Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கண்ணுக்குள் விரல்விட்டாட்டும் அமெரிக்க காங்கிரஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் முடிவடைய இன்னும் இரண்டே தினங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்க வரவு செலவு திட்டம் முடிவில்லாமல் இழுபறி நிலையில் இருக்கிறது.இந்நாட்களில் அமைதியாக இருக்கும் வெள்ளைமாளிகை 2013ம் ஆண்டு பிறக்கும் போது இருட்டுக்குள் பிறக்கப் போகிறதா என்று தெரியாமல் எல்லோரும் வெள்ளைமாளிகையை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 

அதிபர் ஒபாமா கடந்த தேர்தலில் தான் ஜனாதிபதியான என்ன என்ன செய்வேன் என்று சொன்னாரோ அதை எல்லாம் அமுல் படுத்த முனைகிறார்.அமெரிக்க முறைப்படி எந்த ஒரு சட்டம் என்றாலும் செனட்சபை காங்கிரஸ் சபையால் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

இப்போது செனட்சபையில் ஜனனாயக கட்சி உறுப்பினர்கள்(53-47) பெரும்பான்மையானவர்களாகவும் காங்கிரஸ் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் (234-201)பெரும்பான்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.

 

2013ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை FISCAL CLIFF என்று அழைக்கிறார்கள்.இதில் முக்கிமாக ஒபாமா கேட்பது 250000 டாலருக்கு மேல் எடுப்பவர்கள் தற்போது 37% கட்டிவரும் வரியை 39 வீதம் ஆக்க வேண்டும் என்பது.ஒபாமாவின் வேண்டுகோளை செனட்சபையில் இலகுவாக நிறைவேற்றிவிட்டார்கள்.ஆனால் காங்கிரஸ் சபையில் இதை விவாதிப்பதற்கே தயாரில்லை என்று இருந்து இப்போது ஒரு மில்லியனுக்கு  மேல் உழைப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கூட்டலாம் என்ற நிலையில் இழுபறிப்படுகிறார்கள்.

 

அமெரிக்காவில் பணக்காரர் தர வரிசையில் உள்ளவர்களில் கூடுதலானவர்கள் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால் இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புக் கொடுக்க குடியரசுக் கட்சிக்காரர் தயங்குகின்றனர்.அத்துடன் தேர்தலில் வாக்குறிதிகளை வழங்கும் போது எம்மைக்கேட்டா வழங்கினீர்கள்.எமது தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது(காங்கிரசுக்கான தேர்தல் 2014)அப்போது பார்த்துக் கொள்வோம் என்று இருக்கிறார்கள்.

 

இன்னும் இரண்டே தினங்கள் இருக்கும் நிலையில் 2013ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால் மத்திய அரசாங்கம் இயங்க முடியாமல் இருக்கும்.மத்திய அரசால் கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகள் அத்தனையும் உடன் நிற்பாட்ட வேண்டும்.வேலையில்லாமல் அரச உதவித் தொகையை பெற்றுக் கொண்டிருக்கும் 2மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உதவித் தொகையும் கிடையாது.சிகிச்சைகள் பெற்றுக் கொண்டிருந்த பலர் இப்படியே இருக்கவோ இறக்கவோ நேரிடலாம்.இப்படி பலபல பிரச்சனைகளை அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்கா எதிர் நோக்கியுள்ளது.

 

மல்லையன் அகோதா போன்றவர்கள் தொழில்களுடன் இநத பிரச்சசன சம்பந்தப்படடுள்ளதால் அவரகள் கூடுதலான விடயங்களை எழுதலாம்.

Edited by eelapirean

2013ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை FISCAL CLIFF என்று அழைக்கிறார்கள்.இதில் முக்கிமாக ஒபாமா கேட்பது 250000 டாலருக்கு மேல் எடுப்பவர்கள் தற்போது 37% கட்டிவரும் வரியை 39 வீதம் ஆக்க வேண்டும் என்பது.ஒபாமாவின் வேண்டுகோளை செனட்சபையில் இலகுவாக நிறைவேற்றிவிட்டார்கள்.ஆனால் காங்கிரஸ் சபையில் இதை விவாதிப்பதற்கே தயாரில்லை என்று இருந்து இப்போது ஒரு மில்லியனுக்கு  மேல் உழைப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கூட்டலாம் என்ற நிலையில் இழுபறிப்படுகிறார்கள்.

இன்றைய அமெரிக்க பொருளாதாரத்தை வெருட்டுவது "பொருளாதார பள்ளத்தாக்கு" - Fiscal Cliff

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.