொன்று உண்டு. வெள்ளைக்காரர்கள் போல நினைவுபடுத்தி வைத்துக் கொள்ள அந்த நகரம் இப்போது எதையும் வைத்திருக்கவில்லை.

 

எஞ்சி நிற்கும் ஒவ்வொரு பேரவல நினைவையும் அழித்துக் கொண்டே மீளெழுகின்றது. எதை அடைவு வைத்தாவது மேலெழுந்து வரும் முல்லைத்தீவாளர்களின் எச்சத்திலும் எழும் பண்பு அந்த நகரத்தை அடிக்கடி அலங்காரப்படுத்திக் கொள்ள வைக்கின்றது.

 

 

மூவாயிரம் பெயரோடு நிமிர்ந்திருக்கும் ஆலயம்

 

ஆனால் எந்த அலங்காரத்துக்குள்ளும் அவ்வளவு இலகுவில் எடுபடாத ஒரு ஆலயம் முல்லைத்தீவு நகரத்தில் இன்னமும் நிலைத்திருக்கின்றது. பெரும் போர் சூறை முல்லைத்தீவை அடியோடு புரட்டிய போதிலும் ஆலயத்துக்கு விக்கினங்கள் நேரவில்லை.

 

சின்னச் சின்ன காயங்களோடு, கறைபடிந்த பேரனர்த்த நிழலோடு அது நிமிர்ந்திருக்கின்றது.

 

முல்லைத்தீவை கசக்கிக் காயப்போட்ட கடல் பேரவலத் தில் காவுகொள்ளப்பட்டவர்களுகாக உருவானதே அந்த ஆலயம். இன்றும் பேரனர்த்த வாசனையோடும், சில நிமிட நேரங்களில் கடலால் அள்ளிச் செல்லப்பட்ட மூவாயிரம் உயிர்களின் பெயரோ டும் பெருமண்டபம் இப்போதும் நிறைந் திருக்கின்றது.

 

 

மரியாதையிழந்த கடலின் காலை

2004 ஆம் ஆண்டு இன்றைய நாள் காலை 8 மணியைத் தொட்டது. போரின் மறைவிலிருந்து எழுச்சி பெற்ற அந்த நகரவாசிகளுக்கு மீளெழுச்சி பெரும் சவாலாகவோ, வேதனைக்குரிய ஒன்றாகவோ இருக்கவில்லை. யாருடைய உதவியும் இன்றி பிரகாசமடைந்திருந்தனர்.

 

அந்த  வாழ்வுப் பிரகாசத்துக்கு அமைதியாகவே கிடந்த ஆழமற்ற கடல் எப்போதும் ஆறுதலாயிருந்து. யாருக்கும் கிடைக்காத கடல் செல்வத்தை அள்ளிக் கொட்டியது முல்லைத்தீவுக் கடல். மக்களும் கடவுளுக்கு நிகரான மரியாதையோடு கடலை அணுகினர்.

 

ஆனாலும் இந்தத் தினத்தில் அதற்கும் பெருங்கோபம் வந்தது. நகரவாசிகள் கர்த்தரின் பெருநாளுக்கு தயாராகிய களைப்பில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றிருந்தனர். மனைவியரினதும், பிள்ளைகளினதும், பெற்றோரினதும் குதூகல உறக்கத்தைக் குழப்ப விரும்பாத ஆண்கள் அதிகாலைப் பொழுதில் கடல்மீதேறியிருந்தனர்.

 

9 மணிக்குள் நிலம் திரும்பி தேவாலய வழிபாட்டுக்கு சென்று விடலாம் என்பது அவர்களின் வழமையான நிகழ்ச்சி நிரல். அதனை இம்முறையும் குழப்பிக்கொள்ளவில்லை.

 

 

பெருந்துயர்ப் பெருநாள்

மணற்பரப்பை வேகமாக சூடேற்றிக் கொண்டு மேலெழுந்த சூரியன், நகரவாசிகளையும் துரிதப்படுத்தியது. கொண்டாட்டங்கள், அலங்காரங்கள் வீடுகளை அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தன. கடல் வருகுது  என்ற அவல வசனங்கள் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. கடல் எப்படி வரும்? என்ற கேள்விக்கு விடை காணும் முன்பே, பனையளவு உயரத்தில் நகரை மூடியது கருமை அலை.

 

வீட்டில் இருந்த குழந்தைகள், பெண்கள் என அனைவருமே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். மரங்களிலும், பெருங் கட்டடங்களிலும் மோதியவர்கள் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.

