மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போரின் தற்போதைய நிலை கு
வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது எண்ணெய் துறைமுக செயல்பாடுகளை முற்றாக நிறுத்தியுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு போரினால் உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் ரஷ்யாவிற்கு பெரும் நிதி நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் (Chris Weafer) கிறிஸ் வீஃபர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாய் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தடைகளால் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட ரஷ்ய எண்ணெய், தற்போது உலகச் சந்தையில் நிலவும் அதிக விலைக்கு ஆசிய நாடுகளால் போட்டி போட்டுக்கொண்டு வாங்கப்படுகிறது.
ரஷ்யா மட்டுமல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியாளர்களும் இந்த விலை உயர்வால் லாபமடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களைப் பாதுகாப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 200 அமெரிக்க டொலரை எட்டும் என ஈரான் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடைமறித்து அழித்துள்ளன.
இதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் , ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் இவ்வாறான ஆக்கிரமிப்புகள் நடக்காது என்பதற்கான சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என மூன்று முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருங்கிணைந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேலிய இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
https://athavannews.com/2026/1468173
By
தமிழ் சிறி ·
Archived
This topic is now archived and is closed to further replies.