Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி மாநாட்டில் ஜெயலலிதா வெளியேற்றம் ஏன்? பகீர் பின்னணி.

Featured Replies

இந்தியாவின் அத்தனை முதல்வர்களையும் ஒரு நொடியில் அசரடித்து விட்டார் ஜெயலலிதா. ஏக இந்தியாவை ஆளும் பிரதமரும் அனைத்து மாநிலங் களிலும் கோலோச்சும் முதல்வர்களும் கூடி இருக் கும் அரங்கத்தில் இருந்து, தனி மனுஷியாய் அவர் வெளியேறியபோது, 'தி ரிபெல் லேடி’ என்று சில முதல்வர்கள் முணுமுணுத்தார்களாம்

 

''27-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா, தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வரை, தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி நரசிம்மன், நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர். பின், தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர், தமிழகக் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைஅடுத்து, டெல்லி விஞ்ஞான் பவனுக்கு வந்த முதல்வரை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத், வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார், கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வரவேற்று இருக்கிறார்கள். உள்ளே செல்லும்போது, சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, திட்டக் குழுத் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோரும் பார்த்துள்ளனர். அனைவரிடமும் நிதானமாகப் பேசி இருக்கிறார். தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வருடன் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சாரங்கி, உள்துறை முதன்மைச் செயலாளர் ராஜகோபால் ஆகியோரும் கலந்துகொண்டனர். காவிரி, மின்வெட்டு, நிதி ஒதுக்கீடு, மீனவர் பிரச்னை என்று பல்வேறு விஷயங்களில் மத்திய அரசைக் கண்டித்து ஜெயலலலிதா பேசினார். சுமார் அரை மணி நேரம் பேசுவதற்கான உரையை அவர் தயாரித்து எடுத்துச் சென்று இருந்தார். மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே பேசிய நிலையில், திடீரென மணி அடித்து விட்டனர். 'நேரம் ஆகிவிட்டது. பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்’ என்ற அர்த்தத்தில் மணி அடிக்கப்பட்டதாம். உடனே, முகம் சிவக்க ஆரம்பித்து விட்டார் முதல்வர். 'ஆலோசனைக் கூட்டம் என்று சொல்லிவிட்டு பேசவிடாமல் அவமானப்படுத்துகிறீர்களா?’ என்றபடி எழுந்து நிற்க ஆரம்பித்தார். உடனடியாக யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் நடக்க ஆரம்பித்தார். மேடையில் இருந்த பிரதமர் உள்ளிட்டோர் அவர் செயலை உணர்வதற்கு முன்னதாகவே வெளியே வந்து விட்டார் ஜெயலலிதா!'

தமிழ்நாடு ஹவுஸுக்கு அவர் பத்திரிகையாளர்​களை அழைத்துச் சொன்ன பிறகுதான் அனைவருக்​கும் முழு விஷயமும் தெரியவந்தது. 'முன் எப்போதும் இல்லாத நடைமுறையை மத்திய அரசு இப்போது கையாள்கிறது. வழக்கம்போல் 30 நிமிடங்கள் பேசுவதற்கு அனுமதி வழங்காமல் திடீரென்று 10 நிமிடங்களில் உரையை நிறுத்திக்கொள்ளுமாறு கூறியதால், வெளிநடப்பு செய்தேன். தமிழகத்தின் கருத்தைச் சொல்ல 10 நிமிடங்கள் போதாது. கருத்தைச் சொல்வதற்குப் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை என்றால் ஏன் அழைக்க வேண்டும்? என்னை மட்டுமல்லாமல் தமிழக மக்களையே அவமானப்படுத்தி விட்டனர்’ என்று கொந்தளித்தார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வெளி​நடப்பு செய்தார். கடந்த ஆண்டு நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலும் இவ்வாறு மோடி வெளிநடப்பு செய்தாராம். பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் போதவில்லை என்றுதான் அவரும் பேட்டி அளித்துள்ளார். தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தையே இவரது இந்த நடவடிக்கை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்குப் பிறகும் கூட்டம் நிறுத்தப்படாமல் நடந்தது என்றாலும் ஏதோ ஒருவித இறுக்கம் நிலவியது.'

 

டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா கோபக்கனலைக் காட்டியது ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்று என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் அப்படி நடந்து​ கொண்டார் என்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் வி.ஐ.பி-கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா முதல்வர் ஆனது முதல் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கொஞ்சம்கூட இயைந்து போக வில்லை. தமிழக ஆட்சியை மத்திய அரசு எப்படி எல்லாம் உதாசீனப்படுத்துகிறது என்பதைப் பட்டி யலிட்டுப் படிக்க நினைத்தார் ஜெயலலிதா. அதற்கு டெல்லி மாநாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த நினைத்து, நிறையவே 'ஹோம்வொர்க்' செய் திருந்தார். தமிழ்நாட்டுக்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ஆனால், நிதி ஒதுக்காமல் விட்ட திட்டங்களில் எவையெல்லாம் பெண்டிங் என்று லிஸ்ட் எடுத்தார். தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக மண்ணெண்ணெய் கேட்கப்பட்டது. ஆனால், வழக்கமாக அனுப்பும் அளவையும் குறைத்து விட்டனர். கேபிள் டி.வி-யில் டிஜிட்டல் அனுமதியை தமிழக அரசு பலமுறை கேட்டும் தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பதும் ஒரு முக்கிய பாயின்ட். இரண்டு முறை, சம்பந்தப்பட்ட துறை மந்திரியையும், ஒரு முறை பிரதமரையும் அ.தி.மு.க. எம்.பி-க்கள் 14 பேரும் நேரில் சந்தித்துப் பேசியும் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. டெல்லியில் இந்த எம்.பி-க்கள் மக்கள் பிரச்னைக்காக எங்கு சென்றாலும் மதிக்காமல் அலைக்கழிப்பதை நொந்துபோய் முதல்வருக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி பல்வேறு விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்திருந்தார். மேலும், ஆந்திராவில் உற்பத்தியாகும் அனல் மின்சாரம், முழுமையாக அந்த மாநிலத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேமாதிரி தமிழகத்துக்கு உடனே கூடுதல் மின்சாரத்தை மத்திய அரசு வழங்குவதில் பிரச் னை இருப்பதால், குறைந்த பட்சம் தமிழத்தில் உற் பத்தியாகும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் தமிழகமே முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தால்கூட போதும் என்றும் பேசுவதாக இருந்தாராம். முதல்நாள் இரவு வரை பேச்சில் நிறைய மாற்றமும் சேர்க்கையும் நடந்து இருக்கிறது.''

தமிழக முதல்வர் டெல்லியில் மிகப்பெரிய போருக்குத் தயாராகிறார் என்பதை சென்னையில் உள்ள மத்திய உளவுத் துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து விட்டனர். பாகிஸ்தானுக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை இந்தியா விற்க முடிவுசெய்து, அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தீவிரமாக செய்து  வருவதாக ஒரு தகவல். இதை உறுதிப்படுத்த தமிழக அதிகாரிகள் படாதபாடுபட்டனர். 'பாகிஸ்தானுக்கே மின்சாரம் தரும் மத்திய அரசு, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்துக்கு மறுப்பது ஏன்?' என்ற வகையில் ஜெயலலிதா பேசுவார் என்றெல்லாம் எதிர்பார்த்தனர். இதுதொடர்பாக, டெல்லி சென்ற அதிகாரிகளுக்கும் போயஸ் கார்டனுக்கும் நடந்த தகவல் பரிமாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்தனர். எந்தெந்த சப்ஜெக்ட்டில் அவர் பேசப்போகிறார் என்பது உட்பட பல விஷயங்கள் மத்திய அரசுக்குத் தெரிந்து விட்டது. இதற்கிடையில், 30 மாநில முதல்வர்களும் பேசுவதற்கு ஏதுவாக மாநாட்டை இரண்டு நாட்கள் ஆக்கலாமா? என்று பிரதமர் அலுவலகத்தில் முதலில் யோசித்தனர். ஆனால், ஜெயலலிதா போன்ற சில எதிர்க் கட்சி முதல்வர்கள் இந்த மாநாட்டில் மத்திய அர சின் மீது குற்றச்சாட்டுகளை வீசப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதும், அதைத் தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியதாம். ஒரு வருக்கு 10 நிமிடங்கள்தான் என்று அதன் பிறகுதான் நேரம் ஒதுக்கினார்களாம்.'

 

''பொதுவாக 10 நிமிடங்கள் என்று சொல்லப்பட்டா​லும், நிறைய நேரம் பேச அனுமதிப்பது உண்டு. அதுமாதிரித்தான் இந்த முறையும் நடக்கும் என்று முதல்வர்கள் நினைத்திருந்தனர். ஆனால், 10 நிமிடங்கள் ஆனதும் மணியை அடித்து இடையூறு செய்யவும்தான் ஜெயலலிதா டென்ஷன் ஆகிவிட் டார். மாநாட்டில் இருந்து வெளியேறி தமிழ்நாடு இல்லத்துக்கு வந்த ஜெயலலிதா, மாநாட்டில் பேசாத அனைத்து விஷயங்களையும் அறிக்கை வடிவில் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார். 'கடந்த முறை நடந்த மாநாட்டில் அசாம் முதல்வர் 35 நிமிடங்களுக்கு மேல் பேசினார். அப்போது மணி அடிக்காதவர்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்து கொண்டனர். என் பேச்சை நிறுத்துமாறு கூறி அவமானப்படுத்தி விட்டனர்’ என்றும் ஜெயலலிதா சொன்னாராம். மாநாட்டை முடித்துவிட்டு, மாலை நேரத்தில்தான் முதல்வர் விமான நிலையம் வருவார் என்று காத்திருந்த தமிழக அதிகாரிகளுக்கு மதியம் சுமார் 12 மணிக்கே திரும்பியதைப் பார்த்து அதிர்ச்சி. ஸ்பெஷல் ஃப்ளைட்டில் போனதால் நினைத்த நேரத்தில் திரும்ப முடிந்ததாம்

 

ஜூனியர் விகடன்.

 

 

டெல்லி மாநாட்டிலிருந்து வெளியேறும் ஜெயலலிதாவின் படம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.