ஆடைகளைக் கடலிடம் பறிகொடுத்த பெண்கள் தம் உயிர் காப்பாற்றப்படுவது அவமானம் எனக் கருதி மரணத்தை ஏற்றுக் கொண்டார்கள். போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வளர்ப்புப் பூமியாக இருந்த தளிர்கள் சிறுவர் இல்லம் இருந்த இடம் தெரியாது பெயர்க்கப்பட் டிருந்தது. அநேகமான குழந்தைகளின் சடலங்கள் கூட இறுதிவரை கிடைக்கவில்லை.

 

 

இறால் குளத்தின் இன்றைய பெயர் பணக்குளம்

கண் மூடி திறப்பதற்குள் 3000 உயிர்களைக் கடல் அள்ளிப் போயிருந்தது. 9 மணிக்கு வீடு திரும்பய ஆண்கள் பைத்தியமாயினர். இருந்த எல்லா வாழ்வுத் தடங்களையும் வெடித்த கடலின் கரு நீர் மூடியிருந்தது. அது வரை இறால் குளம் என அறியப்பட்டிருந்த இடம் இன்று தான் பணக் குளமாகியிருந்தது.

 

அதிக பணங்களை பதுக்கி வைத்திருந்த களஞ்சியமாகியது இறால் குளம். காயங்களோடும், கையில் கிடைத்தவற்றோடும் அந்தப் பெருநகரவாசிகள் புதுக்குடியிருப்பு, முள்ளியவளைப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

 

பாடசாலைகள் இடைப்பொழுது ஆதரவை அளித்தன. போர் ஓய்விலிருந்த போராளிகள் தாயாய்த் தாங்கினர். ஓவ்வொருவரினதும் காயத்துக்கு ஒத்தடமாயிருந்தனர். அவலம் தாங்கியவர்களின் அழுகையை நிறுத்துவதற்கு மட்டும் ஒருவாரம் பிடித்தது. இரவு முழுதும் அலைப் பயம் விழித்துக் கொண்டேயிருந்தது.

 

 

எச்சத்தில் எழுந்திருக்கின்றது இந்தக் கேள்வி

"இனி கடலுக்கே போகமாட்டம்" "நம்பியிருந்த கடல் எங்கள அழிச்சிப் போட்டுது" போன்ற வார்த்தைகள் அப்போது பிரபலமாயிருந்தன. சரியாக ஒரு மாதம் தான் இந்த வார்த்தைகள் செல்லுபடியாகக் கூடியதாயிருந்தன. ஒரு மாதத்துக்குள் கடல் மீதான கோபம் காலாவதியாகியது.

 

2005 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி முல்லைத்தீவு நகரத்தில் நடந்தது எச்சத்திலும் எழுகை. அத்தோடு பழையபடி கடலைநோக்கி மக்கள் பயணப்படத் தொடங்கினார்கள். பேரலைக்கு முதல் காலத்தில் கடலேறிய பலர் இருக்கவில்லைத் தான்.

 

ஆனால் அவர்களிடம் இருந்த நம்பிக்கை கடலை வெல்லும் துணிவை வாரியிறைத்துக் கொண்டிருந்தது. ஒருவருடத்தில் முல்லைத்தீவு மறுபடியும் நகரானது. மீண்டும் செழிப்பு. மீண்டும் வசந்தகாலம்.

 

ஆனால் நகரவாசிகள் மட்டும் குறைந்திருந்தார்கள். அதுவும் நிலைத்திருக்கவில்லை. அடித்தது பெரும்போர். இதுவரை சந்தித்திராத வழிகளில் எல்லாம் துயரம் அந்த நகரத்தை தாக்கியது. அந்தக் கடலையண்டிய கிராமத்தில் ஒரு பேரினத்தின் வாழ்விருப்பையே மூர்ச்சையாக்கியது அந்தப் போர்.

 

முல்லைத்தீவும் வழமைபோல அடையாளம் இழந்தது. சீர்குலைந்தது. அந்த நகரத்தின் தன்னியல்பாகிய எச்சத்திலும் எழும் திறன், மறுபடியும் கட்டடங்களை மட்டும் வளர்த்துக்கொண்டிருக்கின்றது. நகரவாசிகள் வளர்கின்றார்களா? என்பதற்கான விடையைத் தான் அந்த நகரமும் ஏக்கத்தோடு தேடிக் கொண்டிருக்கின்றது.

 

ஏனெனில் இப்போது எதுவும் சொந்தமானதாக இல்லை. கடல் கூட பலரின் தடங்களை நாள் தோறும் காண்கின்றது. போகப் போக கடலும் மரியாதையிழந்து போவதை உணர்கின்றது.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5923444026503757

Edited by akootha

  • தொடங்கியவர்

Tamil_News_large_613706.jpg

541898_364032747025628_2029566089_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